எல்லாத்தையும் தூக்கி போடுங்க.. முதலில் இதை பண்ணுங்க விஜய்.. மிஸ் பண்ணிட்டாரே.. உடனே சுதாரிக்கணும்
சென்னை: நடிகர் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஒரு அரசியல் தலைவராக தோல்வி அடைய தொடங்கி உள்ளார். கரூர் விவகாரத்தில் விஜயின் முடிவுகள், செயல்பாடுகள் கடுமையான விமர்சனங்களை, விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது.
கரூர் துயர சம்பவத்துக்கு பிறகு முதல்முறையாக தவெக தலைவர் விஜய் வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில், என் வாழ்க்கையில் இப்படியொரு வலி நிறைந்த சூழலை சந்தித்தது கிடையாது; மனசு முழுக்க வலி மட்டும்தான்; அதற்கு ஒரே காரணம் அவர்கள் என் மேல் வைத்துள்ள அன்பும் பாசமும் தான்; அதற்கு நான் எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன். எங்களோட வலிகளையும், நிலைமையையும் புரிந்துகொண்டு எங்களுக்காக பேசுன அரசியல் கட்சித் தலைவர்களுக்கு நன்றி.

5 மாவட்டங்களில் நடைபெறாத சம்பவம் கரூரில் மட்டும் எப்படி நடைபெற்றது. மக்களுக்கு எல்லாமே தெரியும், மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இருக்காங்க. சீக்கிரமே எல்லா உண்மைகளும் வெளியில் வரும். எங்களுக்கு தரப்பட்ட இடத்தில் நாங்க பேசிக்கொண்டு இருந்தோம் அதை தாண்டி எதையும் செய்யவில்லை. சிம் சார் எதாவது பழி வாங்க வேண்டிய எண்ணம் இருந்தால் என்னை என்னவேண்டுமானாலும் செய்யுங்கள், என்று குறிப்பிட்டு உள்ளார்.
விஜய் அடுத்து என்ன செய்ய வேண்டும்?
1. விஜய் இந்த நிகழ்விற்கு பொறுப்பேற்று இருக்க வேண்டும். அல்லது வருத்தம் தெரிவித்து இருக்க வேண்டும். இது இரண்டையும் செய்யவில்லை. இரண்டையும் பற்றி விஜய் எங்கும் பேசவில்லை. சின்ன வருத்தம் கூட அவரின் பேச்சில் இல்லை.
2. விஜய் அடுத்த கட்டமாக முதலில் செய்ய வேண்டியது.. இணையத்தில் பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று சொல்ல வேண்டும்.
3. முன்னதாக முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில், கரூர் நெரிசல் பற்றி வதந்தி பரப்ப வேண்டாம்; எந்த ஒரு அரசியல் கட்சித் தலைவரும் அப்பாவி மக்கள், தொண்டர்கள் இறப்பதை விரும்ப மாட்டார்கள். நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை கிடைத்த பிறகு, எல்லா அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் உடன் ஆலோசனை நடத்தி, இனி வரும் காலங்களில் இது போன்ற நிகழ்ச்சிக்கான விதி, நெறிமுறைகள் வகுக்கப்படும். இந்த நெறிமுறைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தருவார்கள் என்று நான் நம்புகிறேன். கரூரில் நடந்துள்ள துயரம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும், வதந்திகளையும் பரப்ப வேண்டாம். அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வீடியோ வெளியீட்டு உள்ளார்.
4. விஜய் செய்தியாளர்களை சந்தித்து.. வதந்திகளை பரப்பாமல்.. முறையான விளக்கத்தை நிலைப்பாடுகளை அறிவிக்க வேண்டும். அதோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை அனுப்ப நிர்வாகிகளை களமிறக்க வேண்டும்.
5. அதோடு இல்லாமல் கட்சியின் டாப் நிர்வாகிகளே conspiracy தகவல்களை பரப்புகிறார்கள். ஆதவ் அர்ஜுனா போன்றவர்கள் கூட சர்ச்சையை ஏற்படுத்தும் போஸ்டுகளை போட்டு டெலிட் செய்கின்றனர். விஜய் இது போன்ற செயல்களை தடுக்க வேண்டும். அதற்கு எதிராக.. முதலில் இப்படி எல்லாம் செய்யாதீர்கள் என்று உத்தரவு போட வேண்டும். ஒரு நல்ல அரசியல் தலைவராக விஜய் இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.












Click it and Unblock the Notifications