ஏ1 காமராஜ்.. பல கோடி சொத்து.. மாஜி வீட்டு கதவை அதிகாலையே தட்டிய "விஜிலன்ஸ்".. எப்ஐஆர் சொல்வது என்ன?
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு தொடர்பான 49 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக எப்ஐஆர் பதியப்பட்டுள்ளது. இந்த எப்ஐஆரில் காமராஜ் ஏ1 ஆக சேர்க்கப்பட்டு உள்ளார்.
Recommended Video
லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டில் காமராஜின் மகன்கள் இனியன், இன்பன் ஆகியோர்கள் முறையே ஏ2, ஏ3 ஆக சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த சோதனை இன்று மட்டுமில்லாமல் நாளையும் நடக்கும் என்று கூறப்படுகிறது.
கடந்த 10 வருடத்தில் வருமானத்திற்கு அதிகமாக 58,44,38,252 ரூபாய் சொத்து சேர்த்ததாக காமராஜ் மீது புகார் வைக்கப்பட்டுள்ளது.

புகார்
மொத்தம் 49 இடங்களில் இந்த லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடக்கிறது. சென்னையில் மட்டும் 6 இடங்களில் ரெய்டு நடக்கிறது. இதில் காமராஜ் மன்னார்குடி வீட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. அவரின் வீட்டிற்கு அதிகாலை 6 மணிக்கு சென்று அதிகாரிகள் கதவை தட்டி ரெய்டை தொடங்கி உள்ளனர். அவரிடம் தற்போது சொத்துகுவிப்பு தொடர்பாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது. அவரின் இரண்டு மகன்களிடமும் இது தொடர்பாக விசாரணை நடக்கிறது.

விசாரணை
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், காமராஜ், (முன்னாள் அமைச்சர், உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை தற்போது நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், திருவாருர் மாவட்டம்) என்பவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பாக ஒரு விரிவான வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யயப்பட்டது. மேற்கண்ட விரிவான விசாரணையின்போது, அவர் பல்வேறு முறைகேடுகளை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

எப்ஐஆர்
அவர் 01.04.2015 முதல் 31.03.2021 வரை உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சராக இருந்த காலத்தில் அவருடைய அரசு பதவியை தவறாக பயன்படுத்தி, பல்வேறு ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டு சுயலாபம் அடைந்து அவர் வருமானத்திற்கு அதிகமாக அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அவர் பெயரிலும், அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் மற்றும் அவருடைய நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெயரிலும் ரூ.58,44,38,252/ அளவுக்கு சொத்து சேர்ந்துள்ளதாக தெரிய வந்தது.

என்ன வழக்கு
இந்த விரிவான விசாரணையில் கண்டறியப்பட்ட விபரங்களின் அடிப்படையில் திருவாருர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு குற்ற எண்.4/2022 சட்டப் பிரிவுகள் 120(B) of IPC, 13(2) r/w 13(1) (e), 13(2) r/w 13(1) (e) r/w 109 IPC, 13(2) r/w 13(1) (b) 12 r/w 13(2) r/w 13(1) (b) of PC Act as amended in 2018-ன் படி (1) திரு.காமராஜ், முன்னாள் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர், (2) Dr.M.K.இனியன், 3) Dr.K.இன்பன், 4) திரு.R.சந்திரசேகரன் 5) திரு.B.கிருஷ்ணமூர்த்தி மற்றும் 6) திரு.S.உதயகுமார் ஆகியோர்கள் மீது 07.07.2022ஆம் தேதி வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கு புலன் விசாரணையில் இருந்து வருகிறது.
இந்த வழக்கினை தொடர்ந்து, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் 49 இடங்களில் சோதனை நடைபெற்றுவருகிறது, என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications