கொலை செய்துவிட்டு தப்பி ஓடும் கொலைக்காரனுக்கும் விஜய்க்கும் என்ன வேறுபாடு? சாட்டை துரைமுருகன் கேள்வி
சென்னை: கொலை செய்துவிட்டு தப்பி ஓடும் கொலைக்காரனுக்கும் விஜய்க்கும் என்ன வேறுபாடு என சாட்டை துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். கரூரில் தமது கூட்டத்திற்கு வந்தவர்களில் 39 பேர் இறந்தது தெரிந்தும் அவர்களுக்கு ஆறுதலாக நிற்காமல் அவசர அவசரமாக விஜய் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: மக்களின் சாவு உன் கண்ணுக்கு தெரியவில்லையா ? பிஞ்சுக் குழந்தைகளின் மரணம் உனக்கு கவலை தரவில்லையா ?

கொலை செய்துவிட்டு தப்பித்து ஓடும் கொலைகாரனுக்கும் உனக்கும் என்ன வேறுபாடு ? தமிழக காவல்துறை இத்துனை மரணங்களுக்கும் காரணமான இவனை கைது செய்ய வேண்டும் ! என தெரிவித்துள்ளார். அது போல் அவர் தற்போது வெளியிட்டுள்ள ட்வீட்டில், விஜய் பேச துவங்குவதற்கு முன்பாகவே கூட்ட நெரிசலில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளனர் !
விஜய்யின் பிரச்சார வாகனத்தின் உள்ளே இருந்தவர்கள் ஆதவ் அர்ஜூனா உட்பட அனைவருக்கும் மக்கள் மரணிப்பதை பார்த்தும் விஜய்க்கு தகவல் தெரிவிக்காமல் தொடர்ந்து அவர் பேசிக்கொண்டுருந்துள்ளார் !
கொண்டாட்ட மனநிலையும், எந்த விதிகளையும் பின்பற்றாத தொண்டர்களும், கூட்டத்தை பெரிதாக காட்ட வேண்டும் என்கிற மாஸ் மனநிலையும் மட்டுமே இம்மரணங்களுக்கான முதன்மை காரணம் !
10 ஆயிரம் காவலர்கள் இருந்திருந்தாலும் , ஏன் துணை இராணுவமே வந்தாலும் ரசிக மனநிலையில் உள்ள கூட்டத்தை கட்டுப்படுத்த இயலாது! என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து காயத்ரி ரகுராம் ட்விட்டரில் கூறியிருப்பதாவது: இந்த முகங்கள் நடிப்பையும், இந்த நடிக்கிறவங்களையும் பார்க்கும்போது சந்தேகம் அதிகமாகிறது. விஜய்க்கு எதிராக ட்வீட் செய்து பதிவிட திமுக கயாது லோஹரிடம் கெஞ்சுவதும் கூட சந்தேகமே. அஜித் குமார் லாக் அப் மரணம், கவின் ஆணவக் கொலை, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம் ஆகியவற்றை ஒருபோதும் சந்திக்காத முதல்வர் நாளை கரூர் வருகிறார். இதற்காக பிரபலங்களை பேச வைப்பது எவ்வளவு கீழ்த்தரமான மனநிலை. நிச்சயமாக நாம் அனைவரும் சோகமாக இருக்கிறோம், அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்ட மிகவும் சோகமான நாள் இது. ஆனால் திமுக அதை சந்தேகிக்க வைக்கிறது. விஜய் மருத்துவமனைக்குச் செல்லாமல், பத்திரிகையாளர்களைச் சந்திக்காமல் ஓடிப்போவதும் கோழைத்தனம். இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அது போல் இந்த சம்பவம் குறித்து ப்ளூசட்டை மாறன் கூறுகையில் ஒவ்வொரு பிரச்சாரத்தின்போதும் அதிகளவு கூட்டம் கூடும் என்பதால்தான்.. அதற்கேற்ற இடங்கள் சிலவற்றை தேர்வு செய்து... அதில் ஒன்றை தருமாறு ஒவ்வொரு முறையும்...தவெக அனுமதி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. கரூர் உட்பட என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications