முதல் நாள் இப்படி ஒரு பதிவு போட்டிருக்கிறார்.. அடுத்த நாள் உயிரோடு இல்லை.. இப்படி ஒரு கனவு வருதா?
சென்னை : கனவில் இறந்தவர்கள் வந்தாலே அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் போகிறது.. இதை எச்சரிக்கையாக நினைப்பதா அல்லது வேறு ஏதாவது அறிகுறியா என்று போஸ்ட் போட்டவர் அடுத்த நாளில் அவர் உயிருடன் இல்லை.. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
கனவுகள் குறித்து பல்வேறு வகையான நம்பிக்கைகள் நமது ஊரில் உள்ளது. பொதுவாகவே இறந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல செய்தி வரும் என்பார்கள். நீண்ட காலம் வாழ்வார்கள் என்றும் இறந்தவர்கள் கனவில் வந்து நம்மை ஆசிர்வதிப்பது போல கனவு கண்டால் நன்மைகள் அதிகரிக்கும் என்றும் நம்பிக்கை உள்ளது. இறந்து போனவர்கள் உங்கள் வீட்டில் தூங்குவதை போல கனவு கண்டால் பெரிய கண்டத்தில் இருந்து தப்பிப்பீர்கள் என்றும் நம்மூரில் சிலர் நம்புகிறார்கள்.

அதேநேரம் சவபெட்டியை கனவில் கண்டால் நமக்கு நெருங்கியவர்கள் இறக்க போகிறார்கள் என்று அர்த்தம் என்பார்கள். இதேபோல் இறந்தவர்கள் நம் கனவில் வந்து அழுவது போல கனவு கண்டால் நல்லதல்ல என்றும் பசுமாடு விரட்டுவதை போல் கனவில் கண்டால் உடல் நலம் கெட்டு நோய்கள் தாக்கும் என்றும் சொல்வார்கள். நோய் பிடித்ததாக கனவு கண்டால், நண்பர் ஏமாற்றுவார் என்றும் அடிபட்டு ஊனமாவதை போன்று கனவு கண்டால் சோகமான செய்தி வந்து சேரும் என்றும் சொல்வார்கள்.
தற்கொலை செய்து கொள்வதை போல் கனவு கண்டால் நொருங்கி வந்த ஆபத்துகள் நீங்கும் என்றும் சொல்வார்கள். இதேபோல் நண்பன் இறந்ததாக கனவு கண்டால் நண்பனின் ஆயுள் கூடும். இறந்தவர் கனவில் வந்தாலே இறந்தவருடன் பேசுவதைப் போன்று கனவு கண்டால் அதிகாரம் ,பதவி, லாபம் நிச்சயம் கூடி வரும் என்றும் சொல்வார்கள். இவை எல்லாம் அறிவியல் ரீதியாக உண்மை இல்லை. மூடநம்பிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கனவில் இறந்தவர்கள் வந்தாலே அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் போகிறது.. இதை எச்சரிக்கையாக நினைப்பதா அல்லது வேறு ஏதாவது அறிகுறியா என்று போஸ்ட் போட்டவர் அடுத்த நாளில் அவர் உயிருடன் இல்லை. இது தொடர்பாக நெல்லை செல்வின் என்பவர் ஒருவர் வெளியிட்ட பதிவினை பார்ப்போம்.
கரடிக்குட்டி என்பவர் வெளியிட்ட பதிவினை ஸ்கீரீன்ஷாட் எடுத்து அவரது படம் அதில் இணைக்கப்பட்டிந்தது. அந்த பதிவில், மனசு ஒரு மாதிரியாக இருக்க..நைட்டு எல்லாம் வெறும் கெட்ட கனவாகவே வருகிறது. காலையில வண்டியில் போகிறேன்.. எருமை மாடு இடிக்க வருது.. வேலை முடிந்து ஒரு விஷேசத்திற்கு போகிறேன்.. அங்கு ஒருவர் தண்ணியை போட்டுவிட்டு வந்து வண்டியில் மோதுகிறார். லாரியை கிராஸ் பண்ண இண்டிக்கேட்டர் போட்டு நின்னுக்கிட்டு இருக்கேன்..
லாரிக்காரன் ஒருத்தன் போனில் பேசிகிட்டு நேராக போக வேண்டியன், நான் இருக்கும் பக்கம் வந்து சுதாரிச்சு திருப்பிட்டு போகிறான். எல்லாத்தையும் கடந்து வீட்டுக்கு வந்தால் வீட்டில் உடம்பு சரியல்லாமல் இருக்காங்க.. கொஞ்ச நாளாகவே கவனிக்கிறேன்.. கனவுல இறந்தவங்க வந்தாலே இந்த மாதிரி ஆகிறது.. இல்லாட்டி உடம்புக்கு முடியாமல் போகிறது.. இதை எச்சரிக்கை என்று நினைக்கிறதா அல்லது வேறு ஏதாவது இருக்குமா? ' என்று பதிவிட்டிருந்தார். அடுத்த நாள் அவர் உயிருடன் இல்லை.. ஆறுமுகம் என்கிற அவர், காரியமங்கலத்தில் நடந்த விபத்தில் இறந்துவிட்டார். இந்த பதிவு தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications