சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"வண்டியை எடுங்க".. மதுரைக்கு காரை கிளப்பிய ஓபிஎஸ்.. வீட்டுக்கு வெளியே வந்ததும்.. நடந்த பரபர சம்பவம்!

Google Oneindia Tamil News

சென்னை: தென் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் விதமாக சென்னையில் இருந்து மதுரைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இன்று புறப்பட்டார்.

அதிமுகவில் ஓபிஎஸ் - இபிஎஸ் மோதல் உச்சம் பெற்றுள்ளது. கடந்த மாதம் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றை தலைமை விவகாரம் லேசாக உருவான நிலையில் பொதுக்குழுவில் இந்த விவகாரம் உச்சம் அடைந்தது.

பெரும்பாலான அதிமுக நிர்வாகிகள் எடப்பாடி பக்கம் நிற்கும் நிலையில், ஓ பன்னீர்செல்வம் பொதுக்குழுவில் அசிங்கப்படுத்தப்பட்டு வெளியே அனுப்பப்பட்டார்.

தெற்கை நோக்கி ஓபிஎஸ்.. 7 இடங்களில் 'இறங்கி’ பவரை காட்ட.. ஆரம்பம்தான்.. பெரியகுளம் குலுங்கப்போகுதாம்! தெற்கை நோக்கி ஓபிஎஸ்.. 7 இடங்களில் 'இறங்கி’ பவரை காட்ட.. ஆரம்பம்தான்.. பெரியகுளம் குலுங்கப்போகுதாம்!

பயணம்

பயணம்

இந்த நிலையில் தற்போது அதிமுகவில் தொண்டர்களின் ஆதரவை பெறும் வகையில் தென் மாவட்டங்களுக்கு ஓ பன்னீர்செல்வம் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். முக்குலத்தோர் பிரிவினர், தென் மாவட்ட அதிமுக நிர்வாகிகள், தன்னுடைய கேம்பில் இருந்து எடப்பாடி கேம்பிற்கு சென்றவர்கள் ஆகியோருடன் ஆலோசனை செய்ய ஓபிஎஸ் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதன் ஒரு கட்டமாக இன்று காலை அவர் மதுரைக்கு புறப்பட்டார். 11 மணி அளவில் அவர் வீட்டில் இருந்து கார் ஏறினார்.

மதுரை

மதுரை

இன்று மதுரை செல்லும் அவர்.. தென் மாவட்ட நிர்வாகிகளை இன்று இரவில் இருந்து சந்திக்க உள்ளார். நெல்லை, விருதுநகர் மாவட்ட நிர்வாகிகளையும் ஓபிஎஸ் சந்திக்க உள்ளார். அதன்பின் அங்கிருந்து தேனி செல்லவும் ஓபிஎஸ் திட்டமிட்டு உள்ளார். நீண்ட பயணமாக இதை மேற்கொள்ள அவர் முடிவு செய்துள்ளார். டெல்லி சென்றுவிட்டு திரும்பிய உற்சாகத்தில் ஓபிஎஸ் இந்த பயணத்தை மேற்கொள்வதாக கூறப்படுகிறது.

கார்

கார்

இந்த நிலையில் இன்று காலை மதுரைக்கு கார் ஏற வீட்டில் இருந்து ஓபிஎஸ் வெளியே வந்தார். அப்போது இடது பக்கமாக வருவதை தவிர்க்க விரும்பி.. வலம்பக்கம் வழியை அடைத்துக்கொண்டு நின்ற நிர்வாகிகளை நகரும்படி கூறினார். அவர்கள் நகர்ந்த பின் மெதுவாக வெளியே வந்த ஓபிஎஸ் வண்டியை எடுங்க என்று குரல் கொடுத்தார். அதற்குள் அவரின் ஆதரவாளர்கள் அவரை சூழ்ந்து கொண்டு கோஷம் எழுப்பினார்கள்.

 மக்கள் தலைவர்

மக்கள் தலைவர்

மக்கள் தலைவர் ஓபிஎஸ்.. அம்மாவின் தொண்டன் ஓபிஎஸ்.. அதிமுகவின் உண்மையான தலைவர் ஓபிஎஸ் என்று கோஷம் எழுப்பினார்கள். அங்கிருந்து காரை அவர் எடுக்க முயன்ற போது.. ஒரு நிர்வாக மட்டும் ஓபிஎஸ் கையை பிடித்துக்கொண்டு விடாமல் வருந்தினார். பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ்ஸுக்கு நேர்ந்த அவமானத்திற்கு மன்னிப்பு கேட்டார். இதற்கு நாம் முடிவு கட்ட வேண்டும் என்று மிகவும் உருக்கமாக கலக்கத்தோடு கூறினார்.

Recommended Video

    இரட்டை தலைமை அதிமுகவுக்கு ஒத்துவராது - Thirunavukkarasar கருத்து | Politics
    என்ன நடந்தது

    என்ன நடந்தது

    இதை கேட்ட ஓபிஎஸ் பார்த்துக்கொள்ளலாம்.. கவலை பட வேண்டாம். எல்லாம் சரி செய்யலாம் என்று குறிப்பிட்டார். அதன்பின் மகளிர் அணி நிர்வாகிகள் ஓபிஎஸ்ஸை சூழ்ந்து கொண்டனர். அவரை நீங்க போயிட்டு வாங்க ஐயா.. உங்களுக்குத்தான் எங்க ஆதரவு என்று குறிப்பிட்டு வழி அனுப்பி வைத்தனர். மதுரையில் தென் மாவட்ட நிர்வாகிகளை சந்திக்கும் வகையில் ஓபிஎஸ் பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் அவர் பலரை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    What did happen outside O Panneerselvam's house ahead of his Madurai trip today? தென் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் விதமாக சென்னையில் இருந்து மதுரைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இன்று புறப்பட்டார்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X