காருக்குள் மலையாள நடிகைக்கு நடந்த கொடுமை! வலியை விழுங்கி வாழ்ந்த 9 ஆண்டுகள்.. ரீஎன்ட்ரி கிடைக்குமா
சென்னை: கடந்த 2017ல், முன்னணி மலையாள நடிகை, ஓடும் காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது பிரபல நடிகர் திலீப் சம்பந்தப்பட்ட ஒரு பெரிய சதியின் ஒரு பகுதி என கூறப்பட்டது. 9 வருடங்களுக்கு பிறகு, நடிகர் திலீப்பிற்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி நீதிமன்றம் இன்று அவரை விடுதலை செய்தது. இந்நிலையில், பத்திரிகையாளர் செய்யாறு பாலு, பாதிக்கப்பட்ட நடிகையை பற்றி பேட்டியில் பல விஷயங்களை கூறியிருக்கிறார்.
AramNaadu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு, "மலையாள சினிமா உலகில் ஒரு ஸ்டார் நடிகர் இந்த காரியத்தை செய்ததைத்தான் யாராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. கடைசிவரை அப்படி எதுவுமே தான் செய்யவில்லை என்று சாதித்தார்.

ஆனால், நடிகையின் வாக்குமூலமும், நடிகையுடன் இருந்த சிலரின் வாக்குமூலத்தை கேட்டு நீதிபதியே தலைகுனிந்தார்.. இந்தியாவில் இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை தந்தது.
காரில் கடத்தி பலாத்காரம்
காரில் நடிகையை கடத்தி, அலைக்கழிக்கப்பட்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார்.. நடிகை என்றால் என்ன வேண்டுமானாலும் செய்வதா? என்று அனைவருமே அப்போது கேள்வி எழுப்பினார்கள்.
"நான் சினிமாவில் இதுபோன்ற காட்சிகளில் நடித்திருக்கிறேன்.. ஆனால் அங்கே டைரக்டரின் வழிகாட்டுதலின் கீழ், உதவி இயக்குநர்கள், லைட் மேன்கள் போன்றோர் சூழ்ந்து இருப்பார்கள்.. அப்படி எடுக்கும்போது அது ஒரு காட்சியாக மட்டுமே தெரியும்.. ஆனால், எனக்கு நேர்ந்த இந்த நிஜ சம்பவம், சினிமா காட்சியைக் கடந்து, "ஒரு பயத்தை எனக்குள் தந்துவிட்டது. இதிலிருந்து வெளியே வர பல காலம் ஆகும்" என்று கூறியிருந்தார்.
நடிகை இந்த விஷயத்தை சொன்னதுமே, சில மூத்த நடிகைகள்தான் அவருக்கு ஆதரவாக குரல் தந்தனர்.. ஆனால் பல நடிகைகள் இதனை கண்டுக்காமலேயே விட்டுவிட்டனர். இதற்கு காரணம், இந்த சம்பவத்தில் வலுவான நடிகர் திலீப் பின்னணியில் இருந்ததாக அந்த நேரத்தில் சொல்லப்பட்டதுதான்.
மஞ்சு வாரியர், ரேவதி
நடிகையின் இந்த அதிர்ச்சி செய்தி கேட்டதுமே மஞ்சு வாரியர், ரேவதி உள்ளிட்டோரின் ஆதரவு அதிகமாகவே கிடைத்தது என்றாலும், தனக்காக ஏன் பெரும்பாலானோர் சப்போர்ட் செய்யவில்லை? மீடியா ஏன் பற்றி பேசவில்லை? என்ற வருத்தம் நடிகைக்கு நிறையவே இருந்தது.
நடிகையின் இந்த சம்பவத்துக்கு, தென்னிந்தியா முழுவதும் குரல் கொடுத்திருக்க வேண்டும்.. பொதுவாக நடிகைகளைப் பற்றி கிள்ளுக்கீரை மாதிரி நினைக்கிறார்கள்.. நடிகைகளுக்கும் ஒரு மனசு இருக்குது, அதில் ஒரு ஈரம் உள்ளது.. ஆனால், இப்போதுவரை சோஷியல் மீடியாவில் நடிகைகளை பற்றி தவறாகவே பேசப்படுகிறது..
கன்னடத்தில் வாய்ப்பு
எனினும், இந்த சம்பவத்துக்கு பிறகு அந்த நடிகை வெளியே வரவேயில்லை.. ஆனால், கன்னடத்தில் இருந்து நடிகைக்கு வாய்ப்புகள் தேடி வந்தன.. குறிப்பாக, ராஜ்குமார் குடும்பத்தினர் நடிகைக்கு அந்த நேரத்தில் பெரிய சப்போர்ட்டாக இருந்தனர்..
இந்த நேரத்தில் புனித் மரணத்தை நடிகையால் ஜீரணிக்கவே முடியவில்லை.. 2, 3 நாட்களாகவே சாப்பிடாமலேயே இருந்துள்ளார்.. மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரை "என்னுடைய உடன்பிறவா சகோதரர்" என்று புகழ்ந்து கூறியிருந்தார்..
விஜய்யுடன் இந்த நடிகை ஒரு படம் நடிப்பதாக இருந்தது.. ஆனால் தேதி அவரால் தர முடியவில்லை.. கமல், ரஜினியுடன் மட்டுமல்ல, மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.. இனி ரீஎன்ட்ரி தரும் வாய்ப்பு நடிகைக்கு கிடைக்கலாம்" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications