சென்னை மெட்ரோ தூண் கட்டுமானம் சரிந்தது எப்படி? ஒருவர் பலி! உண்மையில் நடந்தது என்ன? வெளியான தகவல்
சென்னை: சென்னை ராமாபுரம் பகுதியில் மெட்ரோ ரயில் கட்டுமான விபத்தில் இரண்டு பெரிய தூண்கள் சரிந்து விழுந்தன. இதனால் பூந்தமல்லி மவுண்ட் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போரூர் அருகே டி.எல்.எஃப் பகுதியில் சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட கட்டுமானப் பணியின்போது ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்திற்கான காரணம் குறித்து சி.எம்.ஆர்.எல் விளக்கம்
இதுகுறித்து சி.எம்.ஆர்.எல் விளக்கம் அளித்துள்ளது. அதில், "மணப்பாக்கம் எல்&டி தலைமை அலுவலகம் அருகே ஒரு வாரத்திற்கு முன்பு அமைக்கப்பட்டிருந்த இரண்டு ஐ- girders வழுக்கியதால் ஆதரவு கொடுக்கப்பட்ட A- சட்டகத்தில் ஒன்று எதிர்பாராதவிதமாக சரிந்து விழுந்தது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சி.எம்.ஆர்.எல் நிறுவனமும், அதன் ஒப்பந்ததாரர்களும் இணைந்து போர்க்கால அடிப்படையில் இடிபாடுகளை அகற்றி வருகின்றனர். இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து வருத்தம் தெரிவித்துள்ள சி.எம்.ஆர்.எல் அதிகாரிகள், "இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததை உறுதிப்படுத்துகிறோம். இதுகுறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளனர்.
சம்பவ இடத்தில் உயிரிழந்தவர் ஒரு இருசக்கர வாகன ஓட்டி என்றும், அந்த வாகனத்தில் பின்னால் யாரேனும் பயணித்தார்களா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள சி.எம்.ஆர்.எல் நிர்வாகம், இந்த விபத்து குறித்து முழுமையாக விசாரிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளது.
இந்த விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இடிபாடுகளை சீர் செய்யும் பணியும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
மெட்ரோ பணிகள் ராமாபுரத்தில் தீவிரம்
சமீபத்தில்தான் இந்தியாவின் முதல் 33.33 மீ நீளமுள்ள U-கர்டர் சென்னை மெட்ரோ இரயில் கட்டம் II-ல் வழித்தடம் 5-ல் ராமாபுரத்தில் நிறுவப்பட்டது. இது இந்திய மெட்ரோ கட்டுமானத்தில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க பொறியியல் சாதனை ஆகும் மற்றும் இந்திய உள்கட்டமைப்பில் ஒரு முக்கிய நிகழ்வு ஆகும். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், பொது ஆலோசகர்கள், AEON மற்றும் கட்டுமான ஒப்பந்ததாரர் L&T உடன் இணைந்து நாட்டின் முதல் 33.33 மீட்டர் நீளமுள்ள U-கர்டரை வெற்றிகரமாக நிறுவியுள்ளது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இந்த மைல்கல் பொறியியல் சாதனை, இந்திய மெட்ரோ இரயில் திட்டங்களின் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
225 மெட்ரிக் டன் எடையுடன் உருவாக்கப்பட்ட இந்த U-கர்டர், ஒரு முக்கியமான பொறியியல் சாதனையாகவும் மற்றும் கட்டுமான குழுவின் தொழில்நுட்ப திறன், புதுமை மற்றும் செயல்படுத்தும் திறன்களுக்கு ஒரு முக்கிய சான்றாகவும் உள்ளது.
பொதுவாக போக்குவரத்து சந்திப்புகள் மற்றும் U-டர்ன் பகுதிகளில், எதிர்கால போக்குவரத்து தேவைகளை கருத்தில் கொண்டு நீளமான ஸ்டீல் கர்டரை பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், L&T தலைமை அலுவலகம் முன்பு அமைந்துள்ள இந்த இடத்தில், ஸ்டீலுக்கு பதிலாக நீளமான U-கர்டரை பயன்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம், இந்திய மெட்ரோக்களில் இதுவே மிகவும் நீளமான U-கர்டர் ஆகும். மேலும், இது அழகியல் ரீதியாகவும் சிறப்பாக அமைந்துள்ளது .
இந்த முயற்சியின் முக்கிய சவால்கள் U-கர்டருக்கான அச்சுகள் வடிவமைத்தல், அவை பாதுகாப்பாக கொண்டு செல்லுதல் மற்றும் துல்லியமாக நிறுவுவது ஆகியவையாகும்.












Click it and Unblock the Notifications