"மேடம்" வீடு மாதிரியே இருக்கு.. இனி நல்லதே நடக்கும்.. சசிகலாவிடம் சொன்ன ரஜினி.. அப்செட்டான எடப்பாடி
சென்னை: போயஸ் கார்டனில் புதிதாக கட்டியுள்ள புதிய இல்லத்தில் நேற்று ஜெயலலிதாவின் பிறந்த நாளை கொண்டாடினார் சசிகலா. அப்போது அவரை சந்தித்து அவருக்கு வாழ்த்துச் சொன்னார் ரஜினி காந்த். இவர்கள் இருவரும் சில நிமிடங்கள் அந்த வீடு பற்றி சுவாரசியமாக பேசி உள்ளனர்.
அரசியல் என்பது அடையாளம் சார்ந்தது.. ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் ஒரு அடையாளம் இருக்கும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அப்படி ஒரு அடையாளமாக இருந்த வீடுதான் போயஸ் கார்டன் வேதா இல்லம். ஜெயலலிதா போயஸ் கார்டன் வீட்டின் பால்கனியில் வந்து நின்றாலே அதிமுக தொண்டர்கள் இடையே அது பெரிய உணர்ச்சி பெருக்கை ஏற்படுத்தும்.

இதேபோன்ற அடையாளம் தனக்கும் வேண்டும்.. இதேபோல் போயஸ்கார்டனை தனது அரசியல் அடையாளமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் சசிகலாவிற்கும் இருந்தது.
சசிகலா வீடு: ஆனால் சசிகலா சிறையில் இருந்தே போதே அவசர அவசரமாக இந்த வேதா இல்லம் அரசு நினைவு இல்லமாக மாற்றப்பட்டது. பல கனவுகள் கலைந்தது போல மீண்டும் போயஸ் கார்டனில் வேதா இல்லம் சென்று கையசைக்கும் கனவும் சசிகலாவிற்கு நிறைவேறாமல் போனது. வேதா இல்லத்திற்கு மீண்டும் செல்ல முடியவில்லை என்றாலும், அதே போயஸ் கார்டன் பகுதியில் சசிகலா தனக்காக புதிய மாளிகை ஒன்றை கட்டி தற்போது போயஸ் கார்டனில் குடியேறி உள்ளார்.
ரஜினி வாழ்த்து: போயஸ் கார்டனில் புதிதாக கட்டியுள்ள புதிய இல்லத்தில் நேற்று ஜெயலலிதாவின் பிறந்த நாளை கொண்டாடினார் சசிகலா. அப்போது அவரை சந்தித்து அவருக்கு வாழ்த்துச் சொன்னார் ரஜினி காந்த். இந்த சம்பவம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜெயலலிதா பிறந்த நாளுக்கு சசிகலாவிடம் வாழ்த்துச் சொன்ன ரஜினி, இனி நீங்கள் நினைத்தது எல்லாம் நடக்கும்.
மேடம் (ஜெயலலிதா) வசித்த வேதா இல்லம் மாதிரியே வடிவமைத்துள்ளீர்கள். அவரது ஆசி உங்களுக்கு எப்போதும் இருக்கும். அரசியலில் இனிதான் உங்களுக்கு ஆரோக்கியமானவை. இந்த வீடு கோயில் மாதிரி இருப்பதால் நினைத்ததெல்லாம் நடக்கும் என்று வாழ்த்தியிருக்கிறார் ரஜினி.
அவரது வாழ்த்தில் மிகவும் மகிழ்ந்துபோன சசிகலா, ரொம்ப ரொம்ப நன்றிங்க ! என் சொந்த சகோதரர் வாழ்த்தியது போல மகிழ்ச்சியாக இருக்கிறது என்றிருக்கிறார் சசிகலா. அவருக்கு சின்னதாக ஒரு கிப்ட்டும் வழங்கினார் ரஜினி. வீட்டை அவருக்கு சுத்திக்காட்டினார் சசி.
எதற்காக கட்டப்பட்டது: ஒவ்வொரு அறையும் எதற்காக கட்டப்பட்டது என்பதையும் ரஜினியிடம் சொல்ல, ஆர்வமாக கவனித்தாராம் ரஜினி. கிரஹப்பிரவேசத்துக்கு ரஜினியை அழைத்திருந்திருக்கிறார் சசிகலா. அன்றைக்கு சூட்டிங் விசயமாக வெளியூரில் இருந்ததால் ரஜினியால் வரமுடியவில்லை. அதனால் இப்போது வந்து சசிகலாவை வாழ்த்தியிருக்கிறார் ரஜினி.
சுமார் 30 நிமிடங்கள் அங்கிருந்து விட்டு தங்கள் வீட்டுக்கு புறப்பட்ட ரஜினி, வாய்ப்பு கிடைக்கும் போது எங்கள் வீட்டுக்கு வாருங்கள் என சொல்லிவிட்டு சென்றுள்ளார் ரஜினி. இந்த நிலையில், சசிகலாவை ரஜினி சந்தித்ததை எடப்பாடி அதிர்ச்சியுடன் கவனித்திருக்கிறார்.
எங்கே உள்ளது: போயஸ்கார்டனில் வேதா நிலையத்திற்கு எதிரேதான் இந்த வீடு கட்டப்பட்டு உள்ளது. அப்படியே வேதா இல்லம் போலவே இந்த வீடு அச்சு அசலாக கட்டப்பட்டு உள்ளது. போயஸ் கார்டன் பகுதியின் லெகசியை தன்வசப்படுத்தும் முடிவில் சசிகலா இந்த வீட்டை பார்த்து பார்த்து கட்டி உள்ளார். ஜெயிலில் இருந்த போதே இந்த வீடு எப்படி இருக்க வேண்டும், என்னென்ன வசதிகள் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, முறையாக கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications