எனக்கு தினமும் தகவல் வருது.. மொத்தமாக மாற போகுது! ஸ்டாலின் சொன்ன மெஜாரிட்டி கணக்கு.. பயங்கர ட்விஸ்ட்
சென்னை; தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய பல்வேறு ஆலோசனைகள் நடந்து வருகின்றன. இந்த ஆலோசனையில் தேசிய அளவிலான முடிவு எப்படி இருக்கும் என்றும் பேசப்பட்டு வருகிறதாம். அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் திமுக மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் முக்கியமான சில விஷயங்களை ஆலோசனை செய்து இருக்கிறாராம்.
தமிழ்நாட்டில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை லோக்சபா தேர்தல் நடந்தது. இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நாடு முழுக்க கேரளா, ராஜஸ்தான், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் நடக்கிறது. தேசிய அளவில் லோக்சபா தேர்தல் தீவிரம் இன்னும் முடியவில்லை. லோக்சபா தேர்தலுக்கான கொண்டாட்டங்கள், பிரச்சாரங்கள் மிக தீவிரமாக நடந்தபடியே இருக்கின்றன.

தமிழ்நாடு தேர்தல்; தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரங்கள், தேர்தல் எல்லாம் முடிந்து அமைதியான சூழ்நிலை நிலவுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை நாடு முழுக்க லோக்சபா தேர்தல் திருவிழா பிரம்மாண்டமாக தொடங்கியது. கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை 2024 மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 லோக்சபா தொகுதிகளுக்கு முதற்கட்டமாக தேர்தல் நடந்தது.
ஸ்டாலின் ஆலோசனை; இந்த தேர்தல் முடிந்த நிலையில்.. முதல்வர் ஸ்டாலின் இரண்டு முக்கியமான மீட்டிங்குகளை நடந்து உள்ளார். முதல் மீட்டிங் திமுக நிர்வாகிங்கள், மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் இடையே நடந்துள்ள மீட்டிங். இரண்டாவது மீட்டிங் நேற்று காங்கிரஸ் தலைவர்களுடன் நடந்தது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை உடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
ஆலோசனை; இந்த ஆலோசனையில்தான் பின்வரும் 5 விஷயங்களை முதல்வர் ஸ்டாலின் பேசி இருக்கிறார். அதில்,
1. தமிழ்நாட்டில் 39 இடங்களில் நமது வெற்றி உறுதி. புதுச்சேரியிலும் நம்முடைய வெற்றி உறுதி. சில இடங்களில் வாக்கு சதவிகித வெற்றி குறையலாம். ஆனால் அங்கும் வெற்றி உறுதி.
2. தென் மாவட்டங்களில் நம்முடைய கூட்டணியின் வெற்றி சதவிகிதம் குறையும் . அங்கே கொஞ்சம் நிர்வாகிகள் அலட்சியமாக இருந்துவிட்டனர்.
3. தமிழ்நாடு மட்டுமின்றி வடமாநிலங்கள்,தெலுங்கானா , கர்நாடகாவிலும் இந்தியா கூட்டணிக்கு சாதகமாக இருக்கிறது. சூழ்நிலை நமக்கு சாதகமாக சென்று கொண்டு இருக்கிறது.
4., பாஜக பதற்றத்தில் இருக்கிறது. முதலில் 400 என்று பேசியவர்கள் இப்போது அதை பற்றி பேசுவது இல்லை. பாஜக 200 இடங்களை தாண்டுவதே கடினம். என்டிஏ 200 இடங்களை தொடலாம்.
5. என்டிஏ 200 இடங்களை தொட்டால் கூட அந்த கட்சி ஆட்சி அமைக்காது. என்டிஏவில் இருக்கும் கட்சிகள் கழன்று கொள்ளும்.
வடஇந்தியாவில் முக்கியமாக பீகார், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக மாறுகிறது. கூட்டணி ஆட்சிக்கான வாய்ப்பு உள்ளது என்று ஸ்டாலின் பேசி இருக்கிறாராம். எனக்கு தினமும் தகவல் வருது.. மொத்தமாக நிலைமை நமக்கு சாதகமாக மாற போகுது என்று காங்கிரஸ் நிர்வாகிகளிடம் ஸ்டாலின் பேசி உள்ளாராம்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம்












Click it and Unblock the Notifications