பாஜக சொன்ன ‘நம்பர்’.. மிரண்டு போன எடப்பாடி.. சீட் ஷேரிங் - இந்த ‘டீல்’ சரியா வருமா? அதிமுக ஐடியா!
சென்னை : 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக அதிக சீட்களைக் கேட்டு வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி, தனக்கு நெருக்கமான சீனியர்களிடம் ஆலோசித்து வருகிறாராம். அப்போது சிலர் கூறிய ஐடியா பற்றி தீவிரமாக யோசித்து வருகிறாராம் ஈபிஎஸ். இதனால் வரும் நாட்களில் சீட் பகிர்வு தொடர்பான மோதல்கள் விஸ்வரூபம் எடுக்கும் எனக் கூறப்படுகிறது.
2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது. அண்மையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தலைவர்கள் டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்தனர். அப்போது, அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதை உறுதி செய்த அமித் ஷா வலுவான கூட்டணியை திமுகவுக்கு எதிராக அமைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அமித் ஷா சொன்ன மேட்டர் : அதேநேரத்தில், கடந்த தேர்தலைப் போல சீட் பேரத்தில் இழுத்தடிக்கக் கூடாது, முன்கூட்டியே சீட்களை உறுதி செய்தால் தான் தேர்தல் பணியில் சுணக்கம் இல்லாமல் பணியாற்ற முடியும் என்றும் எடப்பாடிக்கு அறிவுறுத்தி உள்ளாராம். அதோடு, பாஜகவுக்கு அதிக சீட்களை கொடுக்க வேண்டும் என்றும் ஈபிஎஸ்ஸிடம் உறுதியாக தெரிவித்துள்ளாராம் அமித் ஷா.
இந்த நிலையில், பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் சிலரே சமூக வலைதளங்களில் 25 சீட்களில் பாஜக போட்டியிட வேண்டும், இல்லையென்றால் தனித்துப் போட்டியிட வேண்டும் என்ற கோஷத்தைக் கிளப்பியுள்ளனர். அதிமுக கொடுக்க நினைக்கும் சீட் கணக்கெல்லாம் எங்களுக்கு ஒத்துவராது, பாஜக தலைமை நல்ல எண்ணிக்கையில் இந்த முறை சீட்களை பேசி வாங்கும் என்கிறார்கள் பாஜகவினர்.
பாஜக உறுதி : எங்களுக்கு வேண்டிய சீட் எண்ணிக்கையையும், தொகுதிகளையும் இந்த முறை விட்டுத் தருவதாக இல்லை. 15 தொகுதிகளிலாவது பாஜக போட்டியிட வேண்டும் எனபதில் தேசிய தலைமையும் உறுதியாக இருக்கிறது என்கிறார்கள் பாஜகவினர். நாங்கள் தேசியக் கட்சி, தமிழ்நாட்டிலும் வளர்ந்து வருகிறோம். மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வரப்போகும் நிலையில் இங்கிருந்தும் கணிசமான எம்.பிக்கள் டெல்லி செல்லும் வகையில் எங்களுக்கான சீட்டை கட்டாயம் கேட்டுப்பெறுவோம் என்கிறார்கள்.
ஓ.பன்னீர்செல்வத்தை ஓரங்கட்டி, அதிமுகவின் பொதுச் செயலாளராக முடிசூடிக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு, தற்போது இருக்கும் பெரிய சவாலே எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் தான். தலைமைப் பொறுப்புக்கு வந்தபிறகு தனது பலத்தைக் காட்ட வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறது. இதனால், ஓரளவுக்கு நல்ல வெற்றியை அதிமுக பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
நெருக்கமானவர்களிடம் ஆலோசனை : இப்படியான சூழலில் தான் பாஜக கேட்கும் தொகுதிகளின் எண்ணிக்கையைக் கேட்டு மிரண்டு போயிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. பாஜக தயவு தனக்கு நிச்சயம் தேவை என்று கருதினாலும், இவ்வளவு சீட்களை பாஜகவுக்கு கொடுக்க எடப்பாடி பழனிசாமிக்கு மனம் இல்லை. இதனால், தீவிரமான யோசனையில் இருக்கிறாராம். குறிப்பாக, சீட் விவகாரத்தில் பாஜகவை எப்படி டீல் செய்வது என கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் இறங்கியிருக்கிறாராம்.
இதற்கிடையே, மத்தியில் ஆட்சியைத் தேர்ந்தெடுக்கும் நாடாளுமன்றத் தேர்தல் என்ற அடிப்படையில் பாஜகவுக்கு கடந்த முறையை விட கூடுதல் இடங்களைக் கொடுக்கலாம். 2026ல் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு குறைவான சீட்களே வழங்கப்படும் என உடன்பாடு செய்துகொள்ளலாம் என ஈபிஎஸ் அணியின் சீனியர்கள் சிலர் ஆலோசனை கூறியுள்ளனராம்.
2024- 2026 டீல்? : ஆனால், பாஜக இந்த உடன்பாடை இப்போதைக்கு ஏற்றுக்கொண்டாலும், 2026ல் அதனை ஏற்றுக்கொள்ளுமா என்ற கேள்வி இருக்கிறது. ஏற்கனவே அண்ணாமலை தலைமையில் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி என அக்கட்சியினர் கூறி வருகின்றனர். தமிழ்நாடு சட்டமன்றத்திலும் கணிசமான இடங்களை பிடிக்க விரும்பும் அண்ணாமலை, குறைவான தொகுதிகளில் போட்டியிடுவதற்கு சட்டமன்ற தேர்தலில் ஒப்புக்கொள்வாரா என்ற கேள்வியும் இருக்கிறது.
ஆகவே, 2026 தேர்தலை வைத்து இப்போதே எந்த முடிவையும் செய்யமுடியாது, முடிந்தவரை இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு ஒற்றை இலக்கத்திலேயே சீட் கொடுத்து முடித்துவிட வேண்டும், 2026 தேர்தலை கருத்தில் கொண்டெல்லாம் இப்போதே எந்த உறுதியான முடிவுக்கும் வர முடியாது என அதிமுகவின் மற்றொரு தரப்பினர் கூறி வருகின்றனராம். இதனால், வரும் நாட்களில் பாஜக - அதிமுக இடையேயான சீட் பகிர்வு மோதல்கள் விஸ்வரூபம் எடுக்கும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
-
2 முறை எம்எல்ஏவா இருந்தாச்சி.. இனி தம்பிக்கு விட்டு கொடு! திமுக வேட்பாளரிடம் கெஞ்சும் அதிமுக வேட்பாளர்! -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
வேல்முருகனுக்கு ஷாக்! கேபி முனுசாமி முன்னிலையில் அதிமுகவுக்கு ‘டைவ்’ அடித்த தவாகா வேட்பாளர்! -
தவெக கட்சியினருக்கு ஷாக்! கரூர் வழக்கில் கைதாகி ஜாமீனில் இருந்த மாசி பவுன்ராஜ் அதிமுகவில் இணைந்தார்! -
கொத்தாக காலியாகும் டெபாசிட்.. தவெக விஜய்க்கு பெரிய சிக்கல்.. 3 பெரிய சர்வேவில் இருக்கும் வார்னிங்! -
இலவச திட்டங்களுக்கு எத்தனை கோடி செலவாகும்? திமுக.. அதிமுக.. தவெக..? யார் டாப்? -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்!












Click it and Unblock the Notifications