10.20க்கு வந்த மெசேஜ்! என்னவெல்லாம் நடந்தது தெரியுமா? புழுங்கிய ஜெயக்குமார்.. வலுவாக நின்ற எடப்பாடி!
சென்னை: சிறையில் இருந்து பெயிலில் விடுதலை செய்யப்பட்ட ஜெயக்குமாரை நேற்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், எதிர்கட்சித் தலைவர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேரில் சந்தித்தனர். இந்த சந்திப்பிற்கு பின் பல்வேறு முக்கிய சம்பவங்கள் நடந்ததாக கூறப்படுகிறது.
பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று காலை விடுதலை செய்யப்பட்டார். இவருக்கு அதிமுக நிர்வாகிகள் புழல் சிறை வாசலில் மாபெரும் வரவேற்பு கொடுத்தனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது திமுக நிர்வாகியை அரைநிர்வாணமாக தாக்கிய வழக்கில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். அதேபோல் சாலை மறியல் மற்றும் நிலமோசடி வழக்கிலும் ஜெயக்குமார் தனி தனியாக கைது செய்யப்பட்டார்.

விடுதலை
இந்த வழக்குகளில் பெயில் கிடைத்த நிலையில் நேற்று முதல்நாள் ஜெயக்குமார் ரிலீஸ் செய்யப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் பெயில் கிடைத்த ஆவணம் புழல் சிறைக்கு மாலை 6 மணிக்கு பின்பே சென்றதால் நேற்றுதான் ஜெயக்குமார் விடுதலை செய்யப்பட்டார். மாலை 6 மணிக்கு மேல் கைதிகளை விடுதலை செய்ய கூடாது என்ற விதி உள்ளது. பெயில் கிடைத்த ஆவணங்கள் மாலை 6.45 மணிக்குதான் புழல் சிறைக்கு வந்து இருக்கிறது என்பதால் விடுதலையில் தாமதம் ஏற்பட்டது.

வருத்தம் இருந்தது
முன்னதாக ஜெயக்குமார் சிறையில் இருந்த போது எடப்பாடி பழனிசாமி அவரை சென்று தனியாக பார்த்தார். ஓ பன்னீர்செல்வம் இந்த சந்திப்பில் உடன் இருக்கவில்லை. அதன்பின் மீண்டும் ஓ பன்னீர்செல்வம் எடப்பாடி இல்லாமல் தனியாக சென்று ஜெயக்குமாரை சந்தித்துவிட்டு வந்தார். இந்த நிலையில் சிறையில் இருந்த போது ஜெயக்குமார் இதை பற்றியும் வருந்திக்கொண்டதாக தெரிகிறது. நமக்கு பெயில் கிடைக்கவில்லை. கட்சி இந்த நேரத்தில் ஒற்றுமையாக போராடாமல்.. அதிகார மோதலில் ஈடுபடுகிறார்கள். தலைவர்கள் எல்லாரும் ஒன்றாக வந்து பார்த்து இருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று வருந்தி இருக்கிறாராம் ஜெயக்குமார்.

போன் மெசேஜ்
இந்த தகவல் அப்போதே பரபரப்பாக பேசப்பட்டது. இதை தொடர்ந்து எடப்பாடி - ஓபிஎஸ் இருவரும் ஒன்றாக ஜெயக்குமாரை அவரின் வீட்டிற்கே சென்று சந்தித்துள்ளனர். அதன்படி நேற்று காலை ஒரு 10.20 மணி அளவில் ஜெயக்குமார் தரப்பிற்கு எடப்பாடி தரப்பிடம் இருந்து இதை பற்றிய மெசேஜ் சென்று இருக்கிறதாம். எடப்பாடி - ஓபிஎஸ் இருவரும் ஒன்றாக வந்து உங்களை பார்க்க போகிறார்கள் என்று தகவல் சென்று இருக்கிறதாம். அப்போதுதான் ஜெயக்குமார் வீட்டில் குளித்து முடித்துவிட்டு, சாப்பிட்ட பின்.. குடும்பத்தினரிடம் பேசியபடி இருந்திருக்கிறார்.

ஆறுதல் தெரிவித்தனர்
இதையடுத்து அங்கு காரில் ஒன்றாக வந்து இறங்கிய எடப்பாடி - ஓபிஎஸ் ஜெயக்குமாரை பார்த்து நலம் விசாரித்து இருக்கின்றனர். ஜெயக்குமார் மனைவி அங்கு மிகவும் உணர்ச்சிகரமாக இருந்ததாக கூறப்படுகிறது. என் புருஷனை ஜெயிலில் வச்சு டார்ச்சர் பண்ணி இருக்காங்க என்று அவர் குறைபட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. கட்சி உங்களுடன் இருக்கும் என்று எடப்பாடி - ஓபிஎஸ் ஆகியோர் ஜெயக்குமாருக்கும், அவரின் மனைவிக்கும் உறுதி அளித்துள்ளனர்.

சசிகலா
தேர்தல் முடிவுகள் பற்றி இதில் சில நிமிடங்கள் மூன்று பேரும் ஆலோசனை செய்துள்ளனர். ஜெயக்குமார் சோதனை நடத்திய வார்டு தொடங்கி கொங்கு மாவட்டங்களில் தோல்வி அடைந்ததை பற்றி எல்லாம் இவர்கள் பேசி உள்ளனர். தோல்வியை பயன்படுத்தி சசிகலா மீண்டும் உள்ளே வர முயன்றதும், ஓ ராஜா சசிகலா சந்திப்பு பற்றியும் கூட ஓபிஎஸ், எடப்பாடி ஆகியோர் ஜெயக்குமாரிடம் பேசி உள்ளனர். நாம் ஒற்றுமையா இருப்போம்.. சசிகலாவால் ஒன்றும் செய்ய முடியாது.

வலுவான மெசேஜ்
இதற்கு முன் இருந்தது போல ஒற்றுமையாக இருப்போம் என்று ஜெயக்குமார் கூறி இருக்கிறாராம். அதோடு ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் சேர்ந்து வந்து பார்த்தது சந்தோஷம். இதுவே வலுவான மெசேஜ்தான். நாம் ஒன்றாக இருப்பதற்கான அறிகுறி இது என்று ஜெயக்குமார் சந்தோஷமாக இருக்கிறாராம். ஜெயிலில் நடந்த சில கொடுமையான விஷயங்களை பற்றி ஜெயக்குமார்.. அங்கே என்னவெல்லாம் நடந்தது தெரியுமா என்று வருத்தத்தோடு கூறியதாக தெரிகிறது. அதற்கு எடப்பாடி.. வெளியே வந்துடீங்களா.. இனி எல்லாம் நல்லதா நடக்கும் என்று உறுதி அளித்துள்ளாராம்.

செய்திகளை பார்த்தார்
சில நிமிடங்கள் அங்கு ஒன்றாக அமர்ந்து பேசிய மூன்று பேரும் 5 மாநில தேர்தல் முடிவு பற்றியும் ஆலோசனை செய்துள்ளாராம். அதோடு ஜெயக்குமார் சிறையில் இருந்த போது வந்த சில செய்திகள் பற்றியும், மேயர் தேர்தலில் திமுகவிற்கும் கூட்டணி கட்சிகளுக்கும் இடையில் நடந்த மோதல் பற்றியும் இவர்கள் ஆலோசனை செய்து இருக்கிறார்களாம். ஜெயக்குமாரை இரண்டு டாப் தலைவர்கள் வந்து நேரடியாக சந்தித்தது அதிமுக அடிமட்ட தொண்டர்கள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications