காரை பார்த்ததும் சூழ்ந்து கொண்ட பெண்கள்.. சட்டென கேட்ட கேள்வி.. கும்பிட்ட எடப்பாடி.. என்ன நடந்தது?
சென்னை: கனமழை மற்றும் காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட ஈரோடு மாவட்ட மக்களை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கினார்.
தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாக தீவிர கனமழை பெய்து வருகிறது. முதலில் தென் மாவட்டங்களில் தொடங்கிய கனமழை தற்போது தமிழ்நாடு முழுக்க பரவலாக பெய்து வருகிறது.
முக்கியமாக கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மிக கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் நேற்று முதல்நாள் ஒகேனக்கல்லில் நீர்வரத்து 2.45 லட்சம் கனஅடியாக இருந்தது. ஒகேனக்கலில் நிலவும் வெள்ளப்பெருக்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்துள்ளது. கர்நாடகாவில் பெய்யும் தொடரும் மழை காரணமாக ஒகேனக்கலுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.
கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நேற்றும் தீவிர மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. நேற்று வடமாவட்டங்களில் தீவிர கனமழை பெய்தது. அதேபோல் டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்தது.

வெள்ளம்
இந்த நிலையில் காவிரி வெள்ளம் காரணமாக ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் மக்கள் பலர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். பவானி ஆற்றின் கரையோரம் உள்ள ஈரோடு மக்கள், நாமக்கல் மாவட்ட குமாரபாளையம் கரையோரம் உள்ள மக்கள் ஆகியோர் பலர் முகாம்களுக்கு மாற்றப்பட்டு உள்ளனர். தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் இவர்கள் முகாம்களுக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று சந்தித்தார். நாமக்கல் மாவட்டம் குமரபாளையத்திற்கு சென்ற எடப்பாடி பழனிசாமி அங்கு வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டனர். எடப்பாடியை பார்த்ததும் அங்கு இருந்த பெண்கள் சிலர் அவரின் காரை சுற்றிக் கொண்டனர். அதில் விலைவாசி உயர்ந்துவிட்டது.. அதை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இன்னும் சில பெண்கள் எப்படி இருக்கீங்க ஐயா என்று கேட்டனர். எடப்பாடி கையெடுத்து கும்பிட்டபடி இவர்களுக்கு பதில் சொன்னார்.

வெள்ளம் பாதிப்பு
அதன்பின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்ற எடப்பாடி அங்கு வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு, ஆய்வு செய்தார். அங்கிருந்த பாதிக்கப்பட்ட மக்களிடம் பேசினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, அரசு இங்கு இருக்கும் மக்களுக்கு உடனே நிவாரணம் வழங்க வேண்டும். போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவில்லை. இதனால்தான் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
Recommended Video

எடப்பாடி கோரிக்கை
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனே நிதி உதவி வழங்க வேண்டும். வருவாய்த்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையோடு செயல்படவில்லை. விவசாயிகள் பலர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உடனே நிதி உதவி வழங்கிட வேண்டும். இங்கே இதுவரை அமைச்சர்கள் வந்து பார்வையிடவில்லை. அமைச்சர்கள் உடனே களத்திற்கு வந்து பார்வையிட வேண்டும், என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
3 தொகுதிகள்.. அதிமுக கூட்டணியில் இணையும் தவாக? வேல்முருகனுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த ஆபர்! -
அதிமுக அஸ்திவாரத்தில் கை வைத்த பாஜக.. அமித்ஷா புள்ளி வைக்க.. தினகரன், அன்புமணி கோலம் போட.. என்னாச்சு -
174 தொகுதிகளில் இரட்டை இலை.. அமித்ஷாவிடம் காய் நகர்த்திய எடப்பாடி.. 2029 கணக்கால் இறங்கி வந்த பாஜக! -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை












Click it and Unblock the Notifications