சிசி போடாத மெயில்.. மார்ச் 5 டூ 9.. தேர்தல் ஆணையர் அருண் ராஜினாமாவிற்கு பின் என்ன நடந்தது? ஷாக்!
சென்னை: 2024 மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணை அறிவிக்கப்படுவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா செய்துள்ளார். சமீபத்தில்தான் அவர் தேர்தல் தொடர்பான சில கூட்டங்களில் கலந்து கொண்டார். ஆனால் திடீரென அவர் ராஜினாமா செய்துள்ளார்.
சட்ட அமைச்சக அறிவிப்பின்படி, ஜனாதிபதி திரௌபதி முர்மு, கோயலின் ராஜினாமாவை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார். அவர் ராஜினாமா கடிதம் அனுப்பிய 2 மணி நேரத்தில் அது ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது.

அவரின் பதவி விலக்கலுக்கான உண்மையான காரணம் தெரியவில்லை. அவரை பதவி விலக விடாமல் தடுக்க அரசு தரப்பு முயற்சிகள் மேற்கொண்ட போதிலும், "தனிப்பட்ட காரணங்களுக்காக" அவர் ராஜினாமா செய்ததாக ஊடகங்களில் கூறப்படுகிறது.
உடல்நலக் குறைவு காரணமாக அவர் ராஜினாமா செய்ததாக செய்திகள் வந்தன. ஆனால் கோயல் பூரண ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், அவரின் ராஜினாமாவிற்கு அது காரணம் இல்லை என்றும் கூறப்படுகிறது.
கோயலுக்கும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கும் இடையே கோப்பில் கருத்து வேறுபாடுகள் இருப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுவும் ஒரு வகையில் ராஜினாமாவிற்கு காரணம் என்று கூறப்படுகிறது
குழப்பம்: சமீபத்தில்தான் அவர் தேர்தல் தொடர்பான சில கூட்டங்களில் கலந்து கொண்டார். ஆனால் திடீரென அவர் ராஜினாமா செய்துள்ளார்.
மார்ச் 5: தேர்தல் ஆணையர் அருண் கோயல், கொல்கத்தா பயணத்தை திடீரென ரத்து செய்துவிட்டு , "உடல்நலப் பிரச்சனைகள்" எனக் கூறி டெல்லி திரும்பினார். தேர்தல் ஆணையம் சார்பாக நடத்தப்பட்ட செய்தியாளர் கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை.
மார்ச் 7: தேர்தல் ஆயத்த பாணிகளை மேற்பார்வையிட, தேர்தல் ஆணையத்தின் கூட்டங்களில் அருண் கோயல் கலந்து கொண்டார்.
மார்ச் 8: அருண் கோயல் தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பினார். மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லாவுடனான தேர்தல் ஆணைய சந்திப்பை அருண் கோயல் புறக்கணித்தார்.
மார்ச் 9: அருண் கோயலின் ராஜினாமாவை ஜனாதிபதி 2 மணி நேரத்தில் ஏற்றுக்கொண்டார்.
அருண் கோயல் தனது ராஜினாமாவை தலைமை தேர்தல் ஆணையம் ராஜீவ் குமாரிடம் 'Cc' செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மூன்று உறுப்பினர்களைக் கொண்ட இந்திய தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே ஒரு காலி இடம் இருந்தது, இப்போது அருணின் ராஜினாமா காரணமாக ராஜீவ் குமார் மட்டுமே தேர்தல் ஆணைய குழுவில் இருக்கிறார்.
பஞ்சாப் கேடரின் 1985-பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான கோயல் நவம்பர் 2022 இல் தேர்தல் ஆணையத்தில் ஆணையராக இணைந்தார். . லோக்சபா தேர்தல் தேதிகள் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் தேர்தல் நடப்பதில் சிக்கல் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அவரின் பதவி விலக்கலுக்கான உண்மையான காரணம் தெரியவில்லை. இதை சுற்றி பல சர்ச்சைகள், விவாதங்கள் எழுந்து வருகின்றன. காங்கிரஸ் பொதுச் செயலாளர் கார்கே உள்ளிட்டோர் இதற்கு எதிராக கண்டனம் தெரிவித்துள்ளனர்.
லோக்சபா தேர்தலையொட்டி, தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா செய்திருப்பது உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் ஆரோக்கியத்திற்கு மிகுந்த கவலை அளிக்கிறது,. இது மிகவும் ஆபத்தான விஷயம் என்று கார்கே தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications