விஜயபாஸ்கர் வீட்டிற்கு ரெய்டு போன சிபிசிஐடி.. பீரோவை திறந்து பார்த்தால் ஷாக்.. உள்ளே இருந்தது என்ன?
சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் தலைமறைவாக உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீசார் தேடி வருகின்றனர். அவருக்கு தொடர்புடைய 9 இடங்களில் சிபிசிஐடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது 100 கோடி மதிப்பிலான நில அபகரிப்பு வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கைது செய்யப்படாமல் இருப்பதற்காக முன் ஜாமீனுக்கு முயற்சித்தார் விஜயபாஸ்கர்.

முன் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்து வருகிறார் விஜயபாஸ்கர். தலைமறைவாகியுள்ள அவரை கைது செய்ய முயன்று வருகின்றனர்.
தேடுதல்: அவரை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஒரு பக்கம் தீவிரமாகத் தேடி வரும் நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு, சென்னை மற்றும் கரூரில் உள்ள விஜயபாஸ்கரின் வீடுகள், அலுவலகங்கள் , அவரது ஆதரவாளர்களின் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிரடி ரெய்டு நடத்தி நிறைய ஆவணங்களைக் கைப்பற்றியிருக்கிறது சி.பி.சி.ஐ.டி. இதில், போலீசார் எதிர்பார்க்காத வேறு விவகாரங்கள் குறித்த டாகுமெண்ட்டுகளும் கிடைத்துள்ளதாம்.
விஜயபாஸ்கரை கைது செய்வதில் போலீசார் தீவிரம் காட்டி வந்தாலும் அவரது இருப்பிடத்தை கண்டுப்பிடிக்க முடியாமல் திணறி வருகிறார்கள். இந்த நிலையில், சி.பி.சி.ஐ.டி.க்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதிமுகவின் போக்குவரத்து தொழிற்சங்கத்தின் தென்சென்னை மண்டல செயலாளராக இருக்கும் ரவிச்சந்திரன் தான், எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு எல்லாமுமாக இருந்து வந்தாராம்.
எங்கே இருக்கிறார்: விஜயபாஸ்கர் தொடர்பான அனைத்து ரகசியங்களும் ரவிச்சந்திரனுக்குத் தான் தெரியும். விஜயபாஸ்கரும் ரவிச்சந்திரனும் நகமும் சதையும் மாதிரி. அதனால் அவருக்கு சொந்தமான ஓரிடத்தில் தான் விஜயபாஸ்கர் தலைமறைவாக ஒளிந்து கொண்டிருக்கிறார் என்று அந்த ரகசிய தகவல் சொல்கிறதாம். அந்த தகவலை புறந்தள்ளி விடாமல், ரகசியமாக விசாரித்து வருகிறதாம் சி.பி.சி.ஐ.டி. அதனால், விரைவில் விஜயபாஸ்கரை அரஸ்ட் செய்து விடுவார்கள் என்று அதிமுக வட்டாரங்களில் விவாதிக்கப்படுகிறது
வழக்கு பின்னணி: கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கரூர் போலீஸ் மற்றும் எஸ்பி அலுவலகத்தில் புகார் தரப்பட்டது.
இதுதொடர்பாக கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதையடுத்து, இந்த நிலமோசடி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதனால் விஜயபாஸ்கர், கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். தன்னுடைய அப்பாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
ஆனால் விஜபாஸ்கரின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனிடையே கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக விஜயபாஸ்கர் தலைமறைவாக இருந்து வருகிறார். இந்த நிலையில், எம்.ஆர் விஜயபாஸ்கர் தரப்பில் கரூர் நீதிமன்றத்தில் மீண்டும் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் முன் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்து வருகிறார் விஜயபாஸ்கர்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications