செந்தில் பாலாஜி கைது! இரவில் போன நியூஸ்! பரபரப்பில் ஸ்டாலின் வீடு! இரவே முக்கிய முடிவு? அடுத்து என்ன
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்து அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று நுங்கம்பாக்கம் அலுவலகத்திற்கு அழைத்து சென்ற நிலையில் முதல்வர் ஸ்டாலின் தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறார்.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது. இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவருக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அரசு முடிவு எடுத்த நிலையில் இதில் தொடர்ந்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான விசாரணையை தொடர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

இதையடுத்தே வருமான வரித்துறை அவருக்கு எதிராக ரெய்டு நடத்தியது. அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பல அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்டு உள்ளது. அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில்தான் நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வந்தனர்.
கைது: நேற்று தலைமை செயலகத்தில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி உள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகின்றனர்.
தலைமை செயலகத்தில் 10 மணி நேரம் சோதனை நடந்தது. அலுவலக உதவியாளர் விஜயகுமாரை அழைத்துக் கொண்டு அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். முக்கிய ஆவணங்கள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் உள்ளதா? என்பதை கண்டறிய அதிகாரிகள் சோதனை செய்தனர்.
நேற்று 17 மணி நேரம் சோதனை முடிந்த பின் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்றபோது நெஞ்சில் கைவைத்து வலிப்பதாக கூறி அவர் காரில் படுத்ததால் மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்று இருக்கிறார்கள்.
அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உள்ளது. நெஞ்சை பிடித்துக்கொண்டு காரில் படுத்துக்கொண்டு செந்தில் பாலாஜி அழுது இருக்கிறார். உடனே அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஸ்டாலின் தகவல்: நேற்று தலைமை செயலகத்தில் ரெய்டு போன போதே அதை பற்றி முதல்வர் ஸ்டாலின் தீவிரமாக ஆலோசனை செய்தார். ஜெயலலிதா இறந்த பின் சென்னையில் அதிமுகவினர் வீடுகளில் நடத்த ரெய்டில்.. தலைமை செயலக ரெய்டும் முக்கியம் ஆனது. அதன்பின் மீண்டும் தலைமை செயலகத்தில் ரெய்டு நடந்தது.
இதையடுத்து நேற்றே தலைமை செயலாளர் இறையன்புவிற்கு போன் செய்து முதல்வர் ஸ்டாலின் பேசி உள்ளார். நிலைமை எப்படி இருக்கிறது, என்னென்னெ அறைகளில் சோதனை நடக்கிறது. விதி மீறல்கள் செய்யப்படுகிறதா என்று முதல்வர் ஸ்டாலின் போனில் ஆலோசனை செய்து உள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியிடமும் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்து இருக்கிறார். அதோடு அதிகாரிகளும் மாறி மாறி தலைமை செயலாளர் இறையன்புவிற்கு போன் செய்துள்ளனர். இன்னொரு பக்கம் முதல்வர் ஸ்டாலின் மூத்த அமைச்சர்கள் சிலருக்கு போன் செய்து இந்த விவகாரம் குறித்து மாற்றி மாற்றி பேசினார்.
இதனால் அங்கும், இங்கும் போன் கால்கள் பறந்து உள்ளன. இந்த நிலையில் நேற்று செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு அழைத்து சென்ற போதும் ஸ்டாலின் இரவோடு இரவாக தனது வீட்டில் ஆலோசனை செய்துள்ளார். மூத்த அமைச்சர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்துள்ளார்.
அதில் பின் வரும் விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டு உள்ளன. சட்ட ரீதியாக இந்த விவகாரத்தை எப்படி எதிர்கொள்வது, செந்தில் பாலாஜிக்கு மருத்துவ உதவிகள் வழங்குவது, செந்தில் பாலாஜிக்கு எந்த வழக்கறிஞரை களமிறக்குவது, அவர் கைதாகி நீண்ட காலம் சிறையில் இருக்கும் பட்சத்தில் அமைச்சரவை பொறுப்புகளை யாருக்கு கொடுப்பது, உடனே பெயில் வாங்குவது எப்படி, கரூரில் சட்ட ஒழுங்கை பாதுகாப்பது எப்படி என்பது தொடர்பாக ஆலோசனைகளை மேற்கொண்டு உள்ளார்.
இதில் இரவே முக்கியமான சில முடிவுகள் எடுக்கப்பட்டு இருக்கிறதாம். இந்த நிலையில் செந்தில் பாலாஜி கைதுக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் விரைவில் அறிக்கை ஒன்றை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications