Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பச்சை பொய்.. ஆளுநர் ரவி சொன்ன அந்த விஷயத்தை கவனிச்சீங்களா? சீக்ரெட்டை சொன்ன முக்கிய புள்ளி! படபடப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பேட்டி என்ற பெயரில் ஆளுநர் ஆர். என் ரவி சொன்னது எல்லாம் பச்சை பொய், அபத்தம் என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ஆர். என் ரவி, திராவிட மாடல் காலாவதியாகிவிட்டது என்று கூறி அளித்த பேட்டி பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது. முக்கியமாக சிதம்பரம் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் எதையும் செய்யவில்லை, தமிழ்நாடு அரசு அவர்கள் மீது பழிவாங்கும் விதமாக நடவடிக்கை எடுக்கிறது என்று ஆளுநர் ஆர். என் ரவி பேட்டியில் தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

What Governor R N Ravi said against the Tamil Nadu government all are fake and motivated says Journalist Mani

டைம்ஸ் ஆப் இந்தியா ஊடகத்திற்கு தமிழ்நாடு அரசுக்கு எதிராக ஆளுநர் ஆர். என் ரவி அளித்த பேட்டியில், கோவில்களை சிறப்பாக நிர்வகிப்பதற்காக நான் இந்த தமிழ்நாடு பாராட்ட வேண்டும் என்று அரசாங்கம் விரும்பியது. அதற்கு அவர்கள் கூறிய காரணம், 3,000க்கும் மேற்பட்ட ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டெடுத்ததுதான். அதை ஏற்றுக்கொள்கிறேன்.

அவ்வளவு நிலங்களை மீட்டது நல்ல விஷயம்தான். ஆனால் இன்னும் 50,000 ஏக்கருக்கும் அதிகமான நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அதை எல்லாம் மீட்கவில்லை. இதுவரை செய்யப்பட்ட மீட்பு மிகவும் சிறியதாக உள்ளது என்பதை எல்லோரும் அறிவோம். இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இல்லாத சிதம்பரம் நடராஜர் கோவிலில் 2022ல் என்ன நடந்தது என்று பாருங்கள்.

பழிவாங்கும் வகையில், சமூக நலத் துறையின் அரசு அதிகாரிகள், பொது தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுத்தனர். அங்கே குழந்தைத் திருமணங்கள் நடப்பதாக எட்டு பேர் மீது புகார்களை அளித்தனர். தீட்சிதர்கள் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள் என்று புகார் வைத்தனர்.

ஆனால் அங்கே அத்தகைய திருமணங்கள் நடக்கவில்லை. அது உண்மை இல்லை. பெற்றோர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், ஆறாம், ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுமிகளை, வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று, 'இரண்டு விரல் பரிசோதனை' என்னும் கன்னித்தன்மை பரிசோதனை செய்து உள்ளது.

இந்த கொடுமைகளால் அந்த சிறுமிகள் சிலர் தற்கொலைக்கு முயன்றனர். இது என்ன என்று கேட்டு முதல்வருக்கு கூட நான் விளக்கம் கேட்டு கடிதம் எழுதினேன். இப்போது, ​​​​நடக்கும் அனைத்திற்கும் பின்னணியில் இருப்பது அரசுதான். நான் இந்த அரசாங்கத்தைப் பாராட்ட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? என்று ஆளுநர் ஆர். என் ரவி கேட்டு உள்ளார்.

ஆர். என் ரவியின் இந்த பேட்டி குறித்து மூத்த பத்திரிகையாளர் மணி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், ஆர். என் ரவி பேட்டி மிக முக்கியமானது. அவர் நிறைய பொய்களை சொல்லி இருக்கிறார். நிறைய பொய்களை அப்படியே யோசிக்காமல் அவிழ்த்துவிட்டு இருக்கிறார். அவர் பேசியதில்.. திராவிட மாடல் காலாவதியாகிவிட்டது என்று கூறி உள்ளார்.

What Governor R N Ravi said against the Tamil Nadu government all are fake and motivated says Journalist Mani

ஆளுநர் பதவி ரப்பர் ஸ்டாம்ப் கிடையாது என்று கூறி உள்ளார். மாடு மடி அறுக்கப்பட்டது என்று கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி கலவரம் என்று கூறியுள்ளார். திமுகவை மாபியா என்று கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் இருந்து பாகிஸ்தானுக்கு போதை பொருள் கடத்துறாங்க என்று சொல்லி இருக்கிறார். சிதம்பரத்தில் குழந்தை திருமணம் நடக்கவில்லை. தமிழ்நாடு அரசு பழி வாங்குவதாக ஆளுநர் சொல்லி இருக்கிறார்.

முதல் விஷயம் - ஆளுநர் சொல்வது எல்லாம் பொய்.

இரண்டாவது விஷயம் - இதெல்லாம் காரணம், அதனால் நான் தமிழ்நாட்டை அமைதி பூங்கா என்று சொல்ல மாட்டேன் என்று ஆளுநர் கூறுவது அபத்தமாக இருக்கிறது.

இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களிலும் இருக்க கூடிய குற்றச்செயல்களையும், அந்தந்த மாநிலங்களில் ஆளுநர் உரைகளையும் கவனித்தால் உங்களுக்கு புரியும்.

மாநிலத்தில் எவ்வளவு பெரிய குற்றங்கள் நடந்தாலும், மாநிலம் அமைதியாக இருக்கிறது என்றுதான் ஆளுநர் பேசுவார். சட்ட ஒழுங்கு சரியாக இருக்கிறது என்றுதான் ஆளுநர் பேசுவார்.

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்த பின் சட்டசபையில் ஆளுநர் பேசிய அப்போதைய ஆளுநர் கூட குஜராத்தில் சட்ட ஒழுங்கு சரியாக இருக்கிறது என்றுதான் கூறினார். எந்த ஆளுநரும் என் மாநிலத்தில் சட்ட ஒழுங்கு சரியாக இல்லை என்று சொல்ல மாட்டார்.

ஏனென்றால் அது அவரின் உரை கிடையாது. ஆளுநர் படிப்பது அரசின் உரை. அரசு எழுதி கொடுப்பதைத்தான் ஆளுநர் படிக்க வேண்டும். அதுதான் அவரின் வேலை.

படிக்க முடியாது என்றால் அவர் பதவியை விட்டு செல்ல வேண்டும். எல்லா மாநிலங்களிலும் நடக்கும் சம்பிரதாயம் இது. அதை ஆளுநர் ஆர். என் ரவி பின்பற்ற வேண்டும்.

What Governor R N Ravi said against the Tamil Nadu government all are fake and motivated says Journalist Mani

தர்மபுரம் ஆதீனத்திற்கு செல்லும் போது தன்னை தாக்கியவர்கள் மீது எப்ஐஆர் பதவி செய்யப்படவில்லை என்கிறார் ஆளுநர் ஆர். என் ரவி. அவர் சொல்வது பச்சை பொய். நானே சொன்னேன், எப்ஐஆர் போடவில்லை என்று அவர் சொன்னது பச்சை பொய்.

அன்று இரவே அந்த விவகாரத்தில் எப்ஐஆர் போடப்பட்டது. இரண்டு விரல் சோதனை நடந்தது என்று ஆளுநர் சொன்னதும் பச்சை பொய். இரண்டு விரல் சோதனை இந்தியாவிலேயே தடை செய்யப்பட்ட சோதனை.

மாட்டிற்கு மடி அறுத்ததாக கூறப்படுவதும் பச்சை பொய். வாட்ஸ் ஆப் யுனிவர்சிட்டியில் வருவதை வைத்து பேசுவார் என்றால் அதை விட தவறான ஒன்று கிடையாது. ஆதாரங்கள் ரீதியாக அவர் நிறைய தவறாக பேசி இருக்கிறார்.

அவர் அபத்தமாக பேசுகிறார். பொய் பேசுகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+