ஆழமான கிணற்றை சுத்தப்படுத்தும் போது! ஃபேன் கொண்டு போங்க! விஷவாயு தாக்கி உயிரிழப்பே ஏற்படாது!
சென்னை: ஆழம் அதிகம் உள்ள கிணறுகளை சுத்தப்படுத்தும் போது 3 முக்கிய விஷயங்களை கடைப்பிடித்தால் விஷவாயு தாக்கி உயிரிழப்பதை தடுக்கலாம்.
இதுகுறித்து Film Food Fun Fact என்ற எக்ஸ் தள பக்க பதிவில் கூறியிருப்பதாவது: ஆழம் அதிகம் உள்ள கிணறுகளை சுத்தப்படுத்தும் போது ஆட்கள் ஆக்சிஜன் இல்லாததால், விஷவாயு தாக்கி மூச்சு திணறி இறந்து விடுவதாக செய்தித்தாள்களில் நாம் படிப்பதுண்டு. நம் வீட்டில் அந்த மாதிரி அசம்பாவிதம் நடந்தால் நாமும் தான் பாதிக்கப்படுவோம். கிணறுகளில் இறங்கும் முன்பு கவனிக்க வேண்டிய, செய்ய வேண்டிய மூன்று விஷயங்கள்.

1. முதலில் தீப்பந்தத்தை கயிறு கட்டி இறக்கும் போது ஒரு கட்டத்தில் ஆக்சிஜன் இல்லாததனால் அது அணைந்து விடும்.
2. ஒரு ஃபேனை கீழே இறக்கி ஒரு அரை மணி நேரத்திற்கு எல்லா இடத்திலும் ஓட விடுங்கள்
3. ஒரு சட்டியில் மெழுகு கொளுத்தி கீழே இறக்குங்கள் அது கடைசி வரை சென்று எரிந்து கொண்டு இருந்தால் ஆக்சிஜன் அங்கு உள்ளது என்று அர்த்தம் பின்பு வேலையை துவங்கலாம். இவ்வாறு அந்த ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆழம் அதிகம் உள்ள கிணறுகளில் தூர்வார இறங்கும் போதோ அல்லது சுத்தப்படுத்த இறங்கும் போதோ விஷவாயு தாக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. கடந்த இரு தினங்களுக்கு முன்பு, அதாவது 12 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் மயிலாடி அருகே கிணற்றுக்குள் விழுந்த பைக்கை எடுக்கச் சென்ற இருவர் விஷவாயு தாக்கி பலியாகிவிட்டனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு குஜராத்தில் ஒரு சுரங்கத்தில் விஷ வாயு கசிவு ஏற்பட்டு 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அது போல் கடந்த ஆண்டு சென்னை ராமாபுரத்தில் கிணற்றில் இறந்து கிடந்த பூனையை எடுக்க கிணற்றுக்குள் இறங்கிய முதியவர் ஒருவர் விஷவாயு தாக்கி பலியாகிவிட்டார். அது போல் கடந்த 2022 ஆம் ஆண்டு சென்னை அருகே பெருங்குடி உறை கிணற்றை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்தனர்.
கடந்த 2016ஆம் ஆண்டு பயன்பாட்டில் இல்லாத கிணற்றை தூர்வாரும் போது வெளியான விஷவாயுவை சுவாசித்ததால் வட இந்தியர்கள் 5 பேர் பலியான சம்பவமும் நடந்துள்ளது. இப்படி தொடர்ந்து ஆங்காங்கே கிணற்றில் இறங்கும் போது பலர் உயிரிழக்க நேரிடும் நிலை உள்ளதால் மேற்கொண்ட டெக்னிக்கை பின்பற்றி உயிரிழப்பை தடுக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications