"இது ஜனநாயக படுகொலை.." திடீரென அரசியல் பேசிய ஆனந்த் சீனிவாசன்.. என்ன மேட்டர் தெரியுமா
சென்னை: பொதுவாகப் பொருளாதாரம் சேமிப்பு குறித்து விளக்கமாகப் பேசும் ஆனந்த் சீனிவாசன், திடீரென அரசியல் பேசியுள்ளார். இது தொடர்பாக நாம் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய பொருளாதார வல்லுநர்களில் ஒருவர் ஆனந்த் சீனிவாசன்.. சென்னையில் வசிக்கும் இளைஞர்கள் திருமணம் செய்ய வேண்டும் என்றால் குறைந்தது 40 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க வேண்டும் எனச் சொல்லி டிரெண்டானவர் இவர்.

வழக்கமாகப் பொருளாதாரம் குறித்துப் பேசும் இவர் சமீபத்தில் அரசியல் பக்கம் வந்தார். பாஜக அரசைக் கடுமையாகச் சாடிய அவர், இந்தியா கூட்டணி நிச்சயம் லோக்சபா தேர்தலில் வெல்லும் எனக் கூறியுள்ளார்.
ஆனந்த் சீனிவாசன்: பொருளாதாரம் என்பது எப்போதும் அனைவருக்கும் புரியாது என்ற பேச்சு இருக்கும். ஆனால், அதையெல்லாம் காலி செய்து அனைவருக்கும் புரியும்படி எளிதாகப் பொருளாதாரத்தை விளக்குபவர் ஆனந்த் சீனிவாசன். கடன் இல்லாமல் வாழ என்ன செய்ய வேண்டும்.. சேமிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை எளிதாக விளக்குவது தான் இவரது ஸ்டைல். அதேநேரம் பொருளாதார வல்லுநரான இவர் காங்கிரஸ் கட்சியில் இருப்பது பலருக்கும் தெரியாது.
இதற்கிடையே சமீபத்தில் பேசிய இவர், மத்திய பாஜக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் லோக்சபா தேர்தலில் பாஜகவை இந்தியா கூட்டணி தோற்கடிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "1970, 80களில் எல்லாம் இந்தியா கிரிக்கெட் டீம் பாகிஸ்தானுக்குச் செல்லும். அப்போது அங்கு நடக்கும் தொடரில் அம்பயர்களும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களாக தான் இருப்பார்கள். பாக். பேட்ஸ்மேன்கள் என்ன செய்தாலும் அவுட் தர மாட்டார்கள்.
அரசியல் பேசிய ஆனந்த் சீனிவாசன்: அதாவது நாம் 11 வீரர்களுடன் விளையாடுவோம். அவர்கள் அம்பயரை சேர்த்து 13 பேருடன் விளையாடுவார்கள். இன்று பாஜகவின் அரசியல் அதுபோலத் தான் இருக்கிறது. சமீபத்தில் நடந்த சண்டிகர் மேயர் தேர்தலில் என்ன நடந்தது எனப் பார்த்து இருப்பீர்கள். தேர்தல் நடத்தும் அதிகாரியே பதிவான வாக்குகளில் திருத்தம் செய்கிறார். 8 வாக்குகள் செல்லாது என அறிவித்து பாஜக வேட்பாளரை மேயராக அறிவிக்கிறார்.
ஜனநாயக படுகொலை: பொதுவாகச் செல்லாத வாக்கு விழுந்தால் அதை கவுன்சிலர்களிடம் காட்ட வேண்டும்.. அதையும் அவர் காட்டவில்லை.. இப்போது இது ஜனநாயக படுகொலை இல்லை என்றால் வேறு எது ஜனநாயக படுகொலையாக இருக்கும். நமது ஜனநாயகத்தின் அடிப்படையே தோல்வியடைந்தவர்கள் அதிகாரத்தை விட்டு விலக வேண்டும் என்பது தான். மேயர் தேர்தலில் கூட தோல்வியை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். இதுதான் எனக்குப் பயமாக இருக்கிறது..
மேயர் தேர்தல் தோல்வியைக் கூட ஒப்புக்கொள்ள முடியாமல்.. (பாக். கிரிக்கெட் அணி செய்ததை போல) இப்படி அம்பயரை வைத்து நான்தான் வென்றேன் எனச் சொல்லிக் கொள்கிறார்கள். அடுத்து வரும் தேர்தல்களிலும் இதைச் செய்ய மாட்டார்கள் என என்ன நிச்சயம்.. " என்று ஆவேசமாகப் பேசினார்,
நமது நாட்டில் இன்னும் சில மாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு பக்கம் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜக களமிறங்குகிறது. மறுபுறம் பாஜகவை வீழ்த்தியே ஆக வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications