திருப்பி கேட்டா.. கொடுத்துடுவீங்களா? சட்டென கேட்ட எடப்பாடி.. ஸ்டன் ஆன டாப் தலைகள்.. நொறுங்கிடுச்சே
சென்னை: அதிமுகவில் பிரிந்த தலைவர்கள் எல்லோரும் ஒன்று சேர வேண்டும் என்று டாப் தலைவர்கள் பலர் நினைக்கிறார்களாம். அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், சி.வி.சண்முகம், தங்கமணி, வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட முக்கிய பெரிய தலைகள் எல்லாம் இந்த கோரிக்கையை வைக்க தொடங்கி உள்ளனராம். அதிமுகவில் இது புதிய பூகம்பத்தை கிளப்பி உள்ளது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வந்த காலத்தில் இருந்து வரிசையாக அக்கட்சி தோல்விகளை தழுவி வருகிறது. வரிசையாக 10 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்து உள்ளது.

அதன்படி 2017 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், அதே ஆண்டு 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல், 2020 ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2021 ஆம் ஆண்டு நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022 ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், 2020ல் நடந்த கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தல் என மொத்தம் 9 தோல்விகளை எடப்பாடி தலைமையிலான அதிமுக சந்தித்தது. இன்றோடு 10வது தேர்தலில் தோல்வி அடைந்து உள்ளது. .
இப்படிப்பட்ட நிலையில்தான், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், சி.வி.சண்முகம், தங்கமணி, வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட முக்கிய பெரிய தலைகள் எல்லாம், அதிமுக தலைமையில் ஒரு வலுவான கூட்டணி 2026 தேர்தலில் உருவாக வேண்டுமானால் அதிமுகவில் பிளவு இருக்கக்கூடாது என்று நினைக்கிறார்களாம்.
அதனால் பிரிந்து சென்றவர்களை, நம்மால் நீக்கப்பட்டவர்களை எல்ல்லோரையும் மீண்டும் நாம் கட்சியில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு அணியாக நின்று எடப்பாடியிடம் வலியுறுத்தி பார்த்தனர். ஆனால், எடப்பாடியோ இதற்கு மசியவில்லை. சீனியர்களின் அபிலாஷைகளை மறுத்த எடப்பாடி, அவர்களை மீண்டும் சேர்த்தால் நீங்கள் மீண்டும் அடிமையாவீர்கள்.
இது உங்களுக்கு ஏற்புடையதா? கடந்த காலங்களில் சம்பாதித்து சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்களில் கனிசமானவைகளை கேட்டு மிரட்டுவார்கள். உங்களால் கொடுத்துவிட முடியுமா? உங்களில் சில பேரிடம் ஜெயலலிதா அம்மா இருக்கும் போது, கனமான தொகையை கொடுத்து வைத்திருந்தார் சசிகலா. அதை திரும்பக் கேட்பார். திருப்பிக் கொடுக்க இஷ்டமா?
மன்னார்குடி தரப்பை சேர்த்தால் இதெல்லாம் நடக்கும். இதில் உங்களுக்கு சம்மதம் எனில் கட்சியின் பொதுக்குழுவை கூட்டுவோம் ; ஓட்டெடுப்பு நடத்தலாம். பொதுக்குழு ஒப்புக்கொண்டால் அடுத்ததை பற்றி முடிவு எடுப்போம்'' என்று சொல்ல, அதனை ஏற்கவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் தடுமாறியிருக்கிறார்கள் சீனியர்கள்.
இந்த நிலையில், இந்த விவகாரத்தை ஓ.பி.எஸ்.சுக்கும் சசிகலாவுக்கும் பாஸ் செய்த சீனியர்களில் இருவர், ’’அதிமுக பிரிந்து கிடந்தால் அது திமுகவுக்கு லாபம். அதனால் எடப்பாடியுடன் திமுக தலைமை ரகசிய உறவில் இருக்கிறது. அதனால் தான் பிரிந்தவர்களை சேர்க்க எடப்பாடி தடை போடுகிறார்’’ என்று சொல்லியிருக்கிறார்கள். இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த ஓபிஎஸ், இது தான் சங்கதியா? என்று நினைத்து, அதிமுகவை ஒன்றிணையாமல் தடுக்கிறது திமுக என்று கடுமையாக தற்போது குற்றம் சாட்டி வருகிறார் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications