வொய் ப்ரோ? திஸ் வெரி ராங் ப்ரோ.. முதல்வர் விஜய்க்கு எதிராக ஹெச் ராஜா முதல் பதிவு
சென்னை: தமிழகம் மட்டுமன்றி ஒட்டுமொத்த பாரதமும் உணர்வுப்பூர்வமாக கொண்டாடி மகிழும், ஆனைமங்கல செப்பேடுகள் குறித்து, 36 மணிநேரம் முழுதாக கடந்துவிட்ட பிறகும் கூட முதல்வர் ஜோசஃப் விஜய் அவர்களிடம் இருந்து இதுவரை ஒரு வாழ்த்துச் செய்தியோ அல்லது வரவேற்புச் செய்தியோ வராததன் காரணம் என்ன என்று பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா கேள்வி எழுப்பி உள்ளார்.
பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா வெளியிட்ட பதிவில் கூறுகையில், "தமிழகம் மட்டுமன்றி ஒட்டுமொத்த பாரதமும் உணர்வுப்பூர்வமாக கொண்டாடி மகிழும், ஆனைமங்கல செப்பேடுகள் குறித்து, 36 மணிநேரம் முழுதாக கடந்துவிட்ட பிறகும் கூட முதல்வர் ஜோசஃப் விஜய் அவர்களிடம் இருந்து இதுவரை ஒரு வாழ்த்துச் செய்தியோ அல்லது வரவேற்புச் செய்தியோ வராததன் காரணம் என்ன?

முதலாம் ராஜராஜ சோழரின் அடையாளச் சின்னமாகவும், 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாரம்பரிய வரலாற்றுப் பெட்டகமாகவும் விளங்கும் "ஆனைமங்கல செப்பேடுகள்" பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நம் தாயகம் திரும்பியது தமிழக முதல்வருக்கு பிடிக்கவில்லையா? ஒருவேளை நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் சீரிய முயற்சியினால் அப்பொக்கிஷம் மீட்டெடுக்கப்பட்டதில் முதல்வர் மிகுந்த வருத்தத்தில் உள்ளாரா?
அதனால் தான், தனது கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி பழம்பெருமைமிக்க ஆனைமங்கல செப்பேடுகள் மீது சேற்றை வாரி பூசுவதை கண்டிக்காமல் கைகட்டி வேடிக்கை பார்க்கிறாரா? தமிழர்களின் அடையாள மீட்டலை அமைதியாக கடந்து செல்லும் ஒருவர் எப்படி தமிழகத்தின் முதல்வராக பொறுப்புடன் பணியாற்றி நமது பாரம்பரியத்தை பாதுகாப்பார்?" இவ்வாறு கூறியுள்ளார்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட பதிவில் கூறுகையில், "300 ஆண்டுகளுக்குப் பிறகு தாயகம் திரும்பியுள்ள ஆனைமங்கலம் செப்பேடுகள் குறித்து 36 மணி நேரமாக வாய்திறக்காதது ஏன் முதல்வர் விஜய் அவர்களே?
மாபெரும் தமிழ் பேரரசை படைத்த சோழர்களில் சைவ சமயத்தைச் சேர்ந்த மாமன்னர் இராஜராஜ சோழன் ஒரு புத்த விகாரத்துக்காக ஒரு ஊரையே தானம் செய்ததைப் பதிவு செய்யும் விதமாக மாமன்னர் இராஜேந்திர சோழனால் வடிக்கப்பட்ட ஆனைமங்கலம் செப்பேடுகளை, நெதர்லாந்தில் இருந்து நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மீட்டெடுத்துள்ளது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு மட்டுமல்ல, தமிழக வரலாற்றையே மீட்டெடுக்கும் அதிமுக்கிய நிகழ்வு.
இந்த நெகிழ்ச்சியான தருணத்தில், தமிழக பாரம்பரியத்தை மீட்டெடுத்ததற்காக மத்திய அரசிற்கு நன்றி கூறாவிட்டாலும் பரவாயில்லை, தமிழகத்தின் பிரதிநிதி என்ற தார்மீக முறையில், ஒரு சமூக வலைத்தளப் பதிவைக்கூட நீங்கள் பதிவிடாதது ஏன்? ஒருபுறம், தாயகம் திரும்பிய ஆனைமங்கலம் செப்பேடுகளை நீங்கள் வரவேற்கத் தயாராகாத நிலையில், மறுபுறம் தங்களது கூட்டணிக் கட்சியினர் அதன் வரலாற்றைத் திரித்து வருகின்றனர். இதுதான் தவெக அரசு தமிழக வரலாற்றைப் போற்றும் முறையா?
மொத்தத்தில், தங்களுக்கும் தங்கள் அரசுக்கும் மத்திய அரசுக்கு நன்றி கூற மனமில்லையா? அல்லது, தமிழகத்தின் வரலாற்றையே போற்ற மனமில்லையா? பதிலளியுங்கள் முதல்வரே!" இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
-
"சுடுகாடு பக்கத்துல டாஸ்மாக் வையுங்க CM சார்!" – விஜய்யிடம் பார்த்திபனின் 'சைக்கலாஜிக்கல்' அஸ்திரம் -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
அதிமுக எம்எல்ஏக்கள் ரோட்டில் நிற்கிறார்கள் தெரியுமா? தவெகவை வெளுத்த டிடிவி தினகரன்! -
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
மாறுவேடத்தில் நள்ளிரவு ரவுண்ட்ஸ் போகிறாரா முதல்வர் விஜய்? தவெக ஆனந்த்ஜீத் உடைத்த அதிரடி ரகசியம்! -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
டாஸ்மாக் கடையை மூட மறுக்கும் விஜய் அரசு.. களத்தில் குதித்த தூத்துக்குடி மக்கள்! ரொம்ப தப்புங்க! -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
சும்மா தூக்கிக் கொடுக்கல விஜய்.. காங்கிரஸுக்கு எதுக்கு எம்பி பதவி! தவெகவின் டெல்லி ‘மாஸ்டர்’ ப்ளான்! -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட்












Click it and Unblock the Notifications