சென்னை அருகே திருமணத்துக்கு முதல்நாளில் புதுமாப்பிள்ளை இருந்த கோலம்.. 2கே கிட்ஸ் அறிய வேண்டிய பாடம்
சென்னை: காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கண்ணன்தாங்கல் பகுதியை சேர்ந்த மகேஷ்குமார் என்பவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை செய்து வந்தார். இவர் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்த 22 வயது பெண்ணை 4 ஆண்டுகளாக காதலித்து வந்தார். ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் திருமணம் செய்ய மறுத்தார். காவல் நிலையம் வரை பிரச்சனை போனது. இந்நிலையில் திருமணம் நேற்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் திருமணத்துக்கு முதல்நாள் புதுமாப்பிள்ளை எடுத்த முடிவு ஆடிப்போக வைத்துள்ளது.
காதலின் போது யாருமே பிரிக்க முடியாத அளவிற்கு நெருக்கமாக இருக்கும் காதலர்கள், திருமணம் என்று வரும் போது, ஒருமுறைக்கு பலமுறை யோசிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அந்த பெண்ணின் நடவடிக்கை பிடிக்காமல் காதலன் பிரிந்துவிடுகிறார். அதேபோல் ஆணின் நடவடிக்கை சரியில்லை என்று உணரும் பெண்கள், இவன் நமக்கு வேண்டாம் என்று பிரிந்துவிடுகிறார்கள்.

அதற்கு முன்பு பரஸ்பரம் இருவரும் உடலாலும் உள்ளத்தாலும் சந்தோஷமாக இருந்திருந்தாலும், வேண்டாம் என முடிவெடுத்த பின்னர் பிரிந்துவிடுகிறார்கள். இதனை ஏற்க முடியாமல், காதலன் அல்லது காதலி கொந்தளிக்கிறார்கள். அதன்படி, காதலித்து விட்டு பிரிந்து செல்லும் காதலியை கொல்வதற்கு கூட காதலன் தயாராகி விடுகிறான். மறுபுறம் காதலித்து ஏமாற்றியதாக பெண்கள் ஆண்கள் மீது புகார் அளிக்கிறார்கள். இந்த புகாரால் ஒன்று ஜெயிலுக்கு போக வேண்டும். இல்லை என்றால் அந்த பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்கிற நிலை ஆணுக்கு ஏற்படுகிறது. அப்படியான சூழலில் ஒரு இளைஞன் தவறான முடிவெடுத்து வாழ்க்கையை முடித்துக் கொண்டுள்ளார்.
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கண்ணன்தாங்கல் பகுதியை சேர்ந்த 25 வயதாகும் மகேஷ்குமார் என்பவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார். அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்த கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்த 22 வயது பெண்ணை 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். காதலர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் இளம்பெண்ணை திருமணம் செய்ய மகேஷ்குமார் மறுத்தார். இதனால் அந்த பெண், ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மகேஷ்குமார் ஏமாற்றி விட்டதாக புகார் அளித்திருக்கிறார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ள மகேஷ்குமார் சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து நேற்று ஊத்துக்காட்டில் உள்ள குலதெய்வம் கோவிலில் வைத்து இருவருக்கும் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்தது. இதற்காக நேற்று முன்தினம் தனது பெற்றோரிடம் பணம் கொடுத்து தாலி மற்றும் கல்யாணத்துக்கு தேவையான உடைகள், பொருட்களை வாங்கி வரும்படி மகேஷ்குமார் கூறியிருக்கிறார். அதன்படி கடந்த 23ம் தேதி இரவு திருமணத்துக்கு தேவையான அனைத்து பொருட்களையும் மகேஷ்குமாரின் பெற்றோர் வாங்கிவிட்டு வீட்டுக்கு வந்தனர்.
அப்போது மகேஷ் குமார் வீட்டின் மின்விசிறியில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருப்பதை கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார், உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நேற்று காலையில் திருமணம் நடக்க இருந்த நிலையில் முதல் நாள் இரவில் மணமகன் வாழ்க்கையை முடித்துக் கொண்ட சம்பவம் அவரது பெற்றோர், உறவினர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 2464 0050 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications