அப்பல்லோவில் ஜெயலலிதாவிற்கு கொடுக்கப்பட்ட ஐஸ்கிரீம்! உணவால் மோசமானது உடல்நிலை- ஆறுமுகசாமி ஆணையம்
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தின் அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில் ஜெயலலிதா என்னென்ன உணவு வகைகளை சாப்பிட்டார் என்ற விவரமும் இடம் பெற்றுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக தொடர்ந்து சந்தேகங்கள் எழுப்பப்பட்டது.
இதனால் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு
இந்த நிலையில், தமிழக சட்டமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரின் 2-வது நாளான இன்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் சசிகலாவை குற்றம் செய்தவராக கருதி விசாரிக்க வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. சசிகலாவை குற்றம் சாற்றுவதை தவிர வேறு வழியே இல்லை. ஜெயலலிதா மயக்கம் அடைந்த பின் நடந்தது எல்லாம் ரகசியமாக உள்ளது.

இட்லி, வெண்பொங்கல், தக்காளி சாதம்
சசிகலா உட்பட 4 பேரை குற்றம் செய்தவர்களாக கருதி விசாரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பரபரப்பு தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அந்த வகையில், ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் வழங்கப்பட்ட உணவு பட்டியல் குறித்த தகவலும் விசாரணை ஆணையத்தில் இடம் பெற்றுள்ளது. அதன்படி, ஜெயலலிதாவுக்கு இட்லி, வெண்பொங்கல், தக்காளி சாதம், சாம்பார் சாதம் மிகச்சிறிய அளவில் அரிசி உணவு, மாதுளை முத்துக்கள் தூவிய தயிர்சாதம், ஐஸ்கீரிம், திராட்சை பழங்கள் வழங்கப்பட்டது.

வெண்ணிலா ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம்
உப்புமா, கிச்சடி, உருளைக்கிழங்கு சிப்ஸ், பொரியல், வெண்ணெயில் தோய்த்த பிரெட் டோஸ்ட், சர்க்கரையில்லாத மில்க் ஷேக், பிஸ்தா ஐஸ்கிரீம், வெண்ணிலா ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம், ஓட்ஸ், காபி, சூப், இளநீர், கஸ்டர்ட் ஆப்பிள், திராட்சை, மலை வாழைப்பழம், மாம்பழம், அன்னாச்சி பழம், தக்காளி பழம், உருளைக்கிழங்கு, அல்வா உள்ளிட்ட இனிப்பு பொருட்கள், பால் பொருட்கள் போன்றவை உணவு, ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரைப்படியும், ஜெயலலிதாவின் விருப்பப்படியும் வெவ்வேறு நாட்களில் வழங்கப்பட்டுள்ளது.

கட்டுப்படுத்தியிருக்க வேண்டும்
இனிப்பு பொருட்கள், பால் பொருட்கள் போன்ற உணவுகள் ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரைப்படியும், ஜெயலலிதாவின் விருப்பப்படியும் வெவ்வேறு நாட்களில் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் பதிவு செய்துள்ள கருத்தில், ''ஜெயலலிதா உடல்நிலையை கருத்தில் கொண்டு சர்க்கரை உணவுகள் உட்கொள்வதை கட்டுப்படுத்தியிருக்க வேண்டும்.

விதிமுறைகளுக்கு உட்பட்டு..
ஆனால், எந்த வித கட்டுப்பாடும் இல்லாமல் மேற்கண்ட உணவுகள் வழங்கப்பட்டுள்ளன. உணவு மற்றும் ஊட்டச்சத்து நிபுணரால் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு உணவு வழங்கப்படாததால் ஜெயலலிதாவின் உடல்நிலை வேகமாக மோசமானது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
தமாகா வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்த ஜிகே வாசன்! தாமரை சின்னம்.. 5 தொகுதிகளில் கடும் சவால்! -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
அன்று ஸ்டாலின்.. இன்று அமைச்சர் சக்கரபாணியை எதிர்த்து.. ஒட்டன்சத்திரத்தில் களமிறங்கும் விடியல் சேகர் -
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு? -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு












Click it and Unblock the Notifications