என்ன இப்படி ஆகிடுச்சே? அதிகாலையில் எடப்பாடி வீட்டில் நடந்தது என்ன? காரில் சென்ற 3 பேர்! பரபர பின்னணி
சென்னை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிகாலையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
Recommended Video
அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று சென்னை வானகரத்தில் நடக்க உள்ளது. பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
ஆனால் ஒற்றை தலைமை குறித்த தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட முடியாது. பொதுக்குழுவை நடத்த நேற்று உயர் நீதிமன்றம் அனுமதி அளித்த போதிலும் ஒற்றை தலைமை தீர்மானம் நிறைவேற்ற தடை விதித்துள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.

பொதுக்குழு
இந்த நிலையில் பொதுக்குழுவிற்கு முன்பாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிகாலையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ ஆகியோர் ஆலோசனை செய்தனர். அதிகாலை 5.30 மணி அளவில் இந்த ஆலோசனை நடைபெற்றது. அதிமுக பொதுக்குழுவில் ஒற்றை தலைமை தீர்மானம் நிறைவேற்ற சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது

அதிமுக பொதுச்செயலாளர்
அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆக எடப்பாடி பழனிச்சாமி தீவிரமாக முயன்று வந்தார். இன்று அவருக்கு ஆதரவாக தனி தீர்மானம் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அதன் மூலம் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உயர் நீதிமன்றம் தடை விதித்த காரணத்தால் பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக தனித்தீர்மானம் நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற தடை
உயர் நீதிமன்ற தடையை தொடர்ந்து எடப்பாடி வீட்டில் அதிகாலையில் தீவிரமாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ ஆகியோர் தனி தனியாக காரில் சென்று, எடப்பாடியுடன் சுமார் 1 மணி நேரம் ஆலோசனை செய்தனர். கோர்ட் வழக்கு குறித்தும், தீர்ப்பில் இருக்கும் அம்சங்கள் குறித்தும் இதில் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. இப்படி ஆகிடுச்சே.. மீட்டிங்கில் என்ன செய்வது என்று அங்கு இருந்து முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடியிடம் கேட்டு உள்ளனர்.

கோர்ட் உத்தரவு
இதற்கு, கோர்ட் உத்தரவு காரணமாக ஒற்றை தலைமை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற முடியாது. ஆனால் ஒற்றை தலைமை பற்றி விவாதிக்க முடியும். அதை பற்றி பேசுவோம்.. நம்முடைய பலத்தை ஒற்றுமையாக காட்டுவோம். இன்று அதை பற்றி விவாதிப்போம். பொதுக்குழு உறுப்பினர்கள் ஒன்றாக குரல் கொடுப்போம், என்று எடப்பாடி பழனிசாமி பதில் அளித்ததாக தெரிகிறது. இந்த தீர்ப்பு எடப்பாடிக்கு எதிராக இருந்தாலும் கூட.. இன்று ஒற்றை தலைமை பற்றிய பொது விவாதம், தீர்மானம் இன்றி நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications