3 கோரிக்கைக்கு நடுவே முக்கிய அட்வைஸ்! ஆளுநர்-முதல்வர் சந்திப்பில் என்ன நடந்தது? தமிழக அரசு விளக்கம்
சென்னை: உச்சநீதிமன்ற அறிவுரையின்படி இன்று ஆளுநர் ஆர்என் ரவியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து சுமார் 40 நிமிடங்கள் வரை பேசினார். இந்த சந்திப்பின்போது என்ன நடந்தது? என்பது பற்றி தமிழ்நாடு அரசு முக்கிய விளக்கத்தை அளித்துள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்என் ரவி சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும் மசோதா மற்றும் கோப்புகளுக்கு அனுமதி தராமல் கிடப்பில் போட்டுள்ளார். விரைந்து ஒப்புதல் தர வேண்டும் என அறிவுரை வழங்கும்படி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டது. ஆளுநர் ஆர்என் ரவி மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் இருப்பதற்கு நீதிமன்றம் வருத்தம் தெரிவித்தது. மேலும் 2வது முறையாக மசோதா அனுப்பி வைக்கப்படும்போது ஒப்புதல் வழங்க வேண்டும் என தெரிவித்தது.
மேலும் முதல்வர் ஸ்டாலின்-ஆளுநர் ஆர்என் ரவி ஆகியோர் மசோதா தொடர்பாக ஒன்றாக பேசி அமர்ந்து தீர்வு காண உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இதையடுத்து முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அழைப்பை நேற்று இன்று முதல்வர் ஸ்டாலின் சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்என் ரவியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது தமிழக அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட மசேதா மற்றும் கோப்புகளுக்கு ஒப்புதல் வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் தான் ஆளுநர் ஆர்என் ரவி-முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு குறித்து தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு ஆளுநர் தமிழ்நாடு அரசின் சார்பில் அனுப்பப்பட்ட மசோதாக்கள் மற்றும் கோப்புகளுக்கு நீண்ட காலமாக ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருப்பது தொடர்பாக ஆளுநருக்கு உரிய அறிவுரைகள் வழங்க வேண்டி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது. அவ்வழக்கில் ஆளுநர் நிலுவையில் உள்ள மசோதாக்கள் மற்றும் கோப்புகள் தொடர்பாக முதல்வரோடு ஆலோசனை நடத்திட வேண்டுமென்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. அதனடிப்படையில் ஆளுநர் முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்திருந்தார்கள்.
இந்த அழைப்பை ஏற்று முதல்வர் இன்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் உயர்கல்வித்துறை ராஜகண்ணப்பன், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆகியோருடன் ஆளுநரை சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது பலமாதங்களாக ஆளுநரிடம் நிலுவையில் இருக்கும் பல்வேறு கோப்புகளுக்கு விரைந்து ஒப்புதல் அளித்து அரசுக்கு அனுப்பி வைத்திட வேண்டுமென்று முதலமைச்சர் வலியுறுத்தினார். அதேபோன் தமிழ்நாடு சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைத்த 10 முக்கியமான மசோதாக்களை அரசியல் சாசனத்ில் எங்கும் குறிப்பிடாத வகையல் தேவையின்றி குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்துள்ளதை திரும்ப பெற்று, அவற்றிற்கும் விரைந்து ஒப்புதல் அளித்து அரசுக்க அனுப்பி வைத்திட வேண்டும் என முதலமைச்சர் கேட்டு கொண்டார்.
ஊழல் வழக்குகளில் சம்மந்தப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கேசி வீரமணி, எம்ஆர் விஜயபாஸ்கர் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர அனுமதி கோரி அனுப்பப்பட்ட கோப்புகளும் பலமாதங்களாக ஆளுநர் வசம் நிலுவையில் உள்ளன. அவற்றிக்கும் விரைந்து ஒப்புதல் வழங்க இந்த சந்திப்பின்போது வலியுறுத்தப்பட்டது. இதில் கேசி வீரமணி தொடர்பான கோப்பினை 15 மாதங்களுக்கு மேலாகவும், எம்ஆர் விஜயபாஸ்கர் தொடர்பான கோப்பினை 7 மாதங்களுக்கு மேலாகவும் ஆளுநர் நிலுவையில் வைத்திருப்பது சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள உறுப்பினர் பதவிகளுக்கு உறுப்பினர்களை நியமனம் செய்வது தொடர்பான கோப்பும், நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது குறித்தும் தெரிவிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்க கேட்டு கொள்ளப்பட்டது. பொதுவாக அரசியல் சாசன விதிகளுக்குட்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டுமென்றும், அப்போது தான் மாநில மக்களின் நலனுக்கும், நிர்வாகத்திற்கும் பயனளிக்ககூடிய வகையில் ஆளுநர் செயல்பாடு அமையும் என்றும் முதல்வர் எடுத்துரைத்தார்.
ஆளுநர் நிலுவையில் உள்ள மசோதாக்கள் மற்றும் கோப்புகள் தொடர்பாக அவர் கோரிய அனைத்து விவரங்களும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் மற்றும் அலுவலர்களால் ஆளுநருக்கு நேரிலும், எழுத்துப்பூர்வமாகவும் அளிக்கப்பட்டுள்ள நிலையில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துகளை மனதில் கொண்டு நிலுவை மசோதா மற்றும் கோப்புகளுக்கு உரிய காலத்தில் ஒப்புதல் வழங்கிட வேண்டுமென்றும், வருங்காலங்களில் இதுபோன்ற தாமதங்களை ஆளுநர் தவிர்த்திட வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டு கொண்டார்.
இந்த ஆலோசனையின்போது அரசின் சார்பாக மேற்படி கருத்துகளை மதலமைச்சரும், அமைச்சர்களும், தலைமை செயலாளரும் விரிவாக எடுத்து கூறினர். முதலமைச்சர் சார்பில் ஆளுநருக்கு கடிதம் ன்றும் வழங்கப்பட்டது. இந்த கடித்ததில் அரசியல் சாசனத்தின்படி அமைக்கப்பட்டுள்ள அனைத்து உயர் அமைப்புகளின் மீதும் தான் மிக உயர்ந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருப்பதாகவும், அதோடு நிலுவையில் உள்ள மசோதாக்கள் மற்றும் கோப்புகள் குறித்து தெரிவித்தது, மாநில நிர்வாகம் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி அவற்றிற்கு விரைந்து ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தின் தான் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
-
"திமுகவின் பிரச்சார பீரங்கியாக இருந்த ஆளுநர் ரவியை மாத்திட்டாங்களே..” முதல்வர் ஸ்டாலின் கிண்டல்! -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications