எவ்வளவு அடிப்பிடித்தாலும் கவலை வேண்டாம்.. இதை மட்டும் பண்ணுங்க.. பாத்திரம் புதுசு மாதிரி ஆகிடும்!
சென்னை: என்ன தான் சமையல் என்பது ஈஸியான வேலையாக இருந்தாலும், அதன் பிறகு பாத்திரங்களைக் கழுவுவது ரொம்பவே கடினமான விஷயம். அதிலும் அடிப்பிடித்த பாத்திரங்களைக் கழுவுவதற்குள் ஒரு வழியாகிவிடுவோம். ஆனால், இந்த 5 மேட்டர்களை பின்பற்றினால் எவ்வளவு அழுக்கு இருந்தாலும் கூட ஈஸியாக பறந்துவிடும்.
அனைவருக்கும் இங்கே சமைப்பதும் சாப்பிடுவதும் பிடிக்கும். ஆனால், அதன் பிறகு பாத்திரங்கள் கழுவுவது யாருக்கும் பிடிக்காது. அதிலும் அடிப்பிடித்த பாத்திரங்கள் என்றால் அதற்கே பெரு முயற்சி எடுக்க வேண்டி இருக்கும்.

ஆனால், ஒரு பாத்திரம் எவ்வளவு அடிப்பிடித்து இருந்தாலும் கூட அதை ஈஸியாக கழுவு சில டிப்ஸ்கள் இருக்கிறது. அதை நாம் பின்பற்றினால் ரொம்பவே ஈஸியாக பாத்திரங்களைச் சுத்தப்படுத்தலாம்..
பேக்கிங் சோடா
முதலாவது பேக்கிங் சோடா.. பேங்கிங் சோடாவை கேக் செய்ய மட்டுமின்றி.. அடிப்பிடித்த பாத்திரங்களைச் சுத்தம் செய்யக் கூட பயன்படுத்தலாம். அழுக்கு ஓவராக இருக்கும் எஃகு பாத்திரங்களை ஈஸியாக சுத்தம் செய்ய உதவுகிறது. அடிப்பிடித்து உள்ள சமையல் பாத்திரங்களில் பேக்கிங் சோடாவின் பேஸ்ட்டை போட்டு ஓவர் நைட் அப்படியே விட்டுவிடுங்கள்.. இது கறைகளை மென்மையாக்கும். அதன் பிறகு லேசாகச் சோப்பு போட்டுத் தேய்த்தாலே அழுக்கு பறந்துவிடும்.
கோலா
அடுத்து இன்னொரு வினோதமான முறை இருக்கிறது... அது உங்கள் பிரிட்ஜில் இருக்கும் கோலாவை வைத்து சுத்தம் செய்வது.! அனைத்து விதமான கோலாக்களும் ஆசிட் தன்மை நிறைந்த ஒன்றாகவே இருக்கிறது. எனவே, அதை வைத்து எளிதாக ஸ்டீல் கறைகளைச் சுத்தம் செய்யலாம்.. அழுக்கு இருக்கும் பாத்திரங்களில் சிறிது கோலாவை ஊற்றி, அதை மிக லேசாகச் சூடு செய்யுங்கள். பிறகு அப்படியே ஆறவிடவும். அதன் பிறகு அதை ஒரு ஸ்க்ரப்பரை வைத்து சுத்தம் செய்தால் கறை மிகச் சுலபமாகப் போகும்.
எலுமிச்சை மற்றும் உப்பு
அதேபோல எலுமிச்சை மற்றும் உப்பு கூட பயன்படுத்தலாம். இது பல ஆண்டுகளாக அழுகை சுத்தம் செய்யப் பயன்படும் ஒரு முறையாகும். எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து அழுக்கு உள்ள ஸ்டீல் பாத்திரங்களைத் தேய்க்கவும். சுமார் 15 நிமிடங்கள் அப்படியே வைத்துவிடுங்கள்.. கடைசியில் மீண்டும் கொஞ்சம் உப்பைப் போட்டுத் தேய்த்தால் எவ்வளவு அழுக்காக இருந்தாலும் ஈஸியாக வந்துவிடும்.
தக்காளி சாஸ்:
அடுத்து தக்காளி சாஸ்.. உங்களுக்குப் பிடித்த தக்காளி சாஸை வைத்துக் கொண்டே நீங்கள் அடிபடித்த பாத்திரங்களையும் கூட சுத்தம் செய்யலாம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.. ஆனால், அது உண்மை தான். தக்காளி சாஸ் அடிப்படையாகவே அமிலத் தன்மை கொண்டது. எனவே, அரைத்த தக்காளி அல்லது தக்காளி சாஸை அடிப்பிடித்த பகுதியில் தேய்க்கவும். பிறகு லேசாகத் தண்ணீரைச் சேர்த்துச் சூடு செய்யவும். பிறகு அதை அப்படியே விட்டுவிட்டு, சிறிது நேரம் கழித்துச் சூடு செய்தால் பாத்திரங்கள் பளபளப்பாக மாறும்.
வினிகர்
மேலும், அடிப்பிடித்த பாத்திரங்களைச் சுத்தம் செய்ய நீங்கள் வினிகரை கூட பயன்படுத்தலாம். முன்பு கூறிய பொருட்களைப் போலவே இதிலும் ஆசிட் தன்மை இருக்கிறது. எனவே, வினிகரை யூஸ் செய்து கழுவினாலும் கூட அழுக்கு ஈஸியாக போகும். அடிப்பிடித்த பாத்திரத்தில் வினிகரை ஊற்றி, அதைக் கொஞ்ச நேரம் அப்படியே விட்டுவிடுங்கள். பிறகு எடுத்து லேசாக பிரஷ் செய்தால் அழுக்கு பறந்துவிடும்.
இது தவிர லேசான கறை என்றால் சூடு தண்ணீர், தயிர் ஆகியவற்றைக் கூட பயன்படுத்தலாம். இதன் மூலம் பாத்திரங்களை எளிதாகச் சுத்தப்படுத்த முடியும். சமைப்பது மட்டுமின்றி அதைக் கழுவுவதும் ஈஸியாக இருக்கும்.!
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications