எடப்பாடி வீட்டில் குவிந்த "தலைகள்".. சட்டென வந்த தீர்ப்பு.. சிவந்த முகம்! பறந்த போன்! என்ன நடந்தது?
சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பாக இன்று சென்னை உயர் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி தரப்பை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
Recommended Video
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி விதியை மீறி நடத்தப்பட்டதாக ஓ பன்னீர்செல்வம் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கில்தான் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது. ஜூன் 23ம் தேதிக்கு முன் இருந்த நிலை தொடர வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி
இந்த தீர்ப்பு வருவதற்கு முன்பே எடப்பாடி பழனிசாமி வீட்டில் நிர்வாகிகள் குவிந்து இருந்தனர். இன்று காலையே வரிசையாக எடப்பாடி ஆதரவு நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடியின் கிரீன் வேஸ் வீட்டிற்கு சென்றார்கள். தீர்ப்பு எப்படி வரும்.. தீர்ப்பில் சாதகமாக முடிவு வந்தால் என்ன செய்வது.. எதிராக தீர்ப்பு வந்தால் என்ன செய்வது என்று ஆலோசனைகளை செய்தனர்.

தீர்ப்பு
இந்த நேரத்தில்தான் 10.30க்கு வர வேண்டிய தீர்ப்பு 11.30 மணிக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு காரணம் இருக்கிறது. தீர்ப்பு முழுமையாக அச்சடிக்கப்பட்டுவிட்டது. இருந்தாலும் அதன் சாப்ட் காப்பியில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டி இருந்தது. இந்த தீர்ப்பு நிறைய பக்கங்கள் இருந்துள்ளன. இதனால் முழுமையாக திருத்த மாலை வரை ஆகும். எனவே தீர்ப்பின் முக்கிய சாராம்சங்களை மட்டும் தனியாக பிரிண்ட் எடுக்க முடிவுசெய்யப்பட்டது .

என்ன நடந்தது ?
இதை சரி பார்த்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதால் 11.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. இந்த தாமதம் காரணமாக எடப்பாடி வீட்டில் ஆட்கள் அதிகம்கூடினார்கள். முன்னாள் அமைச்சர்கள் பலரும் அவரின் வீட்டில் அதிகம் கூடினார்கள். இந்த நிலையில்தான் எடப்பாடி வீட்டிற்கு உள்ளே, வெளியே டிவி மற்றும் போனில் நிர்வாகிகள் தீர்ப்பை பார்த்தனர். தீர்ப்பு வந்ததும் அங்கே கனத்த அமைதிநிலவியது. பலரின் முகம் தொய்வாக காணப்பட்டது.

போன் கால்
எடப்பாடி தரப்பு மட்டும் தங்கள் வழக்கறிஞர் குழுவிற்கு போன் செய்து தீர்ப்பு விவரங்களை கேட்டனர். முழு தீர்ப்பு மாலைதான் வரும் என்பதால் இந்த தீர்ப்பின் ஒரு சம்மரியை மட்டும் போனில் கேட்டுக்கொண்டனர். இங்கே அமைதியாக சூழ்நிலை நிலவ இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வம் வீட்டில் வெடிவெடித்து அதிமுகவினர் கொண்டாடினர். தீர்ப்பு சாதகமாக வரும் என்று முன்பே நம்பிக்கையாக இருந்த ஓ பன்னீர்செல்வம் தரப்பு தீர்ப்பு வந்ததும் அதை சிறப்பாக கொண்டாடி வருகிறது.












Click it and Unblock the Notifications