அட இது நல்லா இருக்கே.. வானதி முகம் முழுக்க சிரிப்பு.. ரயிலில் சுற்றி சுற்றி விளையாடி.. பரவும் வீடியோ
சென்னை: பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்த சம்பவம் கவனம் பெற்றுள்ளது.
பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி தமிழ்நாடு வந்துள்ளார் . கோவையில் இருந்து சென்னைக்கு வரும் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி துவங்கி வைத்தார்.

அதன்பின் சென்னை மயிலாப்பூரில் இருக்கும் ராமகிருஷ்ணா மடத்தின் 125வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டார். சென்னை விமான நிலையத்தில் இருக்கும் ஒருங்கிணைந்த புதிய டெர்மினல் 1 ஐ பிரதமர் மோடி திறந்து வைத்தார். சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.1260 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையம் கட்டுமானத்திற்கு பின் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. சென்னைக்கு வரும் பயணிகள் எண்ணிக்கையை 23 மில்லியன் பயணிகள் என்ற அளவில் இருந்து 30 மில்லியன் பயணிகளாக உயர்த்தும்.
அதேபோல் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். சென்னை முதல் பெங்களூர் வரை ஏற்கனவே வந்தே பாரத் சேவை உள்ளது. முதல்முறையாக தமிழ்நாடு உள்ளேயே வந்தே பாரத் ரயில் சென்னை - கோவை இடையே திறக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 6 மணி நேரத்தில் கோவை செல்ல முடியும்.

இந்த ரயில்கள் புதன்கிழமை தவிர வாரத்தின் பிற 6 நாட்களும் இருமார்க்கமாக இயங்க உள்ளது. சராசரியாக மணிக்கு 110 கி.மீ வேகத்தில் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் 8 ஏசி பெட்டிகளுடன் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. மொத்தம் 536 இருக்கைகள் இருக்கும். அதன்பிறகு பெட்டிகளின் எண்ணிக்கை 16 ஆக அதிகரிக்கப்படும். இதன் உட்புறம் பார்க்க உலகத்தரத்துடன் இருக்கும். முதல் நாளிலேயே இதில் பயணிக்க மக்கள் ஆர்வமாக டிக்கெட் புக் செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் இயக்கப்படும் இரண்டாவது வந்தே பாரத் ரயில் இது என்பதால் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. இதன் வேகம் அதிகம் என்று கூறப்பட்டாலும் இந்த ரயில் செல்ல கிட்டத்தட்ட 6 மணி நேரம் ஆகிறது. சாதாரணமாக இப்போதெல்லாம் ஆம்னி வாகனங்களும் கூட 6 மணி நேரத்தில் இதே ரூட்டில் செல்வதால், இதன் வேகத்தை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. அதாவது இன்னும் வேகமாக 5 மணி நேரத்தில் செல்ல வழி ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்த சம்பவம் கவனம் பெற்றுள்ளது.

இந்த ரயிலை பற்றி குறிப்பிட்ட அவர்.. புல்லட் ரயில் கனவு நிறைவேற்றப்படுவதாக தெரிவித்து உள்ளார். சென்னை - கோவை வந்தே பாரத் ரயிலில் பயணித்த அவர் Rotating Chair வசதியை பயன்படுத்தி அதை வீடியோ எடுத்துள்ளார். அவருடன் பாஜக எம்.எல்.ஏ சி.சரஸ்வதி உடன் இருந்தார். இவர்கள் ஒன்றாக அந்த சேரை சுற்றி அதை வீடியோ எடுத்து வெளியிட்டு உள்ளனர். அவர்களின் முகம் முழுக்க சிரிப்போடு, சிறிய குழந்தைகள் போல இப்படி நடந்து கொண்டது பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
ரயிலு.... pic.twitter.com/x7X1mmeqQw
— Vanathi Srinivasan (@VanathiBJP) April 9, 2023
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஏற்கனவே வேலை நடக்கும் சாலை பணிகளுக்கு.. டெல்லியில் மீண்டும் அனுமதி கேட்ட ஆதவ் அர்ஜுனா? பின்னணி -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications