"விபத்துக்கு யார் காரணம்.. மவுனம் காக்கும் ரயில்வே அமைச்சர்.." ஒடிசா ரயில் விபத்து.. ஆ ராசா தாக்கு
சென்னை: ஒடிசா ரயில் விபத்து நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து திமுக எம்பி ஆ ராசா முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
ஒடிசாவில் நேற்றைய தினம் மிக மோசமான ரயில் விபத்து அரங்கேறியது. கோரமண்டல் ரயில் உட்பட 3 ரயில்கள் இந்த விபத்தில் சிக்கியது. இதில் இதுவரை உயிரிழப்புகள் 288ஐ எட்டியுள்ளது.

அதேபோல காயமடைந்தோரின் எண்ணிக்கையும் 800ஐ தொட்டுவிட்டது. இந்த விபத்தில் காயமடைந்தோர் அருகே உள்ள மருத்துவமனைகளில் அட்மிட் செய்யப்பட்டனர். அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கொல்கத்தாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் ரயிலாகும். இதனால் இந்த விபத்து குறித்த தகவல் வெளியானது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக தமிழக முதல்வரும் ஒடிசா முதல்வரைத் தொடர்பு கொண்டு விபத்து குறித்துக் கேட்டறிந்தார். மேலும், தமிழ்நாடு அரசு தரப்பில் அமைச்சர்கள் உதயநிதி மற்றும் சிவசங்கர் தலைமையில் குழுக்களும் அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் தமிழர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று கூறப்படுகிறது. காயமடைந்தோர் மட்டுமே அங்கே சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே காயமடைந்தோரின் உறவினர்களைக் கொண்ட சிறப்பு ரயிலும் சென்னையில் இருந்து புறப்பட்டது. இதற்கிடையே ஒடிசா ரயில் விபத்தில் தமிழக அரசின் மீட்புப் பணிகள் குறித்து ஆ ராசா செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கினார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழர்கள் யாரும் இந்த விபத்தில் காயமடையவில்லை.. தெற்கு ரயில்வே கட்டுப்பாட்டு அறையுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.. இந்த விபத்தை வைத்து அரசியல் செய்யத் தமிழக அரசு விரும்பவில்லை.. இந்த மோசமான விபத்திற்கு யார் காரணம் என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும்.. தொழில்நுட்பம் வளர்ந்த பின்னரும் இதுபோன்ற விபத்துகள் நடப்பது வேதனை தருகிறது..
ஒடிசா ரயில் விபத்து காரணமாக மத்திய அரசு இப்போது ஒட்டுமொத்தமாக ஸ்தம்பித்துள்ளது. விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசுக்குத் தெரியவில்லை. மத்திய அரசு விளம்பரம் செய்வதில் மட்டுமே குறியாக உள்ளது. இந்த மோசமான ரயில் விபத்திற்கு யார் காரணம் என்பதை மத்திய அரசு இதுவரை வெளிப்படையாகக் கூறவில்லை. விபத்திற்கு காரணமானவர்களை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும்.
ரயில் விபத்து நடந்த உடன் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒடிசா முதல்வரைத் தொடர்புகொண்டு பேசினார். தேவையான உதவிகளைச் செய்யத் தயாராக உள்ளதாக உறுதியளித்தார். அதுமட்டுமின்றி அமைச்சர்கள் தலைமையில் குழு அமைக்கவும் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்தவர்களைப் பாதுகாப்பா அழைத்து வர முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தென்னக ரயில்வே உடன் ஒருங்கிணைந்து கண்ட்ரோல் ரூம் செயல்பட்டு வருகிறது.
இந்த விபத்தில் சிக்கிய தமிழர்கள் மட்டுமின்றி அனைவரும் காப்பாற்றப்பட வேண்டும். உயிரிழந்தோர் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும். காயமடைந்தோருக்கு உரியச் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். இந்த விஷயத்தில் தமிழக அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
இதை வைத்து தமிழக அரசு அரசியல் செய்ய விரும்பவில்லை. ஆனால், ஒரு விஷயத்தை மறந்துவிடக் கூடாது, கடந்த காலங்களில் பெரும் ரயில் விபத்துகள் நடந்த போது தார்மீகமாகப் பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். மம்தா பானர்ஜி உட்பட நிதீஷ் குமார், லால் பகதூர் சாஸ்திரி ஆகியோர் பதவி விலகி உள்ளனர். அதேநேரம் திமுக அவர் பதவி விலக வேண்டும் என்றெல்லாம் வலியுறுத்தவில்லை. எங்களுக்கு இப்போது அரசியல் செய்வது நோக்கம் இல்லை. அனைவரையும் காப்பாற்ற வேண்டும் என்பதே நோக்கம்.
அந்த காலத்தைவிட இப்போது தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. இந்த நேரத்தில் இப்படியொரு விபத்து நடந்துள்ளது வேதனை அளிக்கிறது. மம்தா பானர்ஜி ரயில்வே அமைச்சரை அருகில் வைத்துக் கொண்டே என்ன சொன்னார் என்பதே பார்த்தீர்களா..
முந்தை ஆட்சியில் விபத்தைத் தடுக்க 'ட்ரெயின் டிரான்ஸ்போர்ட் ஆக்சிடென்ட் அவாயிடிங் சிஸ்டம்' என்ற ஒன்றைக் கொண்டு வந்தனர். இருப்பினும், பாஜக ஆட்சிக்கு வந்ததும் இந்த பெயர் முந்தைய அரசுக்கு வரக் கூடாது என்பதற்காக இதை கவாச் என்று மாற்றியது. இந்தியாவில் 70,000 கிமீ ரயில்வே பாதை உள்ள நிலையில், அதில் வெறும் 2% அதாவது 1500 கிமீ தான் இந்த கருவி பொருத்தி உள்ளார் என்று குற்றஞ்சாட்டுகிறார். அதற்கு அமைச்சர் எந்தவொரு பதிலையும் தரவில்லை. ரயில்வே அமைச்சர் மவுனமாகவே இருந்தார்.
இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்பதற்கு எந்தவொரு பதிலும் இல்லை. இதற்கு யார் காரணம்... சிஸ்டமா? தனி மனிதரா? சிஸ்டம் என்றால் அதற்கு யார் பொறுப்பு ஏற்பார்.. தமிழ்நாட்டில் எதாவது சின்ன விஷயம் என்றாலே முதல்வர் பதவி விலகணும் அமைச்சர் பதவி விலகணும் என்கிறார்கள். ஆனால், இந்த விஷயத்தில் பாஜக, அதிமுக வாயைத் திறக்கவில்லை.. இந்த விபத்திற்குப் பிறகு மத்திய அரசு ஸ்தம்பித்துப் போய் உள்ளது. மக்களைக் காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications