வடசென்னை.. சேலம்.. விருதுநகர்.. அதிமுக கூட்டணியில் உத்தேச தொகுதிகள் லிஸ்ட்.. அங்கேதான் ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவின் கூட்டணி கட்சிகளுக்கு உத்தேசமாக ஒதுக்கப்பட உள்ள தொகுதிகள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. இன்னும் கூட்டணிகள் உறுதியாகாத நிலையில் உத்தேச இடங்கள் குறித்த விவரங்கள் வெளியாகி வருகின்றன.

லோக்சபா தேர்தலுக்கான கூட்டணியை அதிமுக கட்சி வேகமாக உருவாக்கி வருகிறது. திமுக கூட்டணியில் இருந்து விலகி அதிமுகவுக்கு தங்கள் கட்சியின் ஆதரவை அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான பி.வி கதிரவன் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What are the seats AIADMK alliance will give to DMDK PMK and other parties in Tamil Nadu Lok Sabha elections

அதிமுக வேகம்: திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ், சிவசேனா (யுபிடி) உள்ளிட்ட கட்சிகள் இந்தியா கூட்டணியில் உள்ளன. அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியும் இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற நிலையில் தற்போது அதிமுக கூட்டணிக்கு சென்றுள்ளது.

இது போக லோக்சபா தேர்தலில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுக - தேமுதிக இடையே இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்து கூட்டணி உறுதியாகியுள்ளது. 4 தொகுதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், எந்தெந்த தொகுதிகள் என்பது பற்றிய பேச்சு நடந்து வருவதாகவும் தேமுதிக அவைத்தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.

தேமுதிக கூட்டணி : மொத்தமாக 7 தொகுதிகள் கேட்ட தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்க அதிமுக. திட்டமிட்டுள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வருகின்றன. இது பாஜகவிற்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக தலைவர்கள் நேற்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை அவரது இல்லம் தேடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அரைமணிநேரம் வரை இந்த சந்திப்பு நடந்தது. ஆனால் இதில் பேசப்பட்ட விஷயங்கள் பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

தேமுதிக, அதிமுக கூட்டணியில் இணைய வேண்டும் என அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதேபோல் பிரேமலதாவும் அதிமுக கூட்டணியில் இணைய சில நிபந்தனைகளை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதுபற்றிய விபரம் எதுவும் வெளியாகவில்லை. ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. தேமுதிக-அதிமுக தலைவர்கள் இடையேயான சந்திப்பு என்பது மொத்தம் அரை மணிநேரம் வரை நடந்துள்ளது.

உத்தேசமான இடங்கள்: அதிமுகவின் கூட்டணி கட்சிகளுக்கு உத்தேசமாக ஒதுக்கப்பட உள்ள தொகுதிகள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. இன்னும் கூட்டணிகள் உறுதியாகாத நிலையில் உத்தேச இடங்கள் குறித்த விவரங்கள் வெளியாகி வருகின்றன.

அகில இந்திய பார்வர்டு பிளாக் - திண்டுக்கல் அல்லது மதுரை ஆகிய இடங்களில் போட்டியிடலாம் என்கிறார்கள். தேமுதிக - வட‌ சென்னை, விருதுநகர், கள்ளக்குறிச்சி, திருச்சி ஆகிய இடங்களில் போட்டியிடலாம் என்கிறார்கள். அதேபோல் பாமக - சேலம், நாமக்கல், காஞ்சிபுரம், மற்றும், வட மாவட்டங்களில் மேலும் 4 தொகுதிகள்..

எஸ் டி பி ஐ - மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும். புதிய‌ தமிழகம் - தென்காசி தொகுதியில் களமிறங்கும் என்று தகவல்கள் வருகின்றன.

அதிமுக கூட்டணி: கடந்த லோக்சபா தேர்தலுக்கு தமிழ்நாட்டில் அதிமுக மெகா கூட்டணி அமைத்து இருந்தது. அதிமுக + பாஜக + பாமக + தேமுதிக இணைந்து லோக்சபா தேர்தலை சந்தித்தன. ஆனால் சட்டசபை தேர்தலின் போதே இந்த கூட்டணி உடைந்தது. தேமுதிக வெளியேறி அமமுகவுடன் கூட்டணி வைத்தது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக கூட்டணி மேலும் கரைந்தது. பாமக முதலில் கூட்டணியில் இருந்து வெளியேறியது.

இப்போது பாஜக தவிர்த்து மீண்டும் பாமக, தேமுதிக அதிமுக கூட்டணியில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+