வெற்றி நடை போடுவீங்க! ஒரே பாட்டுல முன்னேற்றம்! குரு பெயர்ச்சி இந்த 2 ராசிக்கு ரொம்ப ராசியா இருக்கும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மே 1ம் தேதி நடக்க உள்ள குரு பெயர்ச்சிக்கு பிறகு ரிஷபம், மகரம் போன்ற ராசிகளுக்கு பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் நிகழ்வாக இந்த பெயர்ச்சி பார்க்கப்படுகிறது.

மேஷ ராசியில்தான் குரு பகவான் தற்போது பயணம் செய்து கொண்டு இருக்கிறார். இந்த குரு பகவான் மே 1ஆம் தேதி முதல் ரிஷப ராசிக்கு செல்கிறார். இதனால் கீழ்காணும் 2 ராசிகளுக்கு என்ன மாதிரியான பலன்கள் ஏற்படும் என்று பார்க்கலாம்.

What are the things will happen to these 2 Rasis ahead of Guru peyarchi palan 2024

ரிஷப ராசி பலன்கள்; குரு பெயர்ச்சி நடக்கும் போதெல்லாம் பல ராசிகளுக்கு வாழ்க்கை அப்படியே பாசிட்டிவாக மாறிய சம்பவங்கள் நடந்துள்ளன.அந்த வகையில் ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி மூலம் என்ன மாற்றங்கள் எல்லாம் நடக்கும் என்று பார்க்கலாம்.

ரிஷப ராசிக்கு இத்தனை காலம் 12ம் இடத்தில், அதாவது மேஷ ராசியில் இருந்தார் குரு. இப்போது ஜென்ம இடத்தில் குருவாக மாறி உள்ளது. அவர் 5, 7, 9 இடங்களை பார்க்கிறார்.

கொஞ்சம் கஷ்டம் இருக்கும்: இந்த குரு உங்கள் வீட்டிற்கு வருவதால்.. நீங்கள் இனி செய்வதில் எல்லாம் கொஞ்சம் இடர்பாடுகள் வரும். எதாவது ஒரு விஷயத்தை செய்ய நினைத்தால் அது தடங்கலாக மாறும். பைக்கை ஸ்டார்ட் செய்ய நினைத்தால் கூட பேட்டரி போய் நிற்குமே.. அப்படி ஒவ்வொரு விஷயத்திலும் தடங்கல்கள் வரும்.

தொட்டதெல்லாம் தடங்கல் இருக்கும்: இப்படி தொட்டதெல்லாம் தடங்கல் இருக்கும் என்றாலும்.. எந்த காரியமும் நடக்காமல் போகாது. கொஞ்சம் கஷ்டப்பட்டு முயன்றால் கண்டிப்பாக அந்த காரியம் நடக்கும். ரிஷப ராசிக்கு ஜென்ம இடத்தில் குரு மாற உள்ளது. அவர் 5, 7, 9 இடங்களை பார்க்கிறார். அவர் இருக்கிற இடத்தை விட பார்க்கிற இடம் முக்கியம் என்பதால் தடங்கல்கள் வந்தாலும்.. நீங்கள் நினைத்த காரியங்களை கஷ்டப்பட்டு செய்தால் நிறைவேற்றுவீர்கள்.

நல்ல விஷயங்கள் என்னென்ன?: எதுவும் நல்லதே நடக்காதா.. தடங்கல்கள் மட்டுமே வருமா என்று கேட்க வேண்டாம். சில நல்ல விஷயங்களும் நடக்க போகின்றது.

ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

குழந்தை பேருக்கு வாய்ப்பு உள்ளது.

திருமணம் கைகூடும்.

வேலை நிமித்தமாக இடம் மாற்றம் வாய்ப்பு உண்டு. வேலை மாற்றமும் வாய்ப்பு உண்டு.

வெளிநாடு செல்ல வாய்ப்பு உண்டு.

மகரம் ராசி; இந்த குரு பெயர்ச்சி மூலம் மகரம் ராசிக்கு என்ன மாதிரியான பலன்கள் இருக்க போகிறது என்று பார்க்கலாம்

வாழ்க்கை மாறும்; உங்கள் ராசிக்கு புத்திர ஸ்தானத்தில் வருகிறார். அதனால் உங்களுக்கு பின்வரும் சாதக பலன்கள் ஏற்படும். மிக மோசமான பொருளாதார சூழ்நிலை, கழுத்தை நெரிக்கும் கடன், குழந்தைகள் வாழ்க்கையில் பிரச்சனை என்று பல பிரச்சனைகளில் இருந்த உங்களுக்கு பிரச்சனைகள் தீர போகிறது.

உங்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். இத்தனை காலம் குழந்தை இல்லாமல் போனவர்களுக்கு குழந்தை பிறப்பு ஏற்படும்.

இரண்டாவது குழந்தைக்கு முயல்பவர்களுக்கு இரண்டாம் குழந்தை கிடைக்கும்.

திருமணம் கைகூடும். இத்தனை காலம் பல வரங்களை தேடி இருப்பீர்கள். ஏதாவது ஒரு பெண் - ஆண் அமையாதா என்று பார்த்து இருப்பீர்கள். ஆனால் இப்போது நீங்கள் தேடாமலே உங்களுக்கு திருமணம் கைகூடும்.

புதிய வீடு கட்டும் வாய்ப்பு வரும்., நிலம் வாங்கும் யோகம் அடிக்கும். சொத்துக்களுக்கு அதிபதி ஆகும் வாய்ப்பு தேடி வரும்.

எதிர்காலத்தை புரட்டி போடும் அந்த ஒரு சம்பவம் கண்டிப்பாக நடக்கும். அதாவது திருமணத்திலோ, வேலையிலோ நீங்கள் எதிர்பார்க்காத பெரிய மாற்றம் நடந்து உங்கள் எதிர்காலத்தையே புரட்டி போடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+