பெண்கள் வாழ்வு மேம்பட அதிமுக கொண்டு வந்த திட்டங்கள் என்னென்ன? லிஸ்ட் போட்ட எடப்பாடி பழனிசாமி!
சென்னை: பெண்கள் வாழ்வு மேம்பட அதிமுக கொண்டு வந்த திட்டங்கள் என்னென்ன என்பது பற்றி பெரிய லிஸ்ட் வெளியிட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி. மகளிர் தின வாழ்த்துப் பதிவில் அவர் இதைக் கூறியுள்ளார். அதன் விவரம் வருமாறு;
பெண்ணின் பெருமையை பறைசாற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த இனிய நன்னாளில் தமிழ் கூறும் நல்லுலகில் வாழும் மகளிர் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த சர்வதேச மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

பிரபஞ்சம் எனும் பேரியக்கத்தில்... "பெண் என்பவள் பொறுமையில் பூமாதேவி, அன்பை அள்ளித் தருவதில் அன்னை, குடும்பத்தில் மகுடம் சூட்டுபவள், ஆளுமையில் அரசி, ஆலோசனை கூறுவதில் ராஜதந்திரி" என பெண்களுக்குத் தனி இடமும், சிறப்பும் அளித்து உயர்த்தி வணங்குவது நம் இந்தியத் திருநாட்டின் பண்பாடும், பாரம்பரியமும் ஆகும்.
சர்வதேச மகளிர் தினமானது, ரஷ்யப் பெண் தொழிலாளர்களின் புரட்சியை நினைவுகூறும் வகையில், இனிமேல் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 8 அன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று, 1921-ல் மாஸ்கோ நகரில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் பெண்களின் அகிலம் அமைப்பின் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. அதில் இருந்துதான் உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 8 அன்று சர்வதேச உழைக்கும் மகளிர் நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
'ஆணுக்கு இங்கு பெண் இளைத்தவறில்லை' என்கிற வாக்கியத்தை நிரூபிக்கின்ற வகையில், அவ்வையார், காரைக்கால் அம்மையார், 'கவிக்குயில்' சரோஜினி நாயுடு, அன்னை தெரேசா, முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி, திருமதி இந்திராகாந்தி, முன்னாள் முதலமைச்சர் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா, திருமதி ஃபாத்திமா பீவி போன்ற எத்தனையோ பெரும் ஆளுமைகள் இன்னமும் இந்த சமூகத்திற்கு பெரும் ஊக்க சக்திகளாகவும், ஏனைய பெண்களுக்கு ஆகச்சிறந்த கிரியா ஊக்கிகளாகவும் இருந்து வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அரசியலிலும், ஆட்சி அதிகாரத்திலும் பெண்களுக்கு உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதற்காக, அவர்களுக்கான தனி இடஒதுக்கீடு வழங்கியவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அம்மாவின் ஆட்சியில், பெண்கள் வாழ்வு மேம்பட எண்ணற்ற திட்டங்களைக் கொண்டுவந்து வெற்றிகரமாக செயல்படுத்தினார்.
*பெண் சிசுக் கொலையைத் தடுக்க 'தொட்டில் குழந்தை திட்டம்'
*நாட்டிலேயே முதன் முறையாக 'அனைத்து மகளிர் காவல் நிலையம்'
*நாட்டிலேயே முதன் முறையாக 'பெண் கமாண்டோ படைத் திட்டம்'
*நாட்டிலேயே முதன் முறையாக 'பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு'
*பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் , பெண் கல்வியை ஊக்குவிக்க ரொக்கப் பரிசு, தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம்,
*பெண்களின் பணிச் சுமையைக் குறைத்திட விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி
*மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு நிதியுதவித் திட்டம்
*நாட்டிலேயே முதன்முறையாக பெண்களுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம்
*பெண்களுக்கான உடல் எடை பரிசோதனைத் திட்டம் + மகளிர் சுயஉதவிக் குழுத் திட்டம் + அம்மா குழந்தைகள் நலப் பரிசுப் பெட்டகம்
*பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறைத் திட்டம் + அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம்
*பெண்களுக்கான மகப்பேறு உதவித் திட்டத்தின் உதவித் தொகையை 12 ஆயிரத்தில் இருந்து 18 ஆயிரமாக உயர்த்தியது.
*பணிக்குச் செல்லும் பெண்களுக்கான மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கியது.
*கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 4,000 ரூபாய் மதிப்புள்ள அம்மா தாய்சேய் நல ஊட்டச்சத்து பெட்டகம் என்பதைப் பெருமையோடு பதிவு செய்கிறேன்.
-
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
தேவர் Vs தேவர் மகன்.. திண்டுக்கல் சீனிவாசனை எதிர்க்கும் ஐபி செந்தில்குமார்! வரலாறு படைக்குமா திமுக? -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
வந்தவுடனே சீட்டா? காளியம்மாளுக்கு கைவிரித்த எடப்பாடி.. வெறும் பேச்சாளராக ‘யூஸ்'செய்ய அதிமுக முடிவு -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
அவிநாசி, ஊட்டி, நாகர்கோவில்! அதிமுக கோட்டைகளை பாஜகவுக்கு தாரை வார்ப்பதா? கொந்தளிக்கும் நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications