இனி ஜெயில் இல்லை; வீட்டுச் சிறை! வாட்ஸ் அப், வீடியோ மூலம் புகார்! 60 வயதா? உடனே சலுகை!
சென்னை: நாடு முழுவதும் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் அதில் உள்ள சாதகமான அம்சங்கள் என்ன என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
நாடு முழுவதும் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளதை தொடர்ந்து. ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்குக் கடிதம் எழுதியிருந்தார். ஆனால், கடும் எதிர்ப்பையும் மீறி இந்தப் புதிய சட்டங்கள் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளன. தமிழ்நாட்டில் இச்சட்டங்கள் நடைமுறைக்கு வந்த முதல் நாளிலேயே 100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட 3 குற்றவியல் சட்டங்களின் பெயரை மத்திய அரசு பாரதிய சக்ஷயா சநிதா, பாரதிய நகாரிக் சுரக்ஷா சநிதா, பாரதிய நியாய சநிதா 2023 என மாற்றம் செய்துள்ளது. இந்தப் பெயர்கள் அனைவருக்கும் புரியும்படி இல்லை என்று கூறி ஒரு தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த மூன்று சட்டங்களில் செய்யப்பட்ட முக்கியமான திருத்தங்கள் என்ன? அதில் உள்ள சாதகமான அம்சங்கள் என்ன என்பது பற்றி ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி சித்தண்ணன் சில விளக்கங்களை அளித்துள்ளார். அவர் இது குறித்துப் பேசும் போது, "இந்தச் சட்டத்திருத்தம் இந்தியாவில் உள்ள 140 மக்களைப் பாதிக்கின்ற விசயம். இந்தியத் தண்டனைச் சட்டம், இந்திய நடைமுறை சட்டம், இந்தியன் எவிடென்ஸ் ஆக்ட் என்று 1860 மற்றும் 1872 ஆகிய காலகட்டங்களில் ஆங்கிலேய அரசால் கொண்டுவரப்பட்ட சட்டம் இவை.
ஏறக்குறைய 160 ஆண்டுகள் முன்பாக நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட சட்டம். பல்வேறு காலகட்டங்களில் இந்தச் சட்டங்களில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இப்போது இந்தச் சட்டங்களை நாங்கள் புனரமைப்பு செய்கிறோம். இது காலனிய அரசின் அடையாளமாக இச்சட்டங்கள் உள்ளன. ஆகவே, அவற்றை இந்தியச் சுதேசி சட்டங்களாக மாற்றுகிறோம் எனச் சொல்லி பெயரை மாற்றி இருக்கிறது மத்திய அரசு.
முன்பே அவர் இந்தச் சட்டங்களில் நிறையக் கட்டமைப்பு திருத்தங்களைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால்தான் சரியாக இருக்கும் என்று சொன்னவர், செப்டம்பர் 1, 2024 முதல் யூனியன் பிரதேசமான சண்டிகரில் மட்டுமே முதல்முதலாக அமலுக்குக் கொண்டு வரப்படும் என்றும் சொல்லி இருந்தார். பிறகு படிப்படியாக அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் என்று அறிவித்திருந்தார். ஆனால், திடீரென்று ஜூலை 1 முதல் இந்தியா முழுக்க அமலுக்கு வரும் என்று சில மாதங்கள் முன்பாக மாற்றி அறிவித்தார்.
பெயர் மாற்றப்பட்ட சட்டங்கள் ஜூலை 1 ஆம் தேதியிலிருந்து இந்தியா முழுதும் நடைமுறைக்கு வந்துள்ளது. அதை உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார்.
இந்த மூன்று சட்டங்களிலும் பொதுமக்கள் பாதிக்காதபடி சில விசயங்கள் உள்ளன. அதே போல் குற்றவாளிக்கும் உரிய நியாயம் கிடைக்கும் அம்சங்களும் உள்ளன. காவல்துறை எப்படி தனது விசாரணையை நடத்த வேண்டும் என்பதற்கு சில வழிகாட்டுதல்கள் உள்ளன. அதில் சில முக்கியமான அம்சங்களைப் பார்த்துவிடுவோம். முன்பு எல்லாம் பாதிக்கப்பட்டவர் காவல்நிலையம் சென்று நேரடியாக தனது புகாரை வாக்குமூலமாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ தர வேண்டும். அதைக் கொண்டே எஃப்ஐஆர் என்று சொல்லப்படும் முதல் தகவல் அறிக்கை பதியப்படும்.
இப்போது சட்டப் பிரிவு 173பிஎன்எஸ்எஸ் சில மாற்றங்களைச் செய்துள்ளார்கள். அதாவது புகார் கொடுக்க நீங்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர் போகத் தேவையில்லை. அவர் வீட்டிலிருந்தபடியே நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி புகாரைக் காவல்நிலையத்திற்கு அனுப்பலாம்.. அதாவது புகாரை எழுத்து வடிவில் வாட்ஸ் அப் மூலம் அனுப்பலாம். அல்லது வீடியோவாக பேசி புகாரைக் காவல்நிலையத்திற்கு அனுப்பலாம்.
