அந்த 10 நிமிடம்.. தமிழக ஆளுநர் ஆர். என் ரவி.. சட்டசபையில் இருந்து வெளியேறும் முன் என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் ஆர். என் ரவி தனது உரையை புறக்கணித்து வெளியேறி உள்ளார். நடப்பு ஆண்டில் முதல் சட்டசபை கூட்டத் தொடர் இன்று தொடங்கிய நிலையில், தேசிய கீதம் இசைக்கப்படாததால், தமிழக அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என். ரவி வெளிநடப்பு செய்தார்.

இதைத்தொடர்ந்து, சட்டமன்ற வெளிநடப்பு குறித்து ஆளுநர் மாளிகை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் ஆளுநரை உரையாற்றவிடவில்லை, ஆளுநர் ரவி உரையாற்றியபோது மைக் ஆஃப் செய்யப்பட்டதாகவும், ஆளுநர் உரையில் பல ஆதாரமற்ற கூற்றுகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மொத்த நிகழ்வும் எப்படி நடந்தது.. என்று விரிவாக இங்கே பார்க்கலாம்.

1. இன்று காலை 9.30 மணி அளவில் சட்டமன்றத்திற்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பூங்கொத்து கொடுத்து சபாநாயகர் வரவேற்றார். நடப்பாண்டின் முதல் கூட்டத் தொடர் சற்று நேரத்தில் ஆளுநர் உரையுடன் தொடங்க ஏற்பாடுகள் நடந்தது.

2. ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கலைஞர் கருணாநிதி தொடர்பான புத்தகம் மற்றும் தமிழ் என்கிற புத்தகத்தை சபாநாயகர் வழங்கினார்.

3. நடப்பு ஆண்டுக்கான முதல் தமிழக சட்டசபை கூட்டத் தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியுள்ளது. 9.50க்கு இந்த நிகழ்வு நடந்தது அடுத்த 10 நிமிடத்தில் ஆளுநர் அவையில் இருந்து வெளியேறினார்.

What happened during the Tamil Nadu Governor speech in Assembly What did RN Ravi do

4. அப்போதுதான் சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கும் முன் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

5. தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று ஆளுநர் வலியுறுத்திய நிலையில், பேரவை மரபின்படி தமிழ்த்தாய் வாழ்த்தே பாடப்படும் என்று சபாநாயகர் அப்பாவு பதில் அளித்ததையடுத்து ஆளுநர் வெளியேறினார்.

6. மக்கள் சபையை ஆளுநர் அவமதித்துள்ளார் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

7. ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு என அண்ணா கூறியிருந்தார். ஆளுநர் ஏற்கனவே நடந்து கொண்டதைப் போல இப்போது மீண்டும் நடந்து கொண்டுள்ளார். அரசமைப்பை ஆளுநர் மீறியுள்ளார். உரையை வாசிக்காமல் ஆளுநர் சென்றதை சட்டப்பேரவை ஏற்கவில்லை. மக்கள் சபையை ஆளுநர் அவமதித்துள்ளார் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

8. ஆளுநர் வெளியேறிய நிலையில், ஆளுநர் உரையில் உள்ளது மட்டுமே அவைக் குறிப்பில் இடம்பெறும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். அதைத்தொடர்ந்து, உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

9. ஆளுநர் உரையோடு அவை தொடங்க வேண்டும் என்ற பேரவை விதியை அரசியல் அமைப்பில் திருத்த முயல்வோம். நாடாளுமன்றத்தில் திருத்தம் கொண்டுவர பிற மாநில கட்சிகளோடு சேர்ந்து திமுக நடவடிக்கை எடுக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

10. உரையை வாசிக்காமல் ஆளுநர் சென்ற நிலையில், அதன் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்து வருகிறார்.

11. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு என கூறி சட்டமன்றத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.

12. இதற்கு இடையே ஆளுநர் ரவி தரப்பில் இதற்கு விளக்கம் கொடுக்கப்பட்டது. அதில், தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை எனக் கூறி சட்டமன்றத்தில் அதிமுகவினர் முழக்கமிட்டு, வெளிநடப்பு செய்தனர்.

13 . அரசு ஊழியர்களின் குறைகளை தீர்ப்பதற்கான அம்சங்கள் உரையில் இல்லை. தமிழக அரசுத் துறையில் கீழ்மட்ட ஊழியர்களிடையே கடும் அதிருப்தி நிலவுகிறது என்று ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

14. இந்தியாவின் தற்கொலை தலைநகராக தமிழ்நாடு கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் ஓராண்டில் 20 ஆயிரம் பேர் தற்கொலை செய்துள்ளனர். தினமும் 65 பேர் தற்கொலை செய்து வருகின்றனர் என்று ஆளுநர் மாளிகை தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

15. பல ஆயிரம் கோயில்களில் அறக்காவல் குழுக்கள் அமைக்கப்படவில்லை. சட்டமன்றத்தில் தேசிய கீதம் மீண்டும் அவமதிக்கப்பட்டுள்ளது என்று ஆளுநர் மாளிகை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

16. இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் போதை மருந்து விவகாரம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. போதை காரணமாக ஓராண்டில் 2 ஆயிரம் இளைஞர்கள் தற்கொலை செய்துள்ளனர். பள்ளி மாணவர்களிடையே போதைப் பழக்கம் அதிகரித்துள்ளது என்று மக்கள் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

17. ஆளுநர் உரையில் உண்மைக்கு முற்றிலும் புறம்பான தகவல்கள் இருந்தன. ரூ. 12 லட்சம் கோடி முதலீடுகள் வந்ததாக என்று கூறுவது தவறானது. முதலீடுகளை ஈர்ப்பதில் 4 ஆம் இடத்தில் இருந்த தமிழ்நாடு இப்போது 6 ஆம் இடத்திற்குச் சென்றுவிட்டது. பெரும்பாலான ஒப்பந்தங்கள் காகிதங்கள் நிலையிலேயே உள்ளன. பெண்கள் பாதுகாப்பு புறக்கணிப்பு, பாலியல் சம்பவங்கள் 33 சதவீதம் அதிகமாகியுள்ளதாகவும் ஆளுநர் மாளிகை விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+