மூடப்பட்ட திரையரங்குகள்.. சென்னையில் நாகேஷ், அபிராமி தியேட்டர்கள் வரிசையில் இதுவுமா? லிஸ்ட் பாருங்க
சென்னை: சென்னை அசோக் நகர் பகுதியில் இருக்கும் உதயம் தியேட்டருக்கு மூடுவிழா நடைபெறும் நிலையில் இதுவரை எந்தெந்த தியேட்டர்கள் சென்னையில் மூடப்பட்டுள்ளன என்பதை பார்க்கலாம்.
1983 ஆம் ஆண்டு சென்னையின் அசோக் நகர் பகுதியில் உதயம் திரையரங்கு உருவானது. இந்த தியேட்டரில் ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்டோரின் வெற்றி படங்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

62,400 சதுர அடி, அதாவது 1.3 ஏக்கர் கொண்ட இந்த தியேட்டர் 53 பங்குதாரர்களுக்கு சொந்தமானதாக இருந்தது என சொல்லப்படுகிறது. அவர்களிடையே ஏற்பட்ட பிரச்சினையால் பேச்சுவார்த்தை மூலம் திரையரங்கை விற்பனை செய்யலாம் என முடிவு செய்தனர்.
அதன்படி 2009 ஆம் ஆண்டு முதல், இந்த தியேட்டர் மூன்று முறை விற்பனைக்கு என அறிவிக்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டு இந்த திரையரங்கை அந்த 53 பேரில் ஒருவரே 80 கோடி ரூபாய்க்கு ஏலம் கேட்டு விலைக்கு வாங்கினாராம். அந்த காலகட்டத்திலேயே மல்டிபிளக்ஸ் திரையரங்காக இது இருந்தது. உதயம், மினி உதயம், சந்திரன், சூரியன் ஆகிய 4 திரைகள் உள்ளன.
பார்க்கிங் கட்டணமும் சரி தின்பண்டங்களின் விலையும் சரி இங்கு குறைவாகவே இருக்கும். இதனால் இது சாமானியர்களின் திரையரங்கு என்றே சொல்லலாம். தற்போது கால மாற்றங்களுக்கு ஏற்ப பல்வேறு திரையரங்குகள் வந்துள்ள நிலையிலும் இந்த தியேட்டருக்கு சென்று வந்தனர்.
வடபழனி, அசோக் நகர், சைதாப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், கே.கே.நகர், மாம்பலம் பகுதி மக்களுக்கு இந்த தியேட்டர் இத்தனை ஆண்டுகளாக வசதியான ஒரு தியேட்டராக இருந்தது. கொரோனா காலத்திலிருந்தே மக்கள் தியேட்டர்களுக்கு வருவது வெகுவாக குறைந்துவிட்டது.
இந்த வளாகத்தில் கடந்த பல மாதங்களாக மாலை, இரவுக் காட்சிகள் அதிகம் நடக்காமல் மூடப்படுவது வாடிக்கையாக இருந்தது. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் மட்டுமே ரசிகர்கள் சினிமா பார்க்க வந்தார்கள். மற்ற நாட்களில் கூட்டம் வராமல் தியேட்டரை நடத்துவது சாதாரண விஷயமல்ல.
இதனால் இந்த தியேட்டரை விற்பனை செய்ய உரிமையாளர் முடிவு செய்தார். அதன்படி பிரபல கட்டுமான நிறுவனத்திற்கு இந்த இடம் விற்பனை செய்யப்பட்டு ஒப்பந்தமும் கையெழுத்தானது. இந்த திரையரங்கு மூடப்படுவது குறித்து ரசிகர்கள் வேதனையில் உள்ளார்கள். அது போல் கவிஞர் வைரமுத்துவும் தனது வேதனையை எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
உதயம் தியேட்டர் என்றில்லை, சென்னையில் நிறைய தியேட்டர்கள் தலைநகரின் அடையாளமாக இருந்து கடைசியில் அவை இருந்த தடம் கூட தெரியாமல் போய்விட்டன. அந்த வகையில் நாகேஷ் தியேட்டர், அபிராமி தியேட்டர், காமதேனு தியேட்டர், அகஸ்தியா தியேட்டர், ஆல்பர்ட் தியேட்டர் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன.
அபிராமி தியேட்டர்- புரசைவாக்கத்தில் இந்த தியேட்டர் இருந்தது. தயாரிப்பாளர் அபிராமி ராமநாதனுக்கு சொந்தமானது இந்த திரையரங்கம். இவர் கிண்டியில் உள்ள பொறியியில் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்துள்ளார். சினிமா தயாரிப்பில் நாட்டம் இருந்ததால் அவர் திரைத் துறைக்குள் நுழைந்தார். இந்த திரையரங்கம் தற்போது இடிக்கப்பட்டு அபிராமி மெகா மால் என மாற்றப்பட்டுள்ளது. ராமநாதனுக்கு சொந்தமானதுதான் அபிராமி மெகா மால். அவர் தியேட்டர் இருந்த இடத்தை யாருக்கும் விற்கவில்லை.
ஆல்பர்ட் தியேட்டர்- சொத்து வரி செலுத்தாததால் எழும்பூரில் இருந்த ஆல்பர்ட் திரையரங்கத்திற்கு சென்னை மாநகராட்சி 2022 ஆம் ஆண்டு சீல் வைத்துள்ளது. ரூ 51 லட்சம் சொத்து வரியும், 14 லட்சம் ரூபாய் கேளிக்கை வரியும் பாக்கி வைத்திருந்தது இந்த திரையரங்கம்.
காமதேனு தியேட்டர்- 65 ஆண்டு பழமைவாய்ந்த காமதேனு தியேட்டர் கடந்த 2008ஆம் ஆண்டு மூடப்பட்டது. மயிலாப்பூரில் இருந்த இந்த தியேட்டர் இடிக்கப்பட்டு திருமண மண்டபமாக கட்டப்பட்டுவிட்டது.
நாகேஷ் தியேட்டர்- திநகரில் இருந்த பழமையான நாகேஷ் தியேட்டர் 2008 ஆம் ஆண்டு இடிக்கப்பட்டு தற்போது விஜயா மகால் எனும் திருமண மண்டபமாக மாறிவிட்டது. இந்த தியேட்டர் நடிகர் நாகேஷுக்கு சொந்தமானது. இந்த தியேட்டருக்கு எம்ஜிஆர் உதவி செய்த போதிலும் அது பிற்காலத்தில் பணப்பற்றாக்குறையால் மூடப்பட்டுவிட்டது.
அகஸ்தியா தியேட்டர்- தண்டையார்பேட்டையில் இருந்த அகஸ்தியா தியேட்டர் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் மூடப்பட்டது. 26 அடியில் திரை, 1004 இருக்கைகள் என இந்த தியேட்டர் 1967 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த தியேட்டரில்தான் பாமா விஜயம் படம் வெளியானது. வடசென்னையில் 70 எம்எம் தியேட்டர் என்றால் இது ஒன்றுதான் என இருந்தது.
சென்னையில் பழங்காலத்தில் இருந்த தியேட்டர்கள் விற்கப்பட்டு திருமண மண்டபங்கள், ஷாப்பிங் மால், அடுக்குமாடி குடியிருப்பு என மாறிவிட்டன. சில பழங்கால தியேட்டர்கள் இடிக்கப்பட்டு நவீன காலத்திற்கேற்பவும் இயங்கி வருகின்றன.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications