எல்லோருக்கும் போடப்பட்ட "பிளாஸ்திரி".. தமிழிசையிடம் அமித் ஷா சொன்னது என்ன? போட்டுடைத்த புள்ளி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழிசை சௌந்தரராஜனுக்கு அமித் ஷா அறிவுரை வழங்கி இருப்பார். மிரட்டல் வழங்கி இருப்பார். இது தமிழிசைக்கு பொதுவில் நடந்தது. அண்ணாமலைக்கு ரகசியமாக நடந்து இருக்கும். அண்ணாமலைக்கு சொல்லி இருப்பார்கள். என்ன வெளியே தெரியவில்லை., என்று மூத்த பத்திரிகையாளர் பிரியன் தெரிவித்துள்ளார்.

பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கும் மோதல் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பதவி ஏற்பு விழாவின் போது தமிழிசை சௌந்தரராஜனிடம் அதிருப்தியை வெளிப்படுத்திய ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் வீடியோ இணையம் முழுக்க டிரெண்டாகி வருகிறது. இந்த வீடியோ தொடர்பாக தற்போது திமுகவினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

lok sabha election 2024 tamilisai soundrarajan amit shah 2024

தமிழிசையை அழைத்து கண்டிப்பது போல கையால் சைகையை காட்டுகிறார். இதற்கு தமிழிசை பதில் அளிக்கும் போது அதை ஏற்றுக்கொள்ளாமல் தமிழிசையை கண்டிக்கும் விதமாக அமித் ஷா மறுத்து பேசுகிறார்.

பேட்டி: இவர்களுக்கு இடையிலான நேற்று நடந்த விவாதம் தொடர்பாக மூத்த பத்திரிக்கையாளர் பிரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், அண்ணாமலையை மாற்ற வாய்ப்பு இப்போதைக்கு குறைவு. பாஜக ஆட்சிக்கு வந்து இப்போதுதான் அதில் கவனம் செலுத்துகிறார்கள். புதிய அமைச்சரவை காரணமாக அதில் கவனம் செலுத்துகிறார்கள். அண்ணாமலை சொல்வது போல கட்சி வளரவில்லை. அண்ணாமலை வரிசையாக தோல்வி அடைகிறார். வெட்கம் இல்லாமல் பாஜக வளர்கிறது என்று சொல்கிறார். ஆனால் தமிழிசை அப்படி இல்லை.

கடந்த 1 வருடங்களில் பாஜகவில் பல ரவுடிகள் சேர்க்கப்பட்டனர். இவர்களில் பலர் கைதாகி உள்ளனர். பாஜக வாக்கு வங்கி எல்லாம் உயரவில்லை. பாஜக அதிக இடங்களில் போட்டியிட்டு உள்ளது. அதனால் அதிக வாக்கு வங்கி வந்துள்ளது. நான் தலைவராக இருக்கும் வரை அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று அண்ணாமலை சொல்கிறார். அதை அவர் சொல்ல முடியாது.

அண்ணாமலைக்கு சிக்கல்; அண்ணாமலை வாக்கு வங்கி உயர்ந்தது என்று சொல்வதில் உண்மை இல்லை. அது டெல்லிக்கு புரிந்தால் பாஜக அவரை மாற்றும். பாஜக இந்த அளவிற்கு சட்டசபை தேர்தலில் வாக்குகளை வாங்காது. லோக்சபா தேர்தலில் வாங்கிய அளவிற்கு கூட பாஜக வாங்காது. பாமகவும் இந்த கூட்டணிக்கு செல்லாது. இது மோடி பற்றிய தேர்தல் என்பதால் பாஜகவிற்கு கொஞ்சம் வாக்கு வந்தது. ஆனால் சட்டசபை தேர்தலில் வராது.

சென்னையில் கூட மோசமாக தோல்வி அடைவார்கள். என்னைக்கு வேண்டுமானாலும் அண்ணாமலையை மாற்றுவார்கள். அண்ணாமலை - தமிழிசை இடையிலான வார்த்தை போரை அமித் ஷா விரும்பவில்லை. இவர்கள் அதனால் எல்லோரும் வாயை மூடிக்கொண்டு ஒழுங்காக இருங்கள் என்று கூறி உள்ளனர். தமிழிசையிடம் அப்படி கூட அமித் ஷா சொல்லி இருக்கலாம். உண்மையில் தமிழிசையிடம் அமித் ஷா என்ன சொல்லி இருப்பார் என்று தெரியவில்லை.

அங்கே இருப்பவர்களுக்குத்தான் தெரியும். நீங்க இப்படி எல்லாம் பேசுனீங்க.. இனிமேல் பேசாதீங்க என்று அமித் ஷா சொல்லி இருப்பார். அறிவுரை வழங்கி இருப்பார். மிரட்டல் வழங்கி இருப்பார். இது தமிழிசைக்கு பொதுவில் நடந்தது. அண்ணாமலைக்கு ரகசியமாக நடந்து இருக்கும். அண்ணாமலைக்கு சொல்லி இருப்பார்கள். என்ன வெளியே தெரியவில்லை, என்று மூத்த பத்திரிகையாளர் பிரியன் தெரிவித்துள்ளார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+