Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எங்க கொள்கை முடிவிற்கு கட்டுப்படனும்! துணை வேந்தர்கள் மாநாடு.. கறாராக பேசிய ஸ்டாலின்.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாநில அரசின் கொள்கை முடிவுகளுக்குக் கட்டுப்பட்டு பல்கலைக் கழகங்கள் செயல்பட வேண்டும், சமூகநீதியை அடித்தளமாகக் கொண்ட சமுதாயத்தில், பகுத்தறிவைக் கூர்மைப்படுத்துவதாக, நம்முடைய கல்வி நிலையங்கள் செயல்பட வேண்டும், என்று துணை வேந்தர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் காட்டமாக பேசி உள்ளார்.

ஆளுநர் ரவியை நேரடியாக எதிர்க்கும் வகையில் துணை வேந்தர்கள் மாநாட்டை தமிழ்நாடு அரசு இன்று நடத்தியது. கடந்த மே மாதம் ஊட்டியில் துணைவேந்தர்களின் 2 நாள் மாநாட்டை நடத்தினார் ஆளுநர் ரவி.

இதையடுத்து தமிழ்நாடு அரசு வேந்தர்கள் மசோதாவை நிறைவேற்றியது. அதன்படி முதல்வர்தான் பல்கலைக்கழகங்களின் வேந்தராக செயல்படுவார் என்று தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றி ஆளுநரின் பதவியை பறித்தது.

ஆனால் தமிழ்நாடு அரசின் இந்த சட்டத்தை ஆளுநர் ரவி இன்னும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பவில்லை. இந்த நிலையில்தான் ஆளுநருக்கு பதிலடி தரும் விதமாக, வேந்தரான அவரை அழைக்காமலே துணை வேந்தர்கள் மாநாட்டை தமிழ்நாடு அரசு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடத்தி உள்ளது.

ஸ்டாலின் உரை

ஸ்டாலின் உரை

இதில் முதல்வர் ஸ்டாலின் உயர்கல்வியில் தமிழ்நாடு அரசின் பெருமைகளை பேசியதோடு மட்டுமின்றி, மாநில அரசின் கொள்கை முடிவுகளுக்குக் கட்டுப்பட்டு பல்கலைக் கழகங்கள் செயல்பட வேண்டும் என்றும் காட்டமாக பேசி உள்ளார். முதல்வர் ஸ்டாலின் தனது உரையில், அனைவருக்கும் கல்வி, அவர்கள் தகுதிக்கேற்ற வேலை கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிடக் கொள்கை! உயர்கல்வியால், ஒருவருக்குச் சமூகத்தில் நன்மதிப்பு கிடைக்கிறது. வேலை கிடைக்கிறது. வளமான வாழ்க்கைக்கு உத்தரவாதம் கிடைக்கிறது. சமூக வாழ்வில் புகழ் கிடைக்கிறது.

உயர்கல்வி சாதனை

உயர்கல்வி சாதனை

இவை அனைத்துக்கும் உயர்கல்வியே அடிப்படையாக அமைகிறது. அதனால்தான், இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு மிக அதிகமான உயர்கல்வி நிறுவனங்கள், அறிவியல் கல்லூரிகளாக, பொறியியல் கல்லூரிகளாக, மருத்துவக் கல்லூரிகளாக, சிறந்த கட்டமைப்பு வசதியுடன், தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளன என்பதில் எல்லோரும் பெருமைப்படுகிறோம்.

இதன் வெளிப்பாடு தேசிய தர நிர்ணயக் குழுவின் மதிப்பீட்டில் தமிழகப் பல்கலைக்கழகங்கள் பெற்றுள்ள A++, A, B+ ஆகிய மூன்று தரச் சான்றுகள் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் தேசியத் தர வரிசைகட்டமைப்பில் (NIRF) முதல் ஆயிரம் இடங்களில் 164 இடங்களை அதாவது சுமார் 16 விழுக்காடு இடங்களை தமிழகத்தில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்கள் அடைந்து சாதனை படைத்துள்ளன. எண்ணிக்கை, தரம் என்ற இரண்டிலும், தமிழக உயர்கல்வி நிறுவனங்கள் உயர்ந்த இடத்தில் இருப்பதைத் தேசியதர வரிசைக் பட்டியல் காட்டுகிறது.

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

வெறும் வேலை வாய்ப்பு மட்டும் தருவதை, உயர்கல்வியின் நோக்கமாக நான் கருதுவதில்லை. அந்த எண்ணங்களை உங்களிடம் பரிமாறிக் கொள்வதற்காகத் தான் இந்த கருத்தரங்கம் அமைந்திருக்கிறது. நாம் எப்போதும் உயர்ந்து நிற்கிறோம்! இதுபோதாது. இன்னும் உயர்ந்தாக வேண்டும்! தமிழ்நாட்டில் உயர்கல்வி பயின்ற பலர் இன்று பல்வேறு துறைகளில் சிறந்து நல்ல முறையில் உலகின் பல்வேறு நாடுகளில் பணிபுரிந்து வருகிறார்கள். உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதம் என்பது அகில இந்திய அளவில் 27.1 தான். ஆனால் தமிழ்நாடு, 51.4 விழுக்காடு மாணாக்கர்கிள் சேர்க்கை விகிதத்துடன் உயர்ந்து நிற்கிறது. ஒரு முழுமையான மனிதனை, அனைத்துப் பண்புகளிலும் சிறந்துவிளங்கும் சாதனையாளர்களை உயர்கல்வி உருவாக்க வேண்டும் என்பதுதான் என் கனவு! இந்தக் தமிழ்நாட்டில் இயங்கும் கல்லூரிகளும், கனவை, பல்கலைக்கழகங்களும் நிறைவேற்ற வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

அறிக்கை சொல்வது என்ன?

அறிக்கை சொல்வது என்ன?

அனைத்திந்திய உயர்கல்வி ஆய்வறிக்கையின்படி, தமிழகப் பல்கலைக்கழகங்கள், சேர்க்கை வீதம், இடஒதுக்கீடு மற்றும் பேராசிரியர்கள் நியமனம் ஆகியவற்றில் தலைசிறந்து விளங்குகிறது. கட்டமைப்பு, ஆசிரியர் தரம் மற்றும் நியமனம், கற்பித்தல் மற்றும் கற்றல், ஆராய்ச்சி ஆகியவற்றில் தமிழக பல்கலைக்கழகங்கள் சிறப்பாக உள்ளன தேசிய தர வரிசையில், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களின் வரிசையில், 6 பல்கலைக்கழகங்களும், பல்கலைக்கழகங்கள் வரிசையில், 8 பல்கலைகக்கழகங்களும் இடம்பெற்று, நம் மாநிலத்தை உயர்கல்வியில் முதல் மாநிலமாக நிலைநிறுத்தியுள்ளன.
வரும் ஆண்டுகளில் இந்நிலை மேலும் சிறப்பாக உயரும்! மாணவர்களின் எண்ணிக்கைக் கூடும்போது, உயர்கல்வியின் தரம் குறைந்துவிடுகிறது என்ற வாதத்தை நாங்கள் ஏற்றுக் கொள்வதில்லை. நமக்குக் கல்வித் தரமும் வேண்டும்; மாணவர்களின் எண்ணிக்கையும் குறையக்கூடாது! இதில் நமது அரசு உறுதியாக இருக்கிறது.எடுத்துக்காட்டாக, சென்னை மாநிலக் கல்லூரியில் சுமார் 5000 மாணவர்கள் பயில்கின்றனர். அதேநேரத்தில் தேசியத் தர வரிசையிலும், மூன்றாம் இடத்தை மாநிலக் கல்லூரி பெற்றுள்ளது என்பதையும் நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பாடத்திட்ட மறுசீரமைப்பில், நமது அரசு முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறது.

அனைவர்க்கும் கல்வி

அனைவர்க்கும் கல்வி

அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் உயர்கல்வி, அனைவருக்கும் ஆராய்ச்சிக் கல்வி என்பதை இலக்காக வைத்துள்ளோம். உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சிகளை நமது மாநிலத்தில் செயல்படுத்தவும், ஆசிரியர்கள், ஆராய்ச்சி மாணாக்கர்கள் மற்றும் இளநிலை மற்றும் முதுநிலை மாணாக்கர்களையும் ஆராய்ச்சி செய்ய ஊக்கப்படுத்தவும், ஆண்டுதோறும் ரூபாய் 50 கோடி அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதற்கான திட்ட அறிக்கைகள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் இருந்து பெறப்பட்டு நிபுணர் குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டு அவர்களின் பரிந்துரையின்படி நிதி வழங்கப்படும்.

நம்முடைய மாணவர்களின் ஆராய்ச்சி திறமையை மேம்படுத்தவும், புதிய கண்டுபிடிப்புகளை தமிழ்நாட்டில் ஊக்கப்படுத்தவும் "CM Research Fellowship" "முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை" திட்டம் தொடங்கப்படும். இதற்கான மாநில அளவில் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தொழில்துறையில் ஏற்பட்டு வரும் நவீன மாற்றங்களுக்கு ஏற்ப ஆசிரியர்கள், மாணவர்களுக்கு உரிய திறன் சார்ந்த பயிற்சி வழங்க ஏதுவாக தொழில் நிறுவனங்களுடன் இணைந்து "ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி" (Faculty Development Programme) வழங்கப்படும்.

சமூக நீதி

சமூக நீதி

பல்கலைக்கழகங்களை வளர்த்தெடுக்கத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது. ஏனென்றால், இது எங்களது முழுப் பொறுப்பு! அதேநேரத்தில், மாநில அரசின் கொள்கை முடிவுகளுக்குக் கட்டுப்பட்டு பல்கலைக் கழகங்கள் செயல்பட வேண்டும். பல்கலைக் கழகங்களின் உண்மையான நோக்கம் என்பது அனைவருக்குமான அறிவுத்தளத்தை செம்மைப்படுத்துவது!
சமூகநீதியை அடித்தளமாகக் கொண்ட சமுதாயத்தில், பகுத்தறிவைக் கூர்மைப்படுத்துவதாக, நம்முடைய கல்வி நிலையங்கள் செயல்பட வேண்டும். அறிவியல் சிந்தனை கொண்ட சமூகத்தையும், அறிவுப்பூர்வமான மாணவர்களையும், உருவாக்கக் கூடிய கடமையைத்தான் பல்கலைக்கழகங்கள் செய்ய வேண்டும்!

நாட்டின் மற்ற மாநிலங்களைவிட நாம் முன்னேற்றம் அடைந்ததற்கும், தனித்துத் தெரிவதற்கும் இத்தகைய கொள்கை விழுமியங்கள்தான் காரணம்! "ஒன்றிய- மாநில அரசு உறவுகள்" குறித்து ஆராய 2007-இல் நியமிக்கப்பட்ட உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி திரு. பூஞ்சி அவர்கள் தலைமையிலான ஆணையம் அளித்துள்ள பரிந்துரையின் அடிப்படையில் எனது தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு "துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும்" மசோதைவை சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கிறோம்.

காட்டமான பேச்சு

காட்டமான பேச்சு

ஏனென்றால், இது மாநில அரசினுடைய உரிமை தொடர்புடைய பிரச்சினை: மாநிலத்தினுடைய பல்கலைக்கழகக் கல்வியுரிமை தொடர்பான பிரச்சினை; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உரிமை! ஆகவே, மாநில அரசின் கொள்கை முடிவுகளை பிரதிபலிக்கும் வகையில் பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும், துணை வேந்தர்களாகிய நீங்கள் எல்லாம் செயல்பட வேண்டும் என்று இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்.சமூகநீதியை அடித்தளமாகக் கொண்ட சமுதாயத்தில், பகுத்தறிவைக் கூர்மைப்படுத்துவதாக, நம்முடைய கல்வி நிலையங்கள் செயல்பட வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+