74.. 400.. 500.. அதிமுகவில் 2 பெரிய "தலைகளுக்கு" ஸ்டாலின் குறி! நடக்கட்டுமே.. ஓபிஎஸ் கிரீன் சிக்னல்!
சென்னை: அதிமுகவில் மாஜி அமைச்சர்கள் அடுத்தடுத்து ரெய்டுகளிலும், வழக்குகளிலும் சிக்கி வருகிறாரக்ள். இந்த நிலையில்தான் ஓ பன்னீர்செல்வம் இதை பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் பல்வேறு அமைச்சர்கள் முறைகேடு வழக்குகளில் சிக்கி உள்ளனர். மாஜி அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர், காமராஜ் உள்ளிட்ட பலர் தொடர்ந்து வழக்குகளிலும், ரெய்டுகளிலும் சிக்கி வருகின்றனர்.
முன்னதாக கடந்த வருடம் அக்டோபர் மாதம் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடந்தது. சென்னை வீடு உள்பட 43 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடந்தது.
விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட இந்த ரெய்டு முக்கியமானதாக பார்க்கப்பட்டது.

ரெய்டு
கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2021 ஏப்ரல் மாதம் வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இவர் மீது வழக்கு பதியப்பட்டது. வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் சொத்து குவித்ததாக வழக்கு பதியப்பட்டது. சி.விஜயபாஸ்கர் மனைவி மீதும் வழக்கு பதியப்பட்டது. 2016க்கு பின் 27 கோடி ரூபாய் வரை இவர் முறைகேடாக சொத்து சேர்த்து இருக்கிறார் என்று புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் விசாரணை முடியும் முன் அவர் மீது வேறு வழக்கு போடப்பட்டு உள்ளது.

என்ன வழக்கு
ஊத்துக்கோட்டையில் கட்டப்பட்டு வந்த வேல்ஸ் மருத்துவ கல்லூரிக்கு, அது கட்டப்படும் முன்பே முழுமையாக செயல்படும் சான்றை கொடுத்துள்ளதாக இவர் மீது புகார் வகுக்கப்பட்டு உள்ளது. இதற்காக சில நாட்களுக்கு முன் அவரின் வீட்டில் மீண்டும் ரெய்டு நடத்தப்பட்டது. 13 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. இன்னொரு பக்கம் மாஜி அமைச்சர் எஸ்.பி வேலுமணி ரெய்டில் சிக்கி உள்ளார். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முன்னாள் அமைச்சர் எஸ். பி வேலுமணிக்கு சொந்தமான வீடு அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. 60 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையை தொடர்ந்து மொத்தம் எஸ். பி வேலுமணி உட்பட 17 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது

வேலுமணி
இவருக்கு எதிராக வருமானத்துக்கு அதிகமாக 58.23 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதில் இரண்டாவது முறையும் இவர் மீது ரெய்டு நடத்தப்பட்டது. இந்த நிலையில்தான் சமீபத்தில் அவர் மீண்டும் ரெய்டுக்கு உட்படுத்தப்பட்டார். 5 மாவட்டங்களில் தெரு விளக்குகளை எல்.இ.டி பல்புகள் ஆக மாற்றியதில் 500 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக இவர் மீது புகார் உள்ளது. சந்தை விலையை விட அதிக விலைக்கு இவர் பல்புகளை வாங்கியதாக புகார் வைக்கப்பட்டு, அது தொடர்பாக ரெய்டு நடத்தப்பட்டது.

என்ன சொன்னார்?
மொத்தம் 400 அதிகாரிகள் இவர்கள் இருவரின் வீடுகளிலும் ரெய்டு நடத்தினர். எஸ்.பி வேலுமணி, விஜயபாஸ்கர் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்ட நிலையில், ஓ பன்னீர்செல்வம் இதை பற்றி பேசி உள்ளார். அதில், அரசு தன் கடமையைத்தான் செய்கிறது. இதில் தவறு இல்லை. தவறு இல்லை என்றால் அவர்கள் அச்சப்பட வேண்டியது இல்லை. யார் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதோ அவர்கள் மீதான குற்றத்தை நிரூபிக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது, அதற்குத்தான் ரெய்டு நடக்கிறது என்று ஓ பன்னீர்செல்வம் இந்த ரெய்டை வரவேற்று உள்ளார்.
-
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
சிவி சண்முகம் எங்களுடன் தான் இருக்காரு.. அதிமுகவில் கருத்து வேறுபாடு சரியாகிவிட்டது.. எஸ்பி வேலுமணி! -
தேன்கூட்டில் கல்லெறிந்ததா தவெக? வேலுமணி கிட்ட சிவி சண்முகம் கேட்ட அந்த கேள்வி? அப்ப எடப்பாடி முடிவு? -
எடப்பாடிக்கு டிமிக்கி கொடுக்கும் 11 பேர்.. எஸ்கேப்பாகும் வேலுமணி.. அதிர்ச்சிக்கு ரெடியாகிறதா அதிமுக? -
கண்கள் பனித்தது.. இதயம் இனித்தது! எடப்பாடி தான் எங்களுக்கு பொதுச் செயலாளர்! யூடர்ன் அடித்த வேலுமணி! -
கொக்கு போல் காத்திருந்த எடப்பாடி.. சீனியர்களை சின்னாபின்னாம்மாக்கி மாஸ்! இப்படி ஒரு ப்ளானா? சூப்பர்! -
எஸ்.பி.வேலுமணியிடம் சீறிப்பாய்ந்த சி.வி.சண்முகம்.. எல்லா பிரச்சனைக்கும் நீங்க தான் காரணம்! -
சிரித்து சமாளித்த எடப்பாடி.. வேலையைக் காட்டிய வேலுமணி! வெறுப்பில் சிவி சண்முகம்! இனிமே தான் ட்விஸ்ட் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக












Click it and Unblock the Notifications