Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாய்கள் குழந்தைகளை கடித்தால் செய்ய வேண்டியது என்ன! பெற்றோர் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் சிறுமியை நாய் கடித்த சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. ஒரு வேலை உங்கள் குழந்தைகளை திடீரென நாய் கடித்துவிட்டது என்றால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நாம் இதில் பார்க்கலாம்.

இந்த காலத்தில் பலரும் நாய்களைச் செல்ல பிராணியாக வாங்கி வளர்க்கிறீர்கள். ஆனால் நாய்களை வாங்கும் போது இருக்கும் ஆர்வம் அதற்குப் பயிற்சி கொடுக்கும் போது பெரும்பாலானோருக்கு இருப்பதில்லை. இதனால் நாய்கள் ஆக்ரோஷமாகவும் ஆபத்தானதாகவும் மாறுகிறது.

What are the things to do if dog bites your children

சென்னையில் அப்படி தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமியை நாய் கடித்தது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை உருவாக்கியது. மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்கத் தமிழக அரசு இந்த விவகாரத்தில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

என்ன செய்ய வேண்டும்: இது ஒரு பக்கம் இருந்தாலும் திடீரென வீட்டில் இருக்கும் குழந்தைகளை நாய் கடித்தால் என்ன செய்ய வேண்டும் என்பது உங்களுக்குத் தெரிந்து இருக்க வேண்டும். அப்போது தான் எமெர்ஜென்சி காலத்தில் சரியான விஷயங்களை எடுக்க முடியும்.. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.. முதலில் பதற வேண்டாம்.. அதேபோல குழந்தைகளையும் திட்டி அவர்களையும் பதற்றப்படுத்த வேண்டாம். இதுபோன்ற நேரங்களில் குழந்தைகளுக்கு நீங்கள் தரும் நம்பிக்கை முக்கியமானது. குழந்தைகளுக்குத் தைரியம் கொடுங்கள்.. நம்பிக்கை தரும் வார்த்தைகளைப் பேசுங்கள்.

பிறகு நாய் கடித்த பகுதியை நன்கு கழுவவும். சிறிய கடி என்றால் பல் பதிந்து இருக்கும். அந்த இடத்தை நன்கு தண்ணீரில் கழுவுங்கள்.. பைப் தண்ணீர் போல ஓடும் நீரில் கடிபட்ட இடத்தை சுத்தப்படுத்துவது ரொம்ப நல்லது. சோப் போட்டு சுமார் 5 நிமிடங்கள் வரை கடிபட்ட இடத்தை கழுவ வேண்டும்.

சென்னையில் சிறுமியை கடித்து குதறிய நாய்கள்.. தப்பி தவறியும் இந்த 7 வகை நாய்களை வளர்க்காதீங்க!


ரத்தம் வந்தால்: ரத்தம் வந்தால் அதை நிறுத்த பாருங்கள்.. ரத்தம் நிற்கும் வரை கடிபட்ட இடத்தின் மீது கை வைத்து மென்மையாக அழுத்தங்கள். பெரும்பாலும் இதைச் செய்தாலே ரத்தம் வருவது நின்றுவிடும். அதன் பிறகு தோல் உலர்ந்த உடன் சில ஆண்டிபயாடிக் ஆயில்மெண்டுகளை போடலாம். தூசி எல்லாம் படாமல் இருக்கக் கட்டுப் போடுங்கள்.

நாய்கள் கடிக்கும் போது அதில் இருந்து நமக்கு ரேபீஸ் நோய் வந்தால் தான் பேராபத்து. உயிரிழப்பு கூட ஏற்பட்டுவிடும். ஆனால், பெரும்பாலும் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு வேக்சின் போட்டு இருப்பார்கள்.. இருந்த போதிலும் அதை நாய் ஓனர்களிடம் கேட்டு உறுதி செய்து கொள்ளுங்கள். முடிந்தால் அந்த நாயைக் கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்று ரேபீஸ் இல்லை என்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.

மருத்துவர்: அடுத்து மருத்துவரிடம் உங்கள் குழந்தைகளைக் கூட்டிச் செல்லுங்கள். நாய்க் கடி சம்பவம் எப்படி நடந்தது என்பதைத் தெளிவாக விளக்க வேண்டும். ஏனென்றால் குழந்தைகள் எதாவது அடிப்பது அல்லது குத்துவது போன்ற செயல்களைச் செய்து நாய்கள் அதற்குக் கடித்து இருந்தால் அது வேறு.. அதேநேரம் எதுவுமே செய்யாமல் திடீரென இருக்கும் போது நாய்கள் திடீரென கடிக்கிறது என்றால் நாய்க்கு ஏதோ நோய் இருக்கிறது என்று அர்த்தம். எனவே, மருத்துவரிடம் மிகத் தெளிவாக என்ன நடந்தது என்பதைச் சொல்லிவிடுங்கள்.

இவை எல்லாம் நாய்கள் கடித்த பிறகு என்ன செய்ய வேண்டும் என்பது. வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் கடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதைக் குழந்தைகளுக்குச் சொல்லித் தாருங்கள். முதலில் நாய்களிடம் ஆக்ரோஷமாக நடக்கக்கூடாது. வாலை பிடித்து இழுப்பது, அடிப்பது, குத்துவது போன்ற செயல்கள் நாய்களுக்கு கோவத்தை ஏற்படுத்தும். எனவே, நாய்களுக்கு உரிய மரியாதையைக் கொடுங்கள்.

சொல்லி தர வேண்டியவை: குழந்தைகள் இருக்கும் போது எல்லா வகை நாய்களிடமும் ஜாக்கிரதையாக இருங்கள். பெரிய நாய்கள் மட்டுமே கடிக்கும். சின்ன நாய்கள் எல்லாம் கடிக்காது என்ற நினைப்பு பலருக்கும் இருக்கும். அப்படி எல்லாம் இல்லை. எந்த நாய் வேண்டுமானாலும் கடிக்கலாம்.. எனவே எச்சரிக்கையாக இருங்கள். தங்களைச் சுற்றி நடக்கும் திடுக் ஆக்ஷன்கள் நாய்களை அச்சுறுத்தும். இதனால் அவை பயந்து ஆக்ரோஷமாக மாறலாம். எனவே, நாய்கள் அருகே வரும் போது குழந்தைகளை அமைதியாக இருக்கச் சொல்லிக் கொடுங்கள்.

What are the things to do if dog bites your children

எந்த டைப் நாயாக இருந்தாலும் சரி அத்துடன் கொஞ்சி விளையாட வேண்டும் என்றால் அதன் ஓனர்களிடம் அனுமதி பெறுங்கள். ஏனென்றால் எல்லா நாய்களும் ஒரே மாதிரி இருக்காது. மனிதர்களைப் போலவே ஒவ்வொரு நாய்க்கும் சில விஷயங்கள் பிடிக்காது. உரிமையாளரிடம் கேட்டால் என்ன செய்யக்கூடாது என்பதை அவர்கள் விளக்குவார்கள். எனவே நாயைக் கொஞ்சும் முன்பு ஓனரிடம் அது குறித்துக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

தொந்தரவு செய்யக்கூடாது: நாய்கள் தூங்கும் போது தொந்தரவு செய்யக்கூடாது. திடீர் சத்தத்தால் நாய் தூக்கத்தில் இருந்து எழுந்தால் அவை நம்மை நோக்கிப் பாயலாம். மேலும், சாப்பிடும் போதும் அருகே செல்லக்கூடாது. நீங்கள் அதன் உணவைப் பறிக்க வருகிறீர்கள் என்று நினைத்து உங்கள் மீது பாயும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, சாப்பிடும் போதும், தூங்கும் போதும் குழந்தைகளை நாய் அருகே அனுமதிக்காதீர்கள்.

நாய்களின் அடிப்படை உடல்மொழிகள் குறித்து குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள். நாய் தனது இரு கால்களுக்கு நடுவே வாலை வைத்திருப்பது, முதுகில் ரோமங்களை உயர்த்தி இருப்பது, உதடுகளை அடிக்கடி நக்குவது ஆகியவை நாய் பயந்து போய் இருப்பதைக் காட்டுகிறது. எனவே, அதுபோன்ற நேரங்களில் நாய்களிடம் இருந்து விலகி இருக்கச் சொல்லிக்கொடுங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+