சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

போனை எல்லாம் வச்சுட்டு வாங்க! ஆர்டர் போட்ட அண்ணாமலை.. நாக்பூர் வரை போன புகார்.. கமலாலய யுத்தம்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் பாஜகவில் உட்கட்சி பூசல் நிலவி வரும் நிலையில் ஆர்எஸ்எஸ் தரப்பிற்கும் இது தொடர்பாக புகார்கள் சென்று இருப்பதாக கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு பாஜகவில் உட்கட்சி பூசல் உச்சம் தொட்டுள்ளது. மாண்டஸ் புயலை விட தீவிர புயலாக உட்கட்சி பூசல் பாஜகவில் மையம் கொண்டு உள்ளது.

இந்த உட்கட்சி மோதல் என்பதால் பாஜகவில் சீனியர்களுக்கும் - அண்ணாமலை ஆதரவாளர்களுக்கும் இடையில் நடக்கும் மோதல் ஆகும். இந்த மோதலுக்கு அண்ணாமலை தரப்பு ஒரு காரணத்தையும், சீனியர்கள் தரப்பு ஒரு காரணத்தையும் சொல்லி வருகிறது.

இருவரும் சொல்லும் காரணங்களை பார்க்கலாம்!

மிகப்பெரிய சக்தியாக மாறிவரும் இந்தியா! அமெரிக்காவின் நட்பு நாடாக இருக்காது.. வெள்ளை மாளிகை ‛மெசேஜ்’ மிகப்பெரிய சக்தியாக மாறிவரும் இந்தியா! அமெரிக்காவின் நட்பு நாடாக இருக்காது.. வெள்ளை மாளிகை ‛மெசேஜ்’

சீனியர்கள் காரணம்

சீனியர்கள் காரணம்

பாஜகவில் சீனியர்கள் சொல்லும் காரணம் என்று பார்த்தால், அண்ணாமலை சீனியர்களை ஒத்துக்கிவிட்டார் என்பதுதான். எல் முருகன் இருந்தவரை கட்சியில் சீனியர்களுக்கு மதிப்பு இருந்தது. சீனியர்கள் சொன்னதை எல் முருகன் காது கொடுத்து கேட்பார். ஆனால் தற்போது சீனியர்கள் குரலை அண்ணாமலை கேட்பதே இல்லை. அதெல்லாம் போக எங்களுக்கே எதிராக அவர் முடிவுகளை எடுக்கிறார். சீனியர்கள் கேடி ராகவன், காயத்ரி ரகுராம் நேர்ந்தது எல்லாம் அநீதி. அவர்கள் பாஜகவிற்காக இத்தனை வருடங்களாக மிக கடுமையாக உழைத்தவர்கள். ஆனால் அவர்களை அண்ணாமலை அவமானப்படுத்திவிட்டார்.

வானதி

வானதி

எல் முருகன் இருந்த போதும் சீனியர்களுடன் உரசல் இருந்தது. ஆனால் இந்த அளவிற்கு அவர் நடந்து கொள்ளவில்லை. ஆனால் இப்போது எல் முருகனையே அண்ணாமலை மதிப்பது இல்லை. சீனியர்களை சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்கிறார்கள். அண்ணாமலைக்கு ஆதரவாக செயல்படும் ஐடி விங் குழு ஒன்று சீனியர் பாஜக தலைவர்களை விமர்சனம் செய்கிறது. போட்டி, மோதல் இருப்பது எல்லாம் இருக்கட்டும். ஆனால் அதற்காக அண்ணாமலை சொந்த கட்சிக்கு உள்ளேயே குழி தோண்ட நினைப்பது சரிதானா என சீனியர்கள் புலம்ப தொடங்கி உள்ளனர். சமீபத்தில் காயத்ரி நீக்கப்பட்ட விவகாரம் இந்த கோப நெருப்பில் எண்ணெய் அள்ளி ஊற்றி உள்ளது. அதோடு கோவையில் வானதி தலைமையில் நடக்க இருந்த போராட்டத்திற்கும் அண்ணாமலை முட்டுக்கட்டை போட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அண்ணாமலை தரப்பின் காரணம்

