ரெடியா இருங்க.. அதிமுக ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு எடப்பாடி போட்ட ஆர்டர்! பேசியது என்ன?
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வந்தாலும், அதை சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மதுரையில் நடைபெற்ற பொன்விழா எழுச்சி மாநாட்டின் மாநாட்டுக் குழுவினரும் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில், மதுரை மாநாட்டு தீர்மான விளக்க பொதுக்கூட்டங்களை நடத்துவது குறித்தும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

மேலும், வரும் 18ஆம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த மசோதா தாக்கல் செய்யப்பட்டால், அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி அமைப்பு ரீதியாக கட்சியை வலுப்படுத்துவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இந்தக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, மதுரை மாநாட்டுக்குப் பின்னர், அதிமுக எழுச்சி பெற்றுள்ளதாகவும், தற்போது அதிமுக ஒரே தலைமையின் கீழ் வந்துவிட்டது. நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்ந்து சட்டமன்ற தேர்தல் வந்தாலும், அதைச் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும் என்று பேசியதாக கூறப்படுகிறது.
இந்த கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதால், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் உடன் சட்டமன்றத் தேர்தலும் தமிழகத்தில் வருவதற்கான மேகங்கள்தான் கூடியிருக்கிறது. அப்படி தேர்தல் வரும் பட்சத்தில், அதை எதிர்கொள்ள தயாராக வேண்டும். திமுக ஆட்சியில் மக்கள் அனுபவிக்கும் வேதனைகளை அனைவர் மத்தியிலும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டது.
மின்சார கட்டணம் 'ஷாக்' அடிக்கிறது. வீட்டு வரி, சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆளுங்கட்சியினரின் அராஜகம், உள்ளாட்சி பிரதிநிதிகளால் ஏற்படும் அடாவடிகளை மக்களிடத்தில் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
திமுக ஆட்சியில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு எல்லாம் மூடுவிழா நடத்தப்படுகிறது. அம்மா உணவகங்கள் திட்டத்துக்கு மூடுவிழா நடத்த முயற்சி நடந்து வருகிறது. மகளிருக்கு ஸ்கூட்டி வழங்கும் திட்டம் காணாமல் போய்விட்டது. அதேபோல், தாலிக்கு தங்கம் திட்டத்தையும் செயல்படுத்துவது இல்லை. அதைப் பற்றி எடுத்துரைப்போம்.
பல்வேறு பிரச்சனைகளால் தமிழ்நாடு கொளுந்துவிட்டு எரிகிறது. இப்படியான சூழலில் மக்களை திசைதிருப்பும் வேலையில் திமுக அரசு சனாதனம் பற்றி பேசி வருகிறது. திமுக அரசின் வேதனைகளையும், முந்தைய அதிமுக ஆட்சியின் சாதனைகளையும் மக்கள் மத்தியில் எடுத்துரைக்கும் பணிகளில் ஈடுபடுவோம் என ஆலோசிக்கப்பட்டது.
2021ஆம் ஆண்டு நாங்கள் மட்டும் ஆட்சிக்கு வந்திருந்தால் திமுகவை நிரந்தரமாக வனவாசத்திற்கு அனுப்பி இருப்போம். ஒரே நாடு ஒரே தேர்தல் வேண்டும். தேர்தலை எதிர்கொள்ள எந்த சூழலிலும் அதிமுக தயாராக உள்ளது. திமுகவினரை மக்கள் விரட்டி அடிக்கும் நிலைதான் உள்ளது. சனாதனம் என்றால் என்னவென்றே தெரியாமல் உதயநிதி பேசுகிறார்" என்று தெரிவித்தார்.
-
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
அவிநாசி, ஊட்டி, நாகர்கோவில்! அதிமுக கோட்டைகளை பாஜகவுக்கு தாரை வார்ப்பதா? கொந்தளிக்கும் நிர்வாகிகள் -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி! -
பாஜக தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி.. மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன்? -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications