சென்னை அடுக்குமாடி வீட்டில் 5 மாதங்களாக தந்தை-மகள் சடலம்! பார்த்ததுமே ஆடிப்போன மக்கள்! டாக்டர் கைது
சென்னை: சென்னையை அடுத்த திருமுல்லைவாயல் திருமலைவாசன் நகரில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் சாமுவேல் சங்கர் என்பவர் தனது மகள் சிந்தியா உடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் துர்நாற்றம் வீசியதால் போலீசுக்கு தகவல் வந்தது. இதையடுத்து விசாரித்த போலீஸ், தந்தை, மகள் இருந்த காட்சியை கண்டு ஆடிப்போனார்கள்.. பூட்டிய வீட்டிற்கு ஐந்து மாதமாக பிணமாக கிடந்துள்ளனர்.. நடந்தது பற்றி பார்ப்போம்.
சென்னை திருமுல்லைவாயல் திருமலைவாசன் நகரில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பில் 78 வயதாகும் சாமுவேல் சங்கர் என்பவரும், 37 வயதாகும் அவருடைய மகள் சிந்தியாவும் வசித்து வந்தார்கள். சாமுவேல் சங்கரும், சிந்தியாவும் வீட்டிற்கு வந்து போகிறார்களா இல்லையா என்பதே தெரியாத அளவிற்கு இருந்தது. ஏனெனில் வீடு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்தது. வீட்டில் யாருமில்லை என்று அக்கம் பக்கத்தினர் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் கடந்த ஜனவரி 29ம் தேதி இரவு, இவர்கள் தங்கி இருந்த வீட்டில் இருந்து மிகமோசமான துர்நாற்றம் வீசுவதாக அந்த அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் திருமுல்லைவாயல் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் திருமுல்லைவாயல் போலீசார் அடுக்குமாடி வீட்டிற்கு வந்தனர். அப்போது வீடு வெளிப்புறமாக பூட்டி இருந்தது. ஆனால் வீட்டில் ஏசி இயங்கி கொண்டிருந்ததை போலீசார் கண்டனர். இதையடுத்து பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
அப்போது வீட்டில் ஏ.சி. இயங்கிக்கொண்டிருந்ததால் வீடு முழுவதும் குளிர்ந்து காணப்பட்டுள்ளது. அங்கு வீட்டுக்குள் சிந்தியாவும், அவரது தந்தை சாமுவேல் சங்கரும் பிணமாக கிடந்துள்ளனர். அவர்களது உடல்கள் அழுகிய நிலையில் எலும்புக்கூடாக மாறி இருப்பதை கண்டு போலீசார் ஆடிப்போனார்கள். பின்னர் இருவரதும் உடலையும் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சென்னை தடயவியல் துறை அதிகாரி தாரா தலைமையில் அதிகாரிகள் வந்து தடயங்களை சேகரித்தனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் இவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டம், ஓரிக்கை, பாரதிதாசன் நகரைச் சேர்ந்த குழந்தைகள் நல டாக்டரான சாமுவேல் எபினேசர் (34) என்பவரும் ஒன்றாக வசித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து டாக்டர் சாமுவேல் எபினேசரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
முதற்கட்ட விசாரணையில், வேலூர் பகுதியைச் சேர்ந்த சாமுவேல் சங்கரும், அவருடைய மகள் சிந்தியாவும் இறந்துகிடந்துள்ளனர். இதில் சிந்தியா, திருமணமாகி கணவரை பிரிந்து தந்தையுடன் வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு குழந்தை இல்லை. சிந்தியா, தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். சாமுவேல் சங்கருக்கு சிறுநீரக பாதிப்பு இருந்திருக்கிறது. இதற்காக அவர் சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதன் பின்னர் தந்தையை சென்னையில் உள்ள மற்றொரு பிரபல தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றிருக்கிறார்.
அப்போதுதான் டாக்டர் சாமுவேல் எபினேசரை ஐடி நிறுவன பணியாளரான சிந்தியா சந்தித்தார். இருவரும் ஒருவரை பற்றி ஒருவர் விசாரித்து கொண்டனர். அதில் இருவரும் கோவையில் ஒரே பள்ளியில் படித்ததும், சிந்தியாவுக்கு டாக்டர் சாமுவேல் எபிநேசர் ஜூனியர் என்பதும், அவர், ஆஸ்திரியா நாட்டில் டாக்டருக்கு படித்து இருப்பதும் தெரிந்துள்ளது.
சிந்தியா, தந்தைக்கு டயாலிசிஸ் செய்ய வேண்டியது இருப்பதால் அடிக்கடி வேலூரில் இருந்து சென்னை வந்து செல்வதை அறிந்த சாமுவேல் எபிநேசர், தானே சாமுவேல் சங்கருக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதாக கூறினாராம். திருமுல்லைவாயல் திருமலைவாசன் நகரில் உள்ள அந்த அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வாடகைக்கு வீடு பார்த்து குடியிருக்க வைத்தாராம். அதே அடுக்குமாடி குடியிருப்பின் மற்றொரு வீட்டில் டாக்டர் சாமுவேல் எபினேசர் தங்கி இருந்து வந்தாராம்.
இதனிடையே கடந்த செப்டம்பர் மாதம் 6-ந் தேதி சாமுவேல் சங்கர் சிகிச்சை பலனின்றி வீட்டிலேயே உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது. தந்தையை காப்பாற்ற முடியாத ஆதங்கத்தில் இருந்த சிந்தியாவுக்கும், டாக்டர் சாமுவேல் எபிநேசருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.. மேலும் டாக்டர் சாமுவேல் எபினேசர் தான் வெளிநாடு செல்ல போவதாக கூறியதால் சண்டை நடந்ததாம். அப்போது நடந்த வாக்குவாதத்தின் போது, சிந்தியாவை கீழே தள்ளி விட்டதில் தலையில் காயம் அடைந்த சிந்தியா இறந்து விட்டாராம்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சாமுவேல் எபிநேசர், தந்தை-மகள் இருவரது உடல்களையும் அந்த அறையில் வைத்து பூட்டினார். ஏ.சி. எந்திரத்தை இயக்கி விட்டு வீட்டை வெளிப்புறமாக பூட்டிவிட்டு யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் சென்றுவிட்டாராம். அவ்வப்போது அந்த வீட்டுக்கு வந்து பார்த்துவிட்டு சென்று வந்தாராம். மேலும் ஊரில் உள்ள உறவினர்களுக்கு சந்தேகம் வராமல் இருக்க சிந்தியாவின் செல்போனை எடுத்து அவரது உறவினர்களுக்கு 'வாய்ஸ் காலில் மிஸ்டு கால்' கொடுத்து விட்டு, பின்னர் 'வாட்ஸ் அப்பில்' கால் செய்தால் எடுப்பதில்லையா? என குறுந்தகவல் அனுப்பி, சிந்தியா உயிருடன் இருப்பது போன்று நாடகமாடி வந்தாராம். கிட்டத்தட்ட ஐந்துமாதங்கள் கழிந்தநிலையில் துர்நாற்றம் வீசியதால் இப்போது டாக்டர் சாமுவேல் எபிநேசரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம்












Click it and Unblock the Notifications