அண்ணாமலை தரப்பின் காரணம்

ஆனால் அண்ணாமலைக்கு நெருக்கமான தரப்போ.. அண்ணாமலை எங்கே பாஜக சீனியர்களை அவமதித்தார். அவர் எல்லோரிடமும் மரியாதையாகவே நடக்கிறார். கட்சி விதிகளை காயத்ரி மீறினார். பொது இடத்தில் சர்ச்சையாக பேசினார். அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. வேறு யார் மீது கட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்தான் கட்சித் தலைவர். டெல்லி தலைமை எடுத்த முடிவு அது. இதை மதிக்க வேண்டும். அண்ணாமலையை தலைவராக ஏற்றுக்கொண்டு சரியாக நடக்க வேண்டும். இல்லையென்றால் அவர் நடவடிக்கை எடுக்கத்தான் செய்வார். டெல்லி தலைமை சொல்லும் வழிகாட்டுதல்களைத்தான் அவர் செய்கிறார். இதில் என்ன தவறு இருக்க முடியும்? அவரின் செயல்பாட்டில் டெல்லியும் திருப்தியாக இருக்கிறது. அதனால்தான் மோடியே தமிழ்நாடு வந்த போது தனது காரில் அண்ணாமலையை கொண்டு சென்றார். வேறு மாநிலத்தில் இப்படி நடத்து இருக்குமா? வேறு மாநில தலைவருக்கு இந்த மரியாதையை மோடி கொடுத்து இருப்பாரா? என்று அண்ணாமலை தரப்பு நியாயத்தை தெரிவிக்கின்றன.

கேசவ விநாயகம்

கேசவ விநாயகம்

தமிழ்நாட்டில் தற்போது கேசவ விநாயகம் - அண்ணாமலை இடையே கடும் மோதல் நிலவி வருவதாக கூறப்படுகிறது. இதை பற்றி திருச்சி சூர்யா நேரடியாக விமர்சனங்களை அடுக்கி உள்ளார்.

எல் முருகன், கேசவ விநாயகம் ஆகியோரின் தலையீடு இல்லாமல் அண்ணாமலை சிறப்பாக செயல்படுவார். இவர்கள் நான் இல்லாமல் இனி சந்தோசமாக இருப்பார்கள் என்று திருச்சி சூர்யா, எல் முருகன், கேசவ விநாயகம் மீது புகார்களை அடுக்கி உள்ளார். கேசவ விநாயகம் தமிழ்நாட்டில் பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பொறுப்பில் இருக்கிறார் கேசவ விநாயகம். பாஜகவில் மாநில மற்றும் தேசிய அளவில் அமைப்பு பொதுச்செயலாளர் பொறுப்பில் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுவது வழக்கம். அப்படித்தான் தமிழக பாஜகவின் அமைப்பு பொதுச்செயலாளர் ஆக கேசவ விநாயகம் இருக்கிறார்.

பாஜக அதிகாரம்

பாஜக அதிகாரம்

பாஜகவில் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கேசவ விநாயகத்திற்கும் இருக்கிறது. இந்த நிலையில்தான் கேசவ விநாயகம் - அண்ணாமலை இடையே பல நியமனங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே தற்போது கேசவ விநாயகத்திற்கு எதிராக அண்ணாமலை களமிறங்கி இருப்பதாக கூறப்படுகிறது. கேசவ விநாயகம் ஆர்எஸ்எஸ் நிர்வாகி என்பதால், இந்த மோதல் பற்றி ஆர்எஸ்எஸ் தலைமைக்கும் புகார் சென்றுள்ளதாம். இன்னொரு பக்கம் அண்ணாமலை ஆதரவாளர்கள் சிலரும் அவர் தரப்பு நியாயத்தை ஆர்எஸ்எஸ் தரப்பிடம் தெரிவித்து உள்ளதாம். இந்த மோதல்களுக்கு இடையில்தான் அண்ணாமலை நேற்று கமலாலயத்தில் கூட்டம் நடத்தினார். எல்லா நிர்வாகிகளின் போன்களும் வாங்கி வெளியிலேயே வைக்கப்பட்டு மிகவும் சீக்ரெட்டாக இந்த மீட்டிங் நடத்து உள்ளது. பாஜக நிர்வாகிகள் பலர் இதில் கலந்து கொண்டு உள்ளனர். பாஜக உட்கட்சி மோதல் தொடங்கி லோக்சபா தேர்தல் வரை பல விஷயங்கள் பற்றி இதில் ஆலோசனை செய்யப்பட்டு உள்ளது. உட்கட்சி பூசல், லோக்சபா தேர்தல், பூத் கமிட்டி உருவாக்கம், கூட்டணி அமைப்பது போன்ற விவரங்கள் குறித்து அண்ணாமலை ஆலோசனை செய்து உள்ளார். இந்த மீட்டிங்கில் கட்சிக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். யாராக இருந்தாலும் கட்சிக்கு கட்டுப்பட வேண்டும் என்று அண்ணாமலை கூறி இருக்கிறாராம்.

English summary
What happened in Annamalai led BJP meeting yesterday? Is Nagpur focusing on Tamil Nadu BJP?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X