உன் கையை காட்டு! கு.க.செல்வத்திடம் உரிமையுடன் பேசிய முதல்வர் ஸ்டாலின்! அறிவாலயத்தில் நடந்தது என்ன?
சென்னை: பாஜகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம், இப்போது தான் தனது மனதில் இருந்த பாரத்தை இறக்கி வைத்தது போல் உணர்வதாக முதல்வர் ஸ்டாலினிடம் கூறியிருக்கிறார்.
அதைக்கேட்ட முதல்வர் ஸ்டாலின், செல்வம் உன் கையை காட்டு என உரிமையுடன் கேட்டு அவர் கையில் பச்சை குத்தப்பட்டிருந்த உதயசூரியன் சின்னம் அழிக்கப்படாமல் இருந்ததை கண்டு மகிழ்ந்திருக்கிறார்.
வழக்கம் போல் தலைமைக்கழக பணிகளை வந்து கவனிக்குமாறு கு.க.செல்வத்திடம கூறி அனுப்பி வைத்திருக்கிறார்.

திமுகவிலிருந்து விலகி
தென்சென்னை மாவட்டச் செயலாளராக இருந்த ஜெ.அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு காலமான நிலையில், அவரது பதவியிடத்தை குறி வைத்து காய் நகர்த்தி வந்தார் கு.க.செல்வம். ஆனால், உதயநிதி ஸ்டாலினின் சாய்ஸான சிற்றரசுவுக்கு அந்தப் பதவி கொடுக்கப்பட்டதும் கோபத்தில் திமுகவை விட்டு வெளியேறி பாஜகவில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த நிலையில் இணைந்தார். இதனால் முதல் ஓரிரு மாதம் கு.க.செல்வத்துக்கு பாஜகவில் முக்கியத்துவம் தரப்பட்ட நிலையில், அடுத்தடுத்து அவரை கண்டுகொள்ள அங்கு ஆளில்லை.

செல்வம் வருத்தம்
இதனால் தவறான முடிவெடுத்துவிட்டேன் என நினைக்கிறேன் என தனக்கு நெருக்கமான திமுக முக்கிய நிர்வாகிகள் சிலரிடம் தொலைபேசியில் அண்மைக்காலமாக வருந்தி வந்தார். கு.க.செல்வம் மீண்டும் திமுகவுக்கு வரும் எண்ணத்தில் இருக்கும் தகவலை ஆர்.எஸ்.பாரதி, அன்பகம் கலை ஆகியோர் முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். இதையடுத்து அவர் பச்சைக்கொடி காட்டியதை தொடர்ந்து நேற்று அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் முன்னிலையில் மீண்டும் தன்னை திமுகவில் ஐக்கியப்படுத்திக் கொண்டார் கு.க.செல்வம்.

கேசுவல் சந்திப்பு
மிகவும் கேசுவலாக சால்வை, பூச்செண்டு என ஃபார்மாலிட்டிஸ் எதுவுமின்றி அறிவாலயத்துக்கு வந்த கு.க.செல்வத்தை, அன்பகம் கலை தான் ஸ்டாலின் அறைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது, தாய் கழகத்தில் மீண்டும் தன்னை சேர்த்துக்கொண்டதற்கு ஸ்டாலினிடம் நன்றி தெரிவித்த கு.க.செல்வம், இப்போது தான் தனது மனதில் இருந்த பாரத்தை இறக்கி வைத்தது போல் உள்ளதாக தெரிவித்திருக்கிறார். இதைக்கேட்ட முதல்வர் ஸ்டாலின், 'செல்வம் உன் கையை காட்டு பார்க்கலாம்' என உரிமையுடன் கேட்டிருக்கிறார்.

கையில் பச்சை
கு.க.செல்வத்தின் கையில் உதயசூரியன் சின்ன பச்சைக் குத்தப்பட்டிருந்தது அழிக்கப்படாமல் இருந்ததை கண்ட ஸ்டாலின், எதற்கு அவசரப்பட்டாய் என தனக்கே உரிய கண்டிப்புடனும் உரிமையுடனும் செல்வத்திடம் கோபித்திருக்கிறார். மேலும், பழைய நிகழ்வை பற்றி பேசாமல் வழக்கம்போல் கட்சிப்பணிகளில் ஈடுபடுமாறு கூறி அறிவுறுத்தி அனுப்பியிருக்கிறார்.
-
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications