ஓபிஎஸ்க்கு செம்ம ட்விஸ்ட்.. தீர்ப்பு வந்தவுடன் ஒரு நொடி கூட தாமதிக்காமல் ஈபிஎஸ் செய்த தரமான சம்பவம்
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வந்த போது சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமி ஒரு நொடி கூட தாமதிக்காமல் நேராக அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்று பொதுச்செயலாளராக பதவியேற்றுக் கொண்டார்.
தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இப்படி அதிமுக பொதுச்செயலாளராக தீர்ப்பு வந்த நொடியே பதவியேற்பார் என்று, ஓபிஎஸ் உள்பட யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். தீர்ப்பு வந்த அடுத்த நொடியே, அவ்வளவு விரைவாக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற ட்விஸ்ட்டை அதிமுகவினரே ஆச்சர்யத்துடன் பார்க்கிறார்கள்.
கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் கட்சியிலிருந்து நீக்கியது, பொது செயலாளர் பதவி உருவாக்கம் உள்ளிட்ட தீர்மானங்களை எதிர்த்து மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களில் அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.குமரேஷ் பாபு உத்தரவிட்டிருந்தார்.

தன்னிச்சை
இதனிடையே அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரி, அவர்கள் மூவருடன் சேர்ந்து ஒ.பன்னீர்செல்வமும் கூடுதல் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி குமரேஷ் பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, எந்த வாய்ப்பும் அளிக்காமல், எந்த காரணமும் கூறாமல் கட்சியிலிருந்து நீக்கியது தன்னிச்சையானது, நியாயமற்றது என்றும், பெரும்பான்மை உள்ளதால் எந்த முடிவும் எடுக்க முடியும் என வாதிடப்பட்டது. தற்போது பொதுக்குழு உறுப்பினர்களாக இருப்பவர்கள் அனைவருமே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரால் நியமிக்கப்பட்டவர்கள் தான் என்றும், தங்களை கட்சியிலிருந்து நீக்கும் தீர்மானம் தொடர்பாக ஜூலை 11 பொது குழுவில் எந்த நிகழ்ச்சி நிரலும் இல்லாத நிலையில், சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர் என்றும் குற்றம்சாட்டப்பட்டது.

எடப்பாடிக்கு எண்ணம்
ஆனால் இந்த சிறப்பு தீர்மானத்தின் மீது எந்த விவாதமும் நடத்தப்படவில்லை. பொது செயலாளர் பதவியை எடப்பாடி பழனிச்சாமி பெறுவதற்காக முக்கிய பதவி வகித்த தன்னை திட்டமிட்டு நீக்கி தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, பொது செயலாளர் தேர்தல் நடத்தி ஒற்றை தலைமையை உருவாக்கும் நோக்கம் மட்டுமல்ல என்றும், போட்டியே இல்லாமல் அந்த பதவிக்கு எடப்பாடி பழனிச்சாமி வர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் ஓபிஎஸ் தரப்பில் குற்றம்சாட்டபட்டது.

தடுக்க முடியாது
அதற்கு அதிமுக தரப்பில், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதும், கட்சி அலுவலகத்தை சூறையாடியதுமே, ஜூலை 11 பொதுக்குழுவில் அவர்களை நீக்க தீர்மானம் நிறைவேற்ற காரணமாக இருந்ததாகவும், கட்சியினரின் குரலாக பொது செயலாளர் தேர்தல் நடப்பதால் அதை தடுக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

பதவிகள் காலியாகவில்லை
பதவிகள் ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதே தவிர, பதவிகள் காலாவதி என அறிவிக்கவில்லை என்றும், கட்சியில் எந்த ஆதரவும் இல்லாதவர்கள் போட்டியிடுவதை தடுக்கவே பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தகுதி நிபந்தனைகள் கொண்டு வரப்பட்டன என்றும் வாதிடப்பட்டது. ஒ.பி.எஸ். ஒருங்கிணைப்பாளராக இருந்தபோது, அவரது சகோதரர் ராஜா, கட்சியின் கர்நாடக மாநில நிர்வாகி பெங்களூரு புகழேந்தி உள்ளிட்டோரை நீக்கும் முன் எந்த நோட்டீசும் கொடுக்கவில்லை, கட்சியை விட்டு நீக்க ஒரே நடைமுறை தான் பின்பற்றப்படுகிறது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.

ஓபிஎஸ் மனுக்கள் தள்ளுபடி
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வழக்குகளின் மீதான தீர்ப்பை கடந்த மார்ச் 22ம் தேதி தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த வழக்குகளில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி கே.குமரேஷ்பாபு, பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் புதிய பொதுச்செயலாளருக்கான தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மிகப்பெரிய கூட்டம்
இந்த தீர்ப்பால் பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது செல்லும் என்பதும் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த தடை இல்லை என்பதும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை வெளியிடவும் தடையில்லை என்பதும் உறுதியானது. இந்த தீர்ப்பு வந்த போது எடப்பாடி பழனிசாமி கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் இருந்தார். தீர்ப்பு எப்படியும் எடப்பாடிக்கே சாதமாக வரும் என்று நம்பி வீட்டிற்கு வெளியே மிகப்பெரிய அளவில் கூட்டம் இருந்தது.

ஈபிஎஸ் தரமான சம்பவம்
தீர்ப்பு வாசித்துக்கொண்டிருக்கும் போதே பட்டாசுகள் வெடித்து கொண்டாடினார்கள். தீர்ப்பு வந்த அடுத்த நொடி கொஞ்சம் கூட தாமதிக்காமல் எடப்பாடி பழனிசாமி நேராக ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்திற்கு விரைந்தார். சட்டசபைக்கு செல்லாமல் அதிமுக தலைமையத்தில் இதற்காகவே காத்திருந்த அதிமுகவில் தேர்தல் ஆணையர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் , எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்தததற்காக சான்றிதழ்களை வழங்கினார்கள். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி அதிமுக நிர்வாகிகள் முன்னிலையில் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார். இதை சற்றும் எதிர்ப்பார்க்காத தொண்டர்கள் உற்சாக மிகுதியில் இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.
-
“வீட்டுச் சிறையில் கருணாநிதி? அதிமுக ஆட்சி அமைந்ததும் விசாரித்து தண்டனை கொடுப்போம்”- எடப்பாடி பேச்சு -
கொத்தாக காலியாகும் டெபாசிட்.. தவெக விஜய்க்கு பெரிய சிக்கல்.. 3 பெரிய சர்வேவில் இருக்கும் வார்னிங்! -
நான் பார்த்துக்கிறேன்.. எடப்பாடிக்கு போனை போட்ட டிடிவி தினகரன்.. போனை எடுக்கலையாமே.. ஏன்? -
சுந்தர்.சி-க்காக தேர்தல் பணியில் இறங்கிய மன்னன் டீம்! மதுரை மத்தியில் பலன் அளிக்குமா அதிமுக வியூகம்? -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
வேல்முருகனுக்கு ஷாக்! கேபி முனுசாமி முன்னிலையில் அதிமுகவுக்கு ‘டைவ்’ அடித்த தவாகா வேட்பாளர்! -
"அம்மாவின் அன்பு! என்றும் அம்மாவின் நினைவில்!" அவிநாசி தனபால் திடீர் உருக்கம்! இபிஎஸ்ஸுக்கு மெசேஜா? -
தவெக கட்சியினருக்கு ஷாக்! கரூர் வழக்கில் கைதாகி ஜாமீனில் இருந்த மாசி பவுன்ராஜ் அதிமுகவில் இணைந்தார்! -
ஏ.சி.சண்முகம் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக தலைமை.. தாமரை சின்னத்தில் போட்டியிட சீட் இல்லை! -
இலவச திட்டங்களுக்கு எத்தனை கோடி செலவாகும்? திமுக.. அதிமுக.. தவெக..? யார் டாப்? -
கைவிட்டு போன அவிநாசி.. தவெகவுக்கு தாவிய மகன்! முன்னாள் சபாநாயகர் தனபால் கொடுத்த விளக்கம்! -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications