சட்டென சிவகார்த்திகேயன் பக்கம் வந்த மோடி.. அடுத்த நொடி நடந்த சம்பவம்.. இதெல்லாம் லிஸ்டுலேயே இல்லையே
சென்னை: மத்திய இணையமைச்சர் எல் முருகன் இல்ல பொங்கல் விழாவில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி பங்கேற்று உள்ளனர். இந்த நிகழ்வில் நடந்த சுவாரசியமான சம்பவம் ஒன்று கவனம் பெற்றுள்ளது.
பிரதமர் மோடி பங்கேற்கும் விழாவில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி பங்கேற்று உள்ளனர். பிரதமர் மோடி டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நடைபெறும் பொங்கல் விழாவில் கன்றுகளுக்கு உணவு வழங்கினார். பொங்கல் வைத்து ஆரத்தி காண்பித்து வழிபாடு நடத்தினார்.

சமீபத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி நடிப்பில் பராசத்தி படம் வெளியானது. இந்த படம் இந்தி திணிப்பிற்கு எதிரான படம் ஆகும். இந்த படத்தின் வெளியீட்டிற்கு பின் திமுக இருப்பதாக விவாதங்கள் நடக்கின்றன. முக்கியமாக திமுகவின் மாபெரும் தலைவர்கள் அண்ணா, கருணாநிதி வாழ்க்கை பற்றிய காட்சிகளும் படத்தில் வருகின்றன.
சிவகார்த்திகேயன் இதன் மூலம் திமுக உடன் நெருக்கமாகிவிட்டதாக கூறப்படும் நிலையில்தான்.. மத்திய இணையமைச்சர் எல் முருகன் இல்ல பொங்கல் விழாவில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி பங்கேற்று உள்ளனர்.
சுவாரசிய சம்பவம்
இந்த நிகழ்வில் நடந்த சுவாரசியமான சம்பவம் ஒன்று கவனம் பெற்றுள்ளது. மோடி நிகழ்விற்கு இடையே திடீரென நடிகர் சிவகார்த்திகேயனிடம் சென்று பேசியது குறிப்பிடத்தக்கது. அமரன் படம் மூலம் சிவகார்த்திகேயன் தேசிய அளவில் கவனம் பெற்ற நிலையில்.. அவர் மோடியிடம் இயல்பாக பேசினார். சிவா அருகே சென்று சட்டென்று மோடி சிரித்தபடி அவரின் கையைப்பிடித்து பேசியது பலரின் கவனத்தை திருப்பியது.
இதையடுத்து அங்கு செய்தியாளர்களை சந்தித்த சிவகார்த்திகேயன், தனது 'பராசக்தி' திரைப்படம் எதிர்கொண்ட தணிக்கைச் சிக்கல்கள் மற்றும் நடிகர் விஜய்யின் 'ஜன நாயகன்' பட ரசிகர்களுக்கிடையே நடந்த மோதல்கள் குறித்து அவர் பேசினார்.
ஜனவரி 10 அன்று 'பராசக்தி' வெளியானது. ஆரம்பத்தில், விஜய்யின் 'ஜன நாயகன்' படமும் அதே நாளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால, தணிக்கைச் சான்றிதழ் தாமத்தால் அது தள்ளிப்போனது. இந்த மோதலைப் பிரச்சாரத்திற்காகவோ, சர்ச்சைகளுக்காகவோ பயன்படுத்த விரும்பவில்லை என்று சிவகார்த்திகேயன் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
சிவகார்த்திகேயன் பேச்சு
விஜயை தனது சகோதரர் என்று குறிப்பிட்ட சிவகார்த்திகேயன், சமீபத்திய சமூக ஊடக ரசிகர் மோதல்கள் குறித்து கருத்து தெரிவித்தார். "சில ரசிகர்கள் பேசிக்கொள்வதைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. அதை பொதுமைப்படுத்தவும் வேண்டியதில்லை. அது ஒரு பிரச்சனை அல்ல. நாங்கள் எப்போதும் சகோதரர்களாகவே இருப்போம், இது அப்படியே தொடரும்," என அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
தனது 'பராசக்தி' படத்தின் மையக்கருத்து குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த சிவகார்த்திகேயன், "அதில் சர்ச்சை இல்லை. மக்கள் அதைப் புரிந்துகொண்டு சரியான வழியில் எடுத்துக்கொள்கிறார்கள். நாங்கள் எதைச் சொல்ல நினைத்தோமோ, அது மக்களைச் சென்றடைகிறது. படத்தை முழுமையாகப் பார்த்தால், அவர்களுக்குப் புரியும். இதில் பிரச்சாரம் இல்லை; எனக்கு எந்தப் பிரச்சார நோக்கமில்லை. நாமெல்லாம் சகோதரர்கள்; நாங்கள் புதிதாக எதையும் சொல்ல முயற்சிக்கவில்லை," என்று உறுதிபடத் தெரிவித்தார்.
பொங்கல் விழாவின்போது, மத்திய அமைச்சர் எல். முருகனும், பிரதமர் நரேந்திர மோடியும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து கொண்டனர். அதே சமயம், நடிகர் விஜய்யின் அரசியல் பயணத்திற்கும் சிவகார்த்திகேயன் வாழ்த்தினார். "அவரது அரசியல் பயணம் சிறக்க தனிப்பட்ட முறையிலும், சமூக ஊடகங்கள் வாயிலாகவும் வாழ்த்து தெரிவித்தேன். அவரது படம் விரைவில் வெளியாகும்," என்று கூறிய அவர், 'ஜன நாயகன்' படத்தின் தயாரிப்பாளர்கள் தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடத்தி வரும் போராட்டத்தையும் சுட்டிக்காட்டினார்.












Click it and Unblock the Notifications