சூரியனின் "அந்த" சீக்ரெட் வெளியே வரப்போகுது.. ஆதித்யா எல்1 அனுப்பப்படுவது ஏன்? இஸ்ரோ பிளான்
சென்னை: இன்று காலை விண்ணில் பாய்கிறது ஆதித்யா L1. சூரியனை ஆய்வு செய்ய உள்ள ஆதித்யா L1 விண்கலம் என்ன மாதிரியான ஆய்வுகளை மேற்கொள்ளும் என்று பார்க்கலாம்.
சூரியனின் L1 சுற்றுவட்டப்பாதையை அடைந்து, சூரிய புயல், ஈர்ப்பு விசை, கதிர்வீச்சை ஆய்வு செய்ய உள்ளது ஆதித்யா L1 . சோலார் கொரோனா என்பதுதான் சூரியனின் வெளிப்புற பகுதி ஆகும். இதைத்தான் ஆதித்யா எல் 1 ஆய்வு செய்ய உள்ளது. அதேபோல் சூரிய கதிர்களையும் ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 களமிறங்கி உள்ளது. இந்த ஆதித்யா சூரியனில் இருந்து எல் 1 பாயிண்ட் தூரத்தில் இருக்கும்.

ஆய்வு செய்ய உள்ள விஷயங்கள்: சூரியனின் கொரோனா பகுதியை ஆய்வு செய்வது இதன் முக்கிய நோக்கம் ஆகும். சோலார் கொரோனா என்பதுதான் சூரியனின் வெளிப்புற பகுதி ஆகும். இதைத்தான் ஆதித்யா எல் 1 ஆய்வு செய்ய உள்ளது. அதேபோல் சூரிய கதிர்களையும் ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 களமிறங்கி உள்ளது.
இதில் இருக்கும் 4 கருவிகள் சூரியனை நேரடியாக ஆய்வு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற 3 கருவிகள் அங்கே இருக்கும் வளிமண்டல பகுதிகளை ஆய்வு செய்யும்.
சூரிய மேல் வளிமண்டலம் (குரோமோஸ்பியர் மற்றும் கரோனா) எப்படி இயங்குகிறது என்பது பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்படும். குரோமோஸ்பிரிக் மற்றும் கரோனா எப்படி வெப்பமாகி உள்ளது என்பது பற்றிய ஆய்வு, அங்கே நடக்கும் அயனியாக்கம் செய்யப்பட்ட பிளாஸ்மாவின் இயற்பியல், கரோனா எரிப்பு என்று அறிவியல் சம்பவம் பற்றிய ஆய்வு உள்ளிட்ட ஆய்வுகளை ஆதித்யா எல் 1 மேற்கொள்ள உள்ளது.
சூரியனின் கொரோனாவை ஆய்வு செய்யும் நான்கு பேலோடுகளில் ஒன்று Visible Emission Line Coronagraph(VELC) ஆகும். இது கொரோன இமேஜிங் சோதனையை மேற்கொள்ளும். அதேபோல் இந்த விண்கலத்தில் புற ஊதா கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. சூரியனின் மேற்பரப்பைக் கண்காணிப்பதற்கான கருவி ஆகும் இது. இதை SUIT (சோலார் அல்ட்ரா வயலட் இமேஜிங் டெலஸ்கோப்) என்று அழைக்கிறார்கள்.
அதேபோல் சூரியனின் கதிர்களில் பல்வேறு ஆய்வுகளை செய்ய Solar Low Energy X-ray Spectrometer (SoLEXS) மற்றும் High Energy L1 Orbiting X-ray Spectrometer(HEL1OS) போன்ற கருவிகளும் இந்த விண்கலத்தில் அனுப்பப்படுகின்றன. சூரியனில் ஏற்படும் சூரிய காற்றுகளை ஆய்வு செய்ய Aditya Solar wind Particle Experiment(ASPEX) மற்றும் Plasma Analyser Package For Aditya (PAPA) ஆகியவை பயன்படுத்தப்படும்.
இதனால் சூரியனின் பல்வேறு சீக்ரெட்டுகள், முக்கியமாக வெப்பநிலை, வெளிப்புறஅடுக்கு தொடர்பான ரகசியங்கள் வெளியே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எத்தனை நாட்கள்: 100-127 நாட்கள் பயணித்து L1 சுற்றுவட்டப்பாதையை அடைந்து, சூரிய புயல், ஈர்ப்பு விசை, கதிர்வீச்சை ஆய்வு செய்ய உள்ளது ஆதித்யா L1 . இந்தியாவின் முதல் சூரிய ஆய்வு விண்கலன் இது, சூரியனை ஆய்வு செய்ய, இன்று காலை 11:50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டா விண்கலத்தில் இருந்து புறப்பட திட்டமிடப்பட்டுள்ளது. PSLV-XL(C57) ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்த விண்கலம் ஏவப்பட்ட உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications