எட்டிக்கூட பார்க்கலையே! நம்பிக்கையாக அமர்ந்திருந்த எடப்பாடி.. தீர்ப்பு வந்த அந்த நொடி! என்ன செய்தார்
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வந்த நேரத்தில் எடப்பாடி பழனிசாமி கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் இருந்தார். அப்போது எடப்பாடி பழனிச்சாமி என்ன செய்தார் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும், ஜூலை 11ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், 2 ஆயிரத்து 460 உறுப்பினர்களும் ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானங்களும் செல்லுபடியாகக் கூடியவையே என்று தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.
அதேபோல் பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிரான ஓபிஎஸ் தரப்பு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. ஜூலை 11 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும், அதோடு பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த தடை இல்லை என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

நம்பிக்கை
இந்த தீர்ப்பு வந்த நேரத்தில் எடப்பாடி பழனிசாமி கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் இருந்தார். அவர் வீட்டிற்கு வெளியே மிகப்பெரிய அளவில் கூட்டம் இருந்தது. அவரின் வீட்டிற்கு வெளியே தீர்ப்பு வரும் முன்பே பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. தீர்ப்பு சாதகமாக வரும் என்று எடப்பாடிக்கு ஏற்கனவே நம்பிக்கை இருந்ததாக கூறப்படுகிறது. நாம் சட்டப்படிதான் முடிவு எடுத்தோம். நமக்குத்தான் மெஜாரிட்டி இருந்தது. அதனால் நமக்கு சாதகமாகவே தீர்ப்பு வரும் என்று எடப்பாடி பழனிசாமி நம்பிக்கையாக இருந்தாராம்.

வீடு
இதையடுத்தே எடப்பாடி பழனிசாமி சட்டசபைக்கு செல்லாமல் இன்று வீட்டில் இருந்தார். தீர்ப்பு வந்த நேரத்தில் எடப்பாடி பழனிசாமி கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் இருந்தார். தீர்ப்பு வருவதால் அவர் சட்டசபை பக்கமே எட்டிப்பார்க்கவில்லை. இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வமும் சட்டசபைக்கு செல்லவில்லை. தீர்ப்பு காரணமாக.. அவரும் சட்டசபை நிகழ்வுகளை புறக்கணித்தார். இந்த நிலையில்தான் எடப்பாடிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது.

கொண்டாட்டம்
தீர்ப்பு வந்ததும் எடப்பாடிக்கு அவரின் வீட்டிலேயே சுவீட் கொடுக்கப்பட்டது. அங்கே தனது குலதெய்வம் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளார். அந்த மரியாதையை தொடர்ந்து எடப்பாடி சட்டசபைக்கு செல்வதாக முடிவு செய்யப்பட்டது. ஆனால் நாளையே ஓ பன்னீர்செல்வத்தின் மேல்முறையீடு மனு விசாரணைக்கு வர உள்ளது. அதனால் எடப்பாடி பழனிசாமி உடனே பொதுச்செயலர் தேர்தல் முடிவுகளை வெளியிடலாம் என்று முடிவு எடுத்தார். இதையடுத்தே உடனே அவர் அதிமுக அலுவலகம் சென்றார். அதிமுக பொதுக்குழு வழக்கில் வென்ற நிலையில் எடப்பாடி பழனிச்சாமி இன்றே அதிமுகவின் பொதுச்செயலாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

சட்டசபை
அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக அதிமுக தேர்தல் குழு நிர்வாகிகள் அதிகாரப்பூர்வமாகஅறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இவரை எதிர்த்து தேர்தலில் யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. அதனால் அவர் போட்டியின்றி இன்றி பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி சற்று நேரத்தில் சட்டசபைக்கு செல்ல உள்ளார். இன்றே அவர் சட்டசபையில் இருக்கை விவகாரம் குறித்து பேசவும் வாய்ப்புகள் உள்ளன.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications