திமுக என்ன பண்ணுதோ பண்ணட்டும்.. வெயிட் பண்ணுவோம்.. அப்ப தெரியும் கதை.. எடப்பாடி பழனிசாமி பலே திட்டம்
எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுகிறது
சென்னை: "இப்பதானே ஆட்சிக்கு வந்திருக்காங்க.. போக போகத்தான் அதிமுகவின் அருமை தெரியும்"என்று நெருக்கமானவர்களிடம் சொல்லி வருகிறாராம் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி..!
எப்படியும் இந்த முறை மீண்டும் முதல்வராகிவிடுவோம் என்று அதிக நம்பிக்கையாக இருந்தார் எடப்பாடி.. ஆனால், தோல்வியுற்றார்..
மோசமான தோல்வி இல்லையென்றாலும் டீசன்ட் வெற்றியை அதிமுக பெற்றுவிட்டது. இந்த வெற்றிக்கு காரணமும் எடப்பாடி பழனிசாமியே என்பதை மறுக்க முடியாது.

பஞ்சாயத்து
இதற்கு பிறகு, எதிர்க்கட்சி தலைவர் பஞ்சாயத்து கட்சிக்குள் வெடித்தது.. இது தொடர்பாக நடந்த கூட்டத்தில் ரூமை விட்டு ஓபிஎஸ் கோபத்துடன் வெளியேறியதுதான் மிச்சம்.. பெரும்பான்மையான ஆதரவு பெற்று எடப்பாடியே எதிர்க்கட்சி தலைவராகி உள்ளார். இப்போது, கட்சிக்கு யார் பொறுப்பு என்ற அடுத்த பஞ்சாயத்து ஓடிக் கொண்டிருக்கிறது.. ஓபிஎஸ், இபிஎஸ் ஆளுக்கு ஒருபக்கம் தனித்தனி அறிக்கைகளை விடுத்து தங்களின் ஆளுமையை நிலைநாட்டி கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்..!

அதிமுக
இப்படி உள்கட்சி பிரச்சனைகள் காரணமாகவே, தொற்று தடுப்பு குறித்த நடவடிக்கைகளிலும் அதிமுக தரப்பு முழுமையாக இறங்கவில்லை என்ற ஒரு பேச்சு எழ ஆரம்பித்துவிட்டது.. மே 2வது வாரத்தில் தொற்று உச்சத்தை அடைந்த நேரம், அதிமுகவில் இரட்டை தலைமைகளின் அதிருப்தி மோதலும் தலைதூக்கி இருந்தது.. அதனாலேயே இவர்களால், கொரோனாத் தடுப்புப் பணிகளில் போதிய ஆர்வம் காட்டப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

சேலம்
மே 14-ம் தேதி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, சேலம் தெற்கு, சேலம் மேற்கு, வீரபாண்டி தொகுதிகளின் அதிமுக எம்எல்ஏக்கள் ஆய்வு செய்தார்கள்.. அப்போதுகூட அங்கு எடப்பாடி போகவில்லையாம்.. கட்சிக்காரர்களையும் நேரில் பார்ப்பதில்லையாம்.. நிர்வாகிகளிடம் மட்டும் அடிக்கடி போனிலேயே பேசிக் கொள்கிறாராம். அவருக்கு சமீபத்தில்தான் ஆபரேஷன் நடந்து முடிந்துள்ளதால், உடல்நிலையை பார்த்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது..

ஆஸ்பத்திரி
நேற்று முன்தினம்தான், எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியை ஆய்வு செய்துள்ளார்.. கொரோனா தடுப்பு பணியில் திமுக அரசை தாறுமாறாக விமர்சித்தார்.. நாங்க இருந்தபோது இவ்வளவு தொற்று இல்லையே? தடுப்பூசி இல்லாத நேரத்திலேயே கட்டுக்குள்தானே வைத்திருந்தோம்? தொற்றுகளால் இறந்தவர்களின் இறப்பு விகித புள்ளிகளை ஏன் குறைத்து காட்டுகிறீர்கள்? தடுப்பூசியை வீணாக்கிவிட்டோம் என்று சுகாதாரதுறை அமைச்சர் ஏன் அபாண்டமாக பொய் சொல்கிறார்?" என்று கேள்வி மேல் கேள்வியை எழுப்பி விட்டு சென்றார்.

அருமை
இப்படிப்பட்ட சூழலில், எடப்பாடிக்கு நெருக்கமான ஒரு கொங்கு மண்டல அமைச்சர், போனை போட்டு நலம் விசாரித்துள்ளார்.. அப்படியே திமுக ஆட்சி பற்றின பேச்சும் வந்திருக்கிறது போலும்.. அதற்கு எடப்பாடி பழனிசாமி, "10 வருஷத்துக்கு அப்பறம் இப்பதான திமுக ஆட்சிக்கு வந்திருக்கு.. திமுகவை இப்பதானே மக்கள் பார்க்க ஆரம்பிச்சிருக்காங்க... போக போக நம்ம அருமை மக்களுக்கு புரியும்... நாம ஏன் இப்போ தேவையில்லாமல் களத்தில இறங்கணும்" என்றாராம்..!












Click it and Unblock the Notifications