தலைவர் பதவி போச்சு! டெல்லி பாஜக மேலிடத்திடம் வேறு பதவியை கேட்டாரா அண்ணாமலை? பிரபலம் சொன்ன சீக்ரெட்
சென்னை: தமிழக பாஜக தலைவர் பதவி அண்ணாமலையின் கையை விட்டு போகும் நிலையில் தனக்கு வேறு ஒரு பதவியை தருமாறு டெல்லி பாஜக மேலிடத்திடம் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக பாஜக தலைவர் பதவியில் மாற்றம் வர போகிறது என கடந்த 4 நாட்களாக தகவல்கள் காத்து வாக்கில் வந்த வண்ணம் இருந்தன. ஆனால் இதற்கு பாஜக நிர்வாகிகள் யாரும் பதில் சொல்லவில்லை.

இந்த நிலையில் கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, தமிழக பாஜக தலைவர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை. தமிழக புதிய தலைவர் பதவிக்காக நான் யாரையும் கை காட்டவில்லை. பாஜக தலைவர் பதவிக்கு யாரும் போட்டியிடுவதில்லை. சேர்ந்தே தேர்வு செய்வோம் என தெரிவித்திருந்தார்.
அண்ணாமலை உறுதி
இதன் மூலம் தமிழக பாஜக தலைவர் பதவியில் மாற்றம் வர போகிறது என்பதை அண்ணாமலையே உறுதி செய்துவிட்டார். இந்த நிலையில் இதுகுறித்து சன் நியூஸ் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: அண்ணாமலை டெல்லிக்கு சென்ற போதே டெல்லி மேலிடம், "உங்களை மாநில தலைவராக வைத்துக் கொண்டு அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் 2026 ஆம் ஆண்டு தேர்தலை நோக்கி செல்லும் போது அது சரியான பாதையில் போகுமா என்பது எங்களுக்கு சந்தேகமாக இருக்கிறது. அதிமுக நிர்வாகிகளும் இதையேதான் எண்ணுகிறார்கள்.எனவே நீங்கள் விலகுவது நல்லது" என போன வாரமே high command அட்வைஸ் கொடுத்துவிட்டது.
அதிமுகவுடன் கூட்டணி கூடாது
அதேநேரம் அதிமுகவுடன் கூட்டணிக்கு போகக் கூடாது என அண்ணாமலை தன்னால் இயன்றவரை முயற்சித்தார். "எடப்பாடி பழனிசாமிக்கும் அதிமுகவுக்கும் தெற்கு, வடக்கு, மேற்கு என எந்த மண்டலத்திலும் செல்வாக்கு இல்லை. அவர் தலைமையிலான அதிமுக ஒரு இடத்தில் கூட தேர்தலில் வெற்றி பெறவில்லை. எனவே நாம் 2026 இல் தனித்தே போட்டியிடலாம்" என்றாராம். ஆனால் பாஜக மேலிடம் அதை பற்றி கவலைப்படவில்லை.
லோக்சபா தேர்தல்
கடந்த 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலிலும் இப்படித்தான் அதிமுகவை பற்றி சொன்னீர்கள். ஆனால் நாம் தனியாக போட்டியிட்டு ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. எனவே இந்த கூட்டணி விவகாரத்தில் நீங்கள் தலையிட வேண்டாம். அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துவிட்டோம் என மேலிடம் சொல்லிவிட்டார்கள்.
தொண்டனாக இருப்பேனு சொன்னது ஏன்?
இதன் விளைவாகத்தான் தொண்டனாக தொடர்வேன் என அண்ணாமலை சொன்னார். தமிழகத்திற்கு பிரதமர் மோடி வரும் நேரத்தில் தலைவர் பதவியில் இருந்து தன்னை விலகச் சொல்லியிருப்பதை அண்ணாமலை உறுதி செய்திருக்கிறார்.
பிரதமர் மோடி தமிழகம் வருகை
எது எப்படியோ தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை விலக வைக்க வேண்டும் என்ற அவருடைய கோரிக்கை நிறைவேற்றப்பட்டுவிட்டது. இதையடுத்து அதிமுக- பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமடையும் என தெரிகிறது. வரும் ஏப்ரல் 6ஆம் தேதி பிரதமர் வருகையின் போது அதிமுக- பாஜக கூட்டணி உறுதி செய்யப்படும், தமிழக பாஜக தலைவரும் தேர்வு செய்யப்பட்டுவிடுவார்.
புதிய பதவி
டெல்லியில் மேலிடத்தை சந்தித்து பேசிய போது "பாஜக அமைக்கும் கமிட்டியில் எனக்கு ஒரு இடம் கொடுக்க வேண்டும்" என அண்ணாமலை கேட்டாராம். இதை டெல்லி மேலிட பாஜக பரிசீலனை செய்யுமா என்பது தெரியவில்லை. அதே வேளையில் தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலைக்கு இந்த கமிட்டியில் வழங்கப்படும் பொறுப்பு சரியாக இருக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது என ப்ரியன் தெரிவித்திருந்தார்.
-
ரஜினி படத்தை எந்த அமைப்பும் பயன்படுத்தக் கூடாது.. ரசிகர் மன்றம் அதிரடி.. அண்ணாமலைக்கு வைத்த செக்? -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
ஓரம்கட்டப்படும் நயினார்.. தமிழக பாஜக தலைவர் ரேஸில் முந்தும் ராம சீனிவாசன்? அடுத்தது என்ன? -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
3 மாதத்திற்குள் கட்சி லான்ச் ஆகும்.. பை-லாவை தயார் செய்யும் அண்ணாமலை.. மிகப்பெரிய முடிவு -
சலசலப்புகளுக்கு இனி இடமில்லை.. அமித்ஷாவை சந்தித்த தமிழக பாஜக உயர்மட்டக்குழு.. அடுத்தது என்ன? -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications