Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை அடையாறு, கண்ணகி நகர், தீவுத்திடலில் நடக்கப்போகும் மெகா திட்டங்கள்.. என்னென்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிங்கார சென்னையை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, அடையாறு, கூவம் உள்ளிட்ட நீர்வழிகளை சுத்தப்படுத்தி, மறுசீரமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த முயற்சிகளின் முதற்கட்டமாக, 44 கி.மீ. நீளமுள்ள அடையாறு ஆற்றில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழக பட்ஜெட்டில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.24,476 கோடியும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறைக்கு ரூ.13,969 கோடியும் ஒதுக்கப்பட்டு உள்ளது. அதன் மூலம் நிறைவேற்றப்படும் திட்டங்கள் என்னென்ன என்பதை இப்போது பார்ப்போம்.

அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ், குடிநீர் வழங்கலை சீரமைத்தல், கழிவுநீர் கட்டமைப்பை மேம்படுத்துதல், நீர்நிலைகளை புதுப்பித்தல், பசுமையான நகர்ப்புறங்களை உருவாக்குதல் போன்ற திட்டங்களை அரசு மேற்கொண்டு வருகிறது. இதுவரை, இத்திட்டத்தின் கீழ், ரூ.9,378 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ரூ.5,960 கோடி மாநில அரசாலும், உள்ளாட்சி அமைப்புகளாலும் செலவிடப்படும். இந்த திட்டத்திற்காக, ரூ.612 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

ஒகேனக்கல்

ஒகேனக்கல்

மக்களுக்கு குடிநீர் வசதிகளை மேம்படுத்துவதற்காக, உயிர் நீர் (ஜல் ஜீவன்) இயக்கத்தின் கீழ், 103 கூட்டுகுடிநீர் திட்டங்களுக்கு, ரூ.15,734 கோடி மதிப்பீட்டில் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அவற்றில் 54 சதவீத செலவினத்தை மாநில அரசு ஏற்கும். மேலும், ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டத்தின் 2-ம் கட்டப் பணிகள் ரூ.7,145 கோடி செலவில் செயல்படுத்த பன்னாட்டு நிறுவனங்களில் நிதியுதவிக்காக முன்மொழியப்படும். வரும் நிதியாண்டில் உயிர் நீர் இயக்கத்தை செயல்படுத்த ரூ.6,600 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

செம்மொழிப்பூங்கா

செம்மொழிப்பூங்கா

கோவையில் உலகத்தரம் வாய்ந்த 'செம்மொழிப்பூங்கா' 2 கட்டங்களாக அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதன் முதற்கட்டமாக, 45 ஏக்கர் பரப்பளவில் தாவரவியல் பூங்கா அமைக்கவும் இதர வசதிகளை மேம்படுத்துவதற்கும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, மொத்தம் ரூ.172 கோடி செலவில் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்காக, ரூ.43 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

சீரமைப்பு பணிகள்

சீரமைப்பு பணிகள்

சிங்கார சென்னையை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, அடையாறு, கூவம் உள்ளிட்ட நீர்வழிகளை சுத்தப்படுத்தி, மறுசீரமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த முயற்சிகளின் முதற்கட்டமாக, 44 கி.மீ. நீளமுள்ள அடையாறு ஆற்றில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தில் கழிவுநீர் ஆற்றில் கலப்பதை தடுத்தல், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல் போன்ற ஆற்றைத் தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், எழில் கொஞ்சும் பூங்காக்கள், பசுமை நடைபாதைகள், திறந்தவெளி உடற்பயிற்சி கூடங்கள், தரமான அருந்தகங்கள் போன்ற கண்கவர் பொழுதுபோக்கு அம்சங்கள் அடையாறு ஆற்றங்கரையை அலங்கரிக்கும். இத்திட்டம் அரசு-தனியார் பங்களிப்புடன் ஏறத்தாழ ரூ.1,500 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

தரமான சாலைகள்

தரமான சாலைகள்

நகர்ப்புற உள்ளாட்சிகளைத் தரம் உயர்த்தியதன் காரணமாக, அருகில் இருக்கும் புறநகர்ப் பகுதிகளும் அவற்றோடு இணைக்கப்பட்டுள்ளன. அவற்றிலுள்ள மண்சாலைகளைத் தரம் உயர்த்துவது அவசியமாகும். இப்பகுதிகளில், 4,540 கி.மீ. நீளமுள்ள மண் சாலைகளில், 1,633 கி.மீ. மண் சாலைகள் கடந்த 2 ஆண்டுகளில் ஏற்கனவே உள்ளாட்சி அமைப்புகளால் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. வரும் ஆண்டில், 1,424 கி.மீ. மண் சாலைகள், மொத்தம் ரூ.1,211 கோடி செலவில் தரமான சாலைகளாக மேம்படுத்தப்படும்.

மாநகராட்சிகள்

மாநகராட்சிகள்

நகர்ப்புற உள்ளாட்சிகளில் பொது கழிப்பறைகளின் செயல்பாட்டையும், பராமரிப்பையும் மேம்படுத்த அரசு முயற்சிகளை எடுத்து வருகின்றது. பெருநகர சென்னை மாநகராட்சியில் புதிய பொது கழிப்பறைகள், சமுதாயக் கழிப்பறைகள் கட்டுதல், இயங்கி வரும் கழிப்பறைகளைச் சீரமைத்தல், அவற்றின் பராமரிப்பு ஆகிய பணிகள் ரூ.430 கோடி செலவில் அரசு-தனியார் பங்களிப்பு மூலம் ஒரு முன்னோடித் திட்டமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் வெற்றியின் அடிப்படையில், மாநிலத்தில் உள்ள பிற மாநகராட்சிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.

சென்னை தீவுத்திடல்

சென்னை தீவுத்திடல்

ஒளிர்மிகு உயிரோட்டமுள்ள பொது இடங்களை நகரங்களில் உருவாக்க அரசு பல முன்னெடுப்புகளைச் செய்து வருகின்றது. சென்னைத் தீவுத்திடலில் 30 ஏக்கர் நிலப்பரப்பில், இயற்கை வனப்புடன் நகர்ப்புற பொதுச் சதுக்கம், கண்காட்சி அரங்குகள், திறந்தவெளி திரையரங்கம், உணவகங்கள் போன்ற நவீன நகர்ப்புர வசதிகளை ரூ.50 கோடி செலவில் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஏற்படுத்தும்.

பெரும்பாக்கம்

பெரும்பாக்கம்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்டுள்ள மறுகுடியிருப்புகளில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில், விளையாட்டு, பொழுதுபோக்கு மையங்கள் உருவாக்கப்படும். இந்த மையங்களில் விளையாட்டு வசதிகள், நவீன உடற்பயிற்சிக் கூடம், தொழிற்பயிற்சி வழங்க பல்நோக்கு சமுதாயக்கூடம், நூலகம் போன்ற வசதிகள் அமைக்கப்படும். வரும் ஆண்டில், ரூ.20 கோடி செலவில் கண்ணகி நகர், பெரும்பாக்கம், நாவலூர், அத்திப்பட்டு ஆகிய 4 இடங்களில் இந்த மையங்கள் உருவாக்கப்படும்.

மதுரையில் திட்டம்

மதுரையில் திட்டம்

சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய நகரங்களான கோவை மற்றும் மதுரையில் திட்டமிட்ட வளர்ச்சியை மேற்கொள்வது இன்றியமையாததாகும். ஆகவே இவ்விரண்டு நகரங்களையும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் உள்ளடக்கி, அனைத்து மக்களின் பங்களிப்புடன் எழில்மிகு கோவை மற்றும் மாமதுரை என்ற ஒருங்கிணைந்த வளர்ச்சித்திட்டங்கள் தயாரிக்கப்படும். பசுமையான பூங்காக்கள், தூய்மையான தெருக்கள், அனைவருக்கும் சுத்தமான குடிநீர், பாதுகாப்பான போக்குவரத்து அமைப்புகள், தொழிற்பூங்காக்கள், தரமான வீட்டுவசதி போன்ற பொருண்மைகள் இத்திட்டங்களில் இடம்பெறும். தலா ரூ.1 கோடி செலவில் இத்திட்ட அறிக்கைகள் தயார் செய்யப்படும்" இவ்வாறு பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+