அதைக் கொண்டு பாதிக்கப்பட்டவர் புகாரை ஏற்று எஃப் ஐ ஆர் பதிவு செய்தே ஆகவேண்டும். அப்படிப் பதிவு செய்த புகாரை 3 நாட்களுக்குள் விசாரித்து, புகார் கொடுத்தவரிடம் நேரில் சென்று கையெழுத்து பெற்ற வேண்டும். அவரை நேரில் அழைக்கலாம். அல்லது காவல்துறையினரே புகார் கொடுத்தவர் வீட்டுப் போகலாம். ஆக, எலெக்ட்ரானிக் தொழில்நுட்பத்தின் மூலம் பாதிக்கப்பட்டவர் புகார் தரலாம் என்பது முக்கியமான மாற்றம்.
முன்பு எல்லாம் குற்றம் எங்கே நடந்ததோ அந்த வரம்புக்குள் வருகின்ற காவல்நிலையத்தில்தான் புகார் அளிக்க முடியும். வேறு காவல்நிலையம் சென்றால் எங்கள் வரம்புக்குள் இது வரவில்லை என்று தவிர்த்துவிடுவார்கள். ஆனால், இப்போது வந்துள்ள திருத்தத்தில், தமிழ்நாட்டிலிருந்து காஷ்மீருக்குச் சுற்றுலா சென்ற ஒருவர் அங்கே ஏதேனும் ஒரு பொருளை தவறவிட்டாலோ அல்லது அங்கே ஏதேனும் அச்சுறுத்தலுக்கு ஆட்பட்டாலோ அவர் தமிழ்நாட்டுக்குத் திரும்பியவுடன் அவரது வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள காவல்நிலையத்திற்குச் சென்று புகாரைப் பதியலாம்.
எங்கள் வரம்புக்குள் வரவில்லை எனக் காவல்துறை இனி கைவிரிக்க முடியாது. ஒரு ஜீரோ எஃப்ஐஆர் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். அதை உரிய மாநிலத்தின் காவல்நிலையத்திற்கு அந்தப் புகாரை அனுப்பி வைக்க வேண்டு.
முன்பு 3 முதல் 7வருடம் வரை தண்டனை பெறக்கூடிய புகாராக இருந்தால், முதற்கட்ட விசாரணைக்கு என்று சில விதிமுறைகள் இருந்தன. லலிதகுமாரி வழக்கில் நீதிமன்ற சில வழிகாட்டுதல்களை வழங்கி இருந்தது. அதாவது விவாகரத்து, வரதட்சணை புகார், அல்லது வேறு குற்றச்செயல் எதிலும் முதற்கட்ட விசாரணையை உடனே தொடங்க முடியாது.

அதே போல் குற்றம் நடந்து 3 மாதம் கழித்துத் தரப்படும் புகாரை விசாரிக்கவும் சில விதிமுறைகள் இருந்தன. ஆனால், இப்போது திருத்தப்பட்ட சட்டத்தில் 3 மாதம் முதல் 7 ஆண்டுகள் தண்டனைக்குரிய குற்றத்தை விசாரிக்க உயரதிகாரியின் ஒப்புதல் இருந்தாலே உடனே முதற்கட்ட விசாரணையை காவல்துறை அதிகாரிகள் தொடங்கலாம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் 14 நாட்களுக்கு முதற்கட்ட விசாரணை முடித்து எஃப் ஐ ஆர் காப்பியை மனுதாரருக்கு வழங்கவேண்டும். பதிவு செய்ய முடியவில்லை என்றால், ஏன் என்று மனுதாரருக்குத் தகவல் தரவேண்டும். முன்பு குற்றவாளியைக் கைது செய்ய வேண்டும் என்றால், காவல்துறையினர் உடனடியாக அதைச் செய்யலாம். அதுவும் 7 ஆண்டுகள் வரை தண்டனை பெறக்கூடிய குற்றமாக இருந்தால், உடனடியாக கைது செய்ய முடியும். இப்போது அதில் மாற்றம் செய்துள்ளனர்.
அனைவரையும் கைது செய்து கொண்டே போனால் சிறையில் போதிய வசதிகள் இல்லை. இடப்பற்றாக்குறை உள்ளது. ஆகவே ஒருவர் 3 ஆண்டுகள் வரை தண்டனைப் பெறக்கூடிய குற்றமாக இருந்தாலோ, அல்லது குற்றம்சாட்டப்பட்டவர் 60 வயதுக்கு மேல் இருப்பவராக இருந்தாலோ, உடல்நிலை பாதிக்கப்பட்டவராக இருந்தாலோ அவரை உடனடியாக கைது செய்யக் கூடாது. அவர் வெளியே நடமாடினால் மேலும் ஆபத்துகள் வரலாம் என்பதை டிஎஸ்பி தகுதியில் உள்ள உயர் அதிகாரியிடம் அனுமதி பெற்றே கை செய்ய வேண்டும்.
மேலும் இந்தப் புதிய சட்டத் திருத்தம் மூலம் அனைவரையும் சிறையில்தான் வைக்க வேண்டும் என்பது இல்லை. குற்றவாளியை வீட்டுச்சிறையிலேயே வைக்கலாம் என்ற புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. ஒருவருக்கு 14 நாட்கள் சிறை என்று நீதிமன்றம் சொன்னால், அவரை வீட்டுச்சிறையிலேயே அடைத்து வைக்கலாம். அதற்குப் பெயர் ஹவுஸ் அரெஸ்ட்" என புதிய புதிய விளக்கங்களை அளித்துள்ளார்.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி












Click it and Unblock the Notifications