ரெடியா இருங்க.. ஓபிஎஸ் வீட்டில் குவிந்த 300 பேர்.. எல்லோருக்கும் போன "ரகசிய" கட்டளை.. கேம் மாறுதே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிங்களுடன் ஓ பன்னீர்செல்வம் முக்கியமான ஆலோசனை ஒன்றை மேற்கொண்டார்.

அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சத்தில் உள்ளது. அதிமுகவில் கடந்த 3 நாட்களாக ஓ பன்னீர்செல்வம் அடித்து ஆட தொடங்கி உள்ளார். ஒரு பக்கம் அதிமுக பொதுக்குழுவிற்கு எதிரான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

அதோடு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தான்தான் என்று ஓ பன்னீர்செல்வம் இன்னமும் கூறி வருகிறார். அப்படி சொல்வது மட்டுமின்றி கட்சியில் புதிதாக 14 மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்து அறிவிப்பும் வெளியிட்டார்.

சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல முக்கியமான மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்து ஓ பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

 ஓபிஎஸ் ஆலோசனை

ஓபிஎஸ் ஆலோசனை

இந்த நிலையில் ஓபிஎஸ் வீட்டில் இன்று அதிகாலை 300க்கும் அதிகமானோர் கூடினார்கள்.புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் 14 பேரும் நேற்று இரவு ஓபிஎஸ் வீட்டில் கூடி அவரிடம் ஆலோசனை செய்தனர். நீண்ட நேரம் இவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த நிலையில் இன்று காலை மீண்டும் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் தங்களின் ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் வீட்டிற்கு வந்தனர். ஓபிஎஸ்ஸை சந்தித்து இவர்கள் நீண்ட நேரம் உரையாற்றினார்கள்.

நீண்ட நேரம் உரையாடினார்

நீண்ட நேரம் உரையாடினார்

இந்த சந்திப்பில்.. எடப்பாடி நினைப்பது நடக்காது. அவரே பொதுக்குழுவை கூட்டி.. அவரே பதவிகளை அறிவிப்பது எப்படி சரியாகும். அவர் வைத்ததுதான் சட்டமா? நீங்க கவலைப்படாதீங்க. உங்க பக்கம் நாங்க இருக்கிறோம். இப்போ நிலைமை சரி இல்லை என்றாலும், வரும் நாட்களில் எல்லாம் சரியாகிவிடும். கவலைப்படாதீங்க என்று ஓபிஎஸ்ஸுக்கு தொண்டர்கள் ஆறுதலாக ஆலோசனை சொல்லி இருக்கிறார்கள்.

நிலைமை சரியில்லை

நிலைமை சரியில்லை

இந்த சந்திப்பில் தொண்டர்களுக்கு ஓபிஎஸ் இரண்டு முக்கியமான கட்டளைகளை இட்டதாக கூறப்படுகிறது. முதல் விஷயம்.. போட்டி பொதுக்குழு. அதாவது தற்போது அதிமுகவில் ஓபிஎஸ் சார்பாக புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வரும் நாட்களில் அதிமுகவில் மேலும் பல புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படுவார்கள். அதேபோல் தலைமை கழக நிர்வாகிகள் பலர் வரும் நாட்களில் நியமிக்கப்படுவார்கள். இணை ஒருங்கிணைப்பாளரும் நியமிக்கப்பட்டு விட்டார்.

இரண்டு கட்டளை

இரண்டு கட்டளை

இவர்களை எல்லாம் வைத்து அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு போட்டியாக தனியாக பொதுக்குழுவை நடத்தும் திட்டத்தில் ஓ பன்னீர்செல்வம் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. பெரும்பாலும் சென்னை வானகரத்திலேயே பொதுக்குழு நடக்கும் என்று கூறப்படுகிறது. இந்த போட்டி பொதுக்குழு குறித்து புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளிடம் நேற்று ஓபிஎஸ் பேசியதாக கூறப்படுகிறது. நேற்று ஆலோசனையில் பேசப்பட்ட இன்னொரு விஷயம் அடுத்த மாதம் எடப்பாடி மேற்கொள்ள இருக்கும் தென் மாவட்ட பயணத்தை முடக்குவது பற்றியது.

Recommended Video

    Nasar Attacks | பால் குடிக்கும் பூனையா நான்? *Politics | Oneindia Tamil
    தென் மாவட்ட பயணம்

    தென் மாவட்ட பயணம்

    அடுத்த மாதம் கடைசி வாரம் எடப்பாடி பழனிசாமி சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு வருகிறார். மருது பாண்டியர்கள் நினைவு தினத்தில் அவருக்கு மரியாதையை செலுத்த எடப்பாடி செல்கிறார். இந்த பயணத்தில் அவருக்கு கடுமையான எதிர்ப்பை கொடுக்க வேண்டும். தென் மாநிலத்தில் உள்ள முக்குலத்தோர் சொந்தங்கள் எல்லாம் எடப்பாடியை எதிர்க்க தயாராக இருக்க வேண்டும், என்று ஓபிஎஸ் இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்டளையிட்டதாக கூறப